Tuesday, November 15, 2022

வீட்டின் உள் அமைப்பை மாற்றுவது கட்டட விதிமீறல் ஆகுமா?

 வீட்டின் உள் அமைப்பை மாற்றுவது கட்டட விதிமீறல் ஆகுமா?

       நகர், ஊரமைப்பு சட்டப்படி கட்டடங்களுக்கான விதிகள் வகுக்கப்பட்டுள்ளனஇந்த விதிகளின் அடிப்படையிலேயே கட்டடங்கள் கட்டப்பட வேண்டும்.  49 ம் பிரிவு, 2 (பி) யின் கீழ் உள்ள தமிழ்நாடு நகர், ஊரமைப்பு சட்டம் 1971, எந்தவொரு நிலத்தையும், கட்டடத்தையும் அபிவிருத்தி பணிகளை துவங்குவதற்கு முன், திட்ட அனுமதி பெற வேண்டும்.

        இதில், ஒவ்வொரு கட்டடத்தின் மொத்த அளவு, அதற்கான நிலத்தில் எவ்வளவு இருக்க வேண்டும் என்பது தொடர்பான அடிப்படை விதிகள் கட்டாயமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்இந்த விதிகளின் அடிப்படையிலேயே, கட்டடத்தின் மொத்த அமைப்புகளும் இருக்க வேண்டும்.





         புதிதாக வீடு கட்டுவோர், இதற்கான வரைபடத்தை விதிகளுக்கு உட்பட்டு, கட்டட வடிவமைப்பாளர் வாயிலாக தயாரித்து, உரிய அரசுத் துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும்.

         அங்கு, அரசு அதிகாரிகள், விதிகளின் அடிப்படையில், அந்த கட்டட வரைபடம் உள்ளதா என்று பார்பர்இதில், கட்டடத்தின் உள்பக்கம், வெளிப்பக்கம் ஆகியவற்றில் ஒவ்வொரு பகுதியும் விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா என்று ஆராய்வர்வரைபடத்தில் கோடுகளாக குறிப்பிடப்பட்ட வடிவமைப்புகள் சரியாக இருந்தால் மட்டுமே திட்ட அனுமதி வழங்கப்படும்இந்த அனுமதியின் அடிப்படையிலேயே கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

          இதில், அனுமதிக்கப்பட்ட வரைபடத்தின் அடிப்படையிலேயே கட்டுமான பணிகள் இருக்கிறதா என்று அரசு துறை அதிகாரிகள் ஆராய்வர்.

          இதில், கட்டி முடிக்கப்பட்டு குடியேறும் நிலையில், வரைபடத்துக்கு மாறாக ஏதாவது மாறுதல் செய்வதும் விதிமீறலாகவே கருதப்படும்.

            உதாரணமாக, வீட்டுக்குள் சமையலறையை எவ்வித மாறுதலும் இன்றி, வேறு தேவைகளுக்கு மாற்றுவது தவறு இல்லைஆனால், சமயலறைக்கும், படுக்கை அரைக்கும் நடுவில் உள்ள சுவரை இடித்து, ஒரே அறையாக மாற்றும் நிலையில், அது விதிமீறலாக கருதப்படும்.

             இது போன்ற மாறுதல்கள் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அது குறித்து திட்ட அனுமதி அளித்த அரசுத் துறைக்கு தெரிவித்து, அனுமதி பெறுவது நல்லது.

              இந்த மாறுதல்களால் அந்த கட்டடத்தில் என்னவிதமாக தாக்கம் ஏற்படும் என்பதை, கட்டட அமைப்பியல் ரீதியாக அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்அறை நிலையில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள், கட்டடத்தின் ஒட்டு மொத்த சுமை தாங்கும் திறனை பாதிக்க வாய்ப்புள்ளது.

              எனவே, உரிய அரசு அனுமதி, கட்டட அமைப்பியல் பொறியாளர் வழிகாட்டுதல்கள் இன்றி, உட்புற மாற்றங்களை செய்யாதீர் என்கின்றனர், கட்டுமான வல்லுனர்கள்.  

நன்றி : தினமலர் கனவு இல்லம்

No comments:

Post a Comment

மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு

  மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு 'சென்னை பெருநகர் பகுதிக்கான மூன்றாவது முழுமை திட்டத்துக்காக, 28 தலைப்ப...