செங்கல் சுவரில் ஏற்படும் ஈரப்பதம் கட்டடத்தின் தூண்களை பாதிக்கும்!
பொதுவாக கான்கிரீட் கட்டுமானங்களில் நீர்க்கசிவை தடுப்பதற்கான வழிமுறைகள் பின்பற்றப்படும். இதில், கட்டடத்தில் குளியல் அறை, சமையல் அறை போன்ற இடங்களில் தண்ணீர் பயன்பாடு அதிகமாக இருக்கும்.
இதை கருத்தில் வைத்து இந்த பகுதிகளில் நீர்க்கசிவு தடுப்புக்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். குறிப்பாக
கட்டுமான நிலையில், எந்தெந்த அறைகளில் தண்ணீரை எப்படி பயன்படுத்த போகிறோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
மேல் தள வீடுகளில் குளியல்
அறை, சமையல் அறைகளில் தண்ணீர் பயன்பாடு காரணமாக சுவர்களில் ஈரம் ஏற்படும். ஈரப்பதம்,
உள்ளே இறங்க வாய்ப்புள்ளது.
இது போன்ற ஈரப்பதம், அடுத்த சில மணி நேரங்களில் காய்ந்துவிடும் என்றுதான் பலரும் நினைக்கிறோம். இதில்,
சுவர்களின் மேற்பரப்பில் ஏற்படும் ஈரப்பதம் மெல்ல, பூச்சு கலவையை தாண்டி செங்கலில் இறங்க வாய்ப்புள்ளது.
இப்படி, செங்கல் சுவரில் ஏற்படும் ஈரப்பதம் படிப்படியாக காய்ந்துவிடுவதற்கான வாய்ப்பு உள்ளது. நீங்கள்
பயன்படுத்திய செங்கல், கலவை தரமானதாக இருந்தால் இதனால் பிரச்னை எதுவும் இல்லை. ஆனால்,
செங்கல் சுவரில் பரவும் ஈரப்பதம், தூண்கள், பீம்கள், தளம் ஆகிய பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கப்பட வேண்டும். சுவரில்
ஏற்படும் ஈரப்பதத்தால் அங்கு ஏற்படும் பாதிப்பை சரி செய்யலாம்.
அந்த ஈரப்பதம், ஆர்.சி.சி., கட்டுமானங்களுக்கு
பரவினால், கட்டடத்தின் உறுதிக்கு பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ளது. பெரும்பாலும்,
சுவரில் மட்டும் தானே ஈரப்பதம் ஏற்பட்டுள்ளது; இது வேறு இடங்களுக்கு பரவாது என்று அலட்சியமாக இருந்துவிடாதீர்கள்.
இந்த ஈரப்பதம்
சுவருடன் இருந்து விடுகிறதா அல்லது வேறு இடங்களுக்கு பரவுகிறதா என்று பார்க்க வேண்டும். தூண்கள்,
பீம்களுக்கு இந்த ஈரப்பதம் பரவாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.
நன்றி : தினமலர் கனவு இல்லம்
No comments:
Post a Comment