அசல் தாய்ப்பத்திரம் வாங்க மறந்தால் ஏற்படும் சிக்கல்கள் என்ன?
ஒரு நபரிடம் அல்லது நிறுவனத்திடம் இருந்து வீடு, மனை வாங்குவோர், அந்த சொத்து அவர்களிடம் எப்படி வந்தது என்பதை அறிய தாய்ப்பத்திரம் உதவும். பெரும்பாலான சமயங்களில், சொத்து நம் பெயருக்கு மாற்றப்படுவதற்காக எழுதப்படும் கிரயப்பத்திரம் இருந்தால் போதும் என்று மக்கள் நினைக்கின்றனர்.
இதில் பலரும், சொத்து வாங்குவதற்கான ஆய்வுகளில் தாய்ப்பத்திர நகல் வாங்கி வழக்கறிஞர் உதவியுடன் சரி பார்க்கின்றனர். அதே
சமயத்தில் கிரயப்பத்திரம் பதிவு செய்த பின், அமைதியாகிவிடுகின்றனர்.
இவ்வாறு பத்திரப்பதிவு முடியும் நிலையில், தாய்ப்பத்திரத்தில் அசல் பிரதியை வாங்குவது அவசியம். இதை
பலரும் கவனம் செலுத்தாமல் விட்டுவிடுகின்றனர்.
அசல் கிரயப்பத்திரம் தான் நம் கையில் இருக்கிறதே என்று, தாய்ப்பத்திரத்தை அலட்சியப்படுத்தாதீர். பத்திரப்பதிவு முடிந்து அசல் கிரயப்பத்திரம் இருந்தாலும் அதை வைத்து, வங்கியில் கடன் பெறுவது, பட்டா மாறுதல் போன்ற பணிகளுக்கு சென்றால் சிக்கல் ஏற்படும். குறிப்பாக, கிரயப் பத்திரத்தில் உங்கள் பெயரில் இருக்கும் இந்த குறிப்பிட்ட சொத்து விற்றவர் பெயருக்கு எப்படி வந்தது என்பதற்கான ஆதாரம் தாய்ப்பத்திரமாகும். சொத்து உரிமையாளர் தவறான எண்ணம் உடையவராக இருந்தால், பத்திரப்பதிவுக்கு பின், தன்னிடம் உள்ள தாய்ப்பத்திரத்தை வைத்து வேறு நபருக்கும் விற்பனை செய்ய முடியும்.
பத்திரப்பதிவு அலுவலகத்தில் வில்லங்க விவகாரத்தை அமைதியாக்கிவிட்டு இது போன்ற முறைகேடுகளில் சொத்து விற்றவர் ஈடுபடலாம். தாய்ப்பத்திரத்தின்
அவசியத்தை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
ஒரு சொத்தை அதன் உரிமையாளரிடம் இருந்து நேரடியாக வாங்கும்போது தாய்ப்பத்திரத்தை கேட்டு பெறலாம். ஆனால்,
ஒரே நிலத்தில் ஏராளமான வீடுகள், மனைகள் விற்கப்படும் போது, அசல் தாய்ப்பத்திரத்தை பெற முடிவதில்லை.
இது போன்ற நிலையில், வீடு, மனை வாங்கியவர்களில் யாராவது ஒருவரிடம் அசல் தாய்ப்பத்திரம் கொடுக்கப்பட வேண்டும். இதில்,
விற்பனையாளர்கள் சில தந்திரங்களை கையாள்வது உண்டு.
அனைத்து, வீடுகளும், மனைகளும் விற்று முடிக்கும் நிலையில் தான் அசல் தாய்பத்திரத்தை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள்.
நன்றி : தினமலர் கனவு இல்லம்
No comments:
Post a Comment