Tuesday, November 15, 2022

சொத்து வாங்குவோர் ஆள்மாறாட்ட நபர்களை அடையாளம் காண்பது எப்படி?

 சொத்து வாங்குவோர் ஆள்மாறாட்ட நபர்களை அடையாளம் காண்பது எப்படி?

        சொந்த வீடு வாங்குவோர், அதற்காக தேர்ந்தெடுக்கும் சொத்தின் உண்மை தன்மையை மிக துல்லியமாக சரி பார்க்க வேண்டியது அவசியமாகிறதுஇதில், வில்லங்கம் இல்லாத சொத்து என்பது தெளிவாக தெரிந்தாலும், விற்பவர் ஆள்மாறாட்டம் செய்கிறாரா என்பதையும் கவனிக்க வேண்டும்.

          வீடு, மனை விற்பனையில் மோசடிகளை தடுக்க பதிவுத்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும், மக்கள் இந்த வழிமுறைகளை எப்படி பயன்படுத்துகின்றனர் என்பது மிக முக்கியம்குறிப்பாக, போலி ஆவண மோசடி மிகுந்த அபாயகரமானதாக உள்ளது.





          இதற்கு அடுத்தபடியாக, ஆள்மாறாட்டம் வாயிலாக சொத்து விற்பனையில் மோசடி செய்வது முக்கியத்துவம் பெறுகிறதுஉதாரணமாக, கந்தசாமி என்ற, 40 வயது நபரின் பெயரில் உள்ள சொத்தை, அதே பெயரில் வேறு ஒரு நபரை பயன்படுத்தி விற்பதே ஆள் மாறாட்டம்.

             இதில் மோசடியாளர்கள் மிக துல்லியமாக செயல்படுவது பல்வேறு வழக்கு விசாரணைகள் வாயிலாக தெரியவந்துள்ளதுகுறிப்பாக, கந்தசாமி என்ற நபர் இறந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து போயிருக்கலாம்அவரது வாரிசுகள் அந்த சொத்துக்கு உரிமையாளர்களாகியிருப்பர்.

          ஆனால், இதில் வேறு நபர்கள் சிலர், கந்தசாமி என்ற பெயருடைய அதே வயதில் இருக்கும் நபரை பயன்படுத்தி, சொத்து விற்பனையில் இறங்குவர்இதில், விற்பனைக்காக அழைத்து வரப்படும் கந்தசாமியின் உண்மை தன்மையை அறிய அடையாள ஆவணங்களை பார்ப்போம்.

           அவரும் கந்தசாமி என்பதால், புகைப்பட அடையாள அட்டை இருக்கும்அதுவும், அந்த சொத்து, 30 ஆண்டுகளுக்கு முன் கந்தசாமி பெயருக்கு வந்தது என்பதால் ஆவணத்தில் புகைப்படமும் இருக்காது.

           இத்தகைய சூழலில், மிக கவனமாக செயல்படும் நபர்கள் கூட போலி நபரை உண்மையான கந்தசாமி என்று நம்பிவிட வாய்ப்புள்ளதுஇதில், சொத்து விற்பவரை அவரது வீட்டிற்கு சென்று சந்திப்பது, அதற்கான முகவரி ஆதாரங்களை சரி பார்ப்பது வாயிலாக மோசடியில் இருந்து தப்பிக்கலாம்.

              சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், இறந்தவர் பெயரில் போலி நபரை பயன்படுத்தி சொத்து விற்பனையில் மோசடிகள் நடக்கின்றனஅப்பாவி மக்கள் இது போன்ற சொத்துக்களை வாங்கி வழக்கு விசாரணை என அலைந்து கொண்டிருக்கின்றனர்.

                 எனவே, சொத்து வாங்குவோர், விற்பவர் குறித்த உண்மை தன்மை விஷயங்களை சரிபார்ப்பதில் மிக மிக துல்லிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

வீட்டின் உள் அமைப்பை மாற்றுவது கட்டட விதிமீறல் ஆகுமா?

 வீட்டின் உள் அமைப்பை மாற்றுவது கட்டட விதிமீறல் ஆகுமா?

       நகர், ஊரமைப்பு சட்டப்படி கட்டடங்களுக்கான விதிகள் வகுக்கப்பட்டுள்ளனஇந்த விதிகளின் அடிப்படையிலேயே கட்டடங்கள் கட்டப்பட வேண்டும்.  49 ம் பிரிவு, 2 (பி) யின் கீழ் உள்ள தமிழ்நாடு நகர், ஊரமைப்பு சட்டம் 1971, எந்தவொரு நிலத்தையும், கட்டடத்தையும் அபிவிருத்தி பணிகளை துவங்குவதற்கு முன், திட்ட அனுமதி பெற வேண்டும்.

        இதில், ஒவ்வொரு கட்டடத்தின் மொத்த அளவு, அதற்கான நிலத்தில் எவ்வளவு இருக்க வேண்டும் என்பது தொடர்பான அடிப்படை விதிகள் கட்டாயமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்இந்த விதிகளின் அடிப்படையிலேயே, கட்டடத்தின் மொத்த அமைப்புகளும் இருக்க வேண்டும்.





         புதிதாக வீடு கட்டுவோர், இதற்கான வரைபடத்தை விதிகளுக்கு உட்பட்டு, கட்டட வடிவமைப்பாளர் வாயிலாக தயாரித்து, உரிய அரசுத் துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும்.

         அங்கு, அரசு அதிகாரிகள், விதிகளின் அடிப்படையில், அந்த கட்டட வரைபடம் உள்ளதா என்று பார்பர்இதில், கட்டடத்தின் உள்பக்கம், வெளிப்பக்கம் ஆகியவற்றில் ஒவ்வொரு பகுதியும் விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா என்று ஆராய்வர்வரைபடத்தில் கோடுகளாக குறிப்பிடப்பட்ட வடிவமைப்புகள் சரியாக இருந்தால் மட்டுமே திட்ட அனுமதி வழங்கப்படும்இந்த அனுமதியின் அடிப்படையிலேயே கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

          இதில், அனுமதிக்கப்பட்ட வரைபடத்தின் அடிப்படையிலேயே கட்டுமான பணிகள் இருக்கிறதா என்று அரசு துறை அதிகாரிகள் ஆராய்வர்.

          இதில், கட்டி முடிக்கப்பட்டு குடியேறும் நிலையில், வரைபடத்துக்கு மாறாக ஏதாவது மாறுதல் செய்வதும் விதிமீறலாகவே கருதப்படும்.

            உதாரணமாக, வீட்டுக்குள் சமையலறையை எவ்வித மாறுதலும் இன்றி, வேறு தேவைகளுக்கு மாற்றுவது தவறு இல்லைஆனால், சமயலறைக்கும், படுக்கை அரைக்கும் நடுவில் உள்ள சுவரை இடித்து, ஒரே அறையாக மாற்றும் நிலையில், அது விதிமீறலாக கருதப்படும்.

             இது போன்ற மாறுதல்கள் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அது குறித்து திட்ட அனுமதி அளித்த அரசுத் துறைக்கு தெரிவித்து, அனுமதி பெறுவது நல்லது.

              இந்த மாறுதல்களால் அந்த கட்டடத்தில் என்னவிதமாக தாக்கம் ஏற்படும் என்பதை, கட்டட அமைப்பியல் ரீதியாக அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்அறை நிலையில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள், கட்டடத்தின் ஒட்டு மொத்த சுமை தாங்கும் திறனை பாதிக்க வாய்ப்புள்ளது.

              எனவே, உரிய அரசு அனுமதி, கட்டட அமைப்பியல் பொறியாளர் வழிகாட்டுதல்கள் இன்றி, உட்புற மாற்றங்களை செய்யாதீர் என்கின்றனர், கட்டுமான வல்லுனர்கள்.  

நன்றி : தினமலர் கனவு இல்லம்

Tuesday, November 1, 2022

அசல் தாய்ப்பத்திரம் வாங்க மறந்தால் ஏற்படும் சிக்கல்கள் என்ன?

 அசல்  தாய்ப்பத்திரம்  வாங்க மறந்தால் ஏற்படும் சிக்கல்கள் என்ன?

      ஒரு நபரிடம் அல்லது நிறுவனத்திடம் இருந்து வீடு, மனை வாங்குவோர், அந்த சொத்து அவர்களிடம் எப்படி வந்தது என்பதை அறிய தாய்ப்பத்திரம் உதவும்பெரும்பாலான சமயங்களில், சொத்து நம் பெயருக்கு மாற்றப்படுவதற்காக எழுதப்படும் கிரயப்பத்திரம் இருந்தால் போதும் என்று மக்கள் நினைக்கின்றனர்.

          இதில் பலரும், சொத்து வாங்குவதற்கான ஆய்வுகளில் தாய்ப்பத்திர நகல் வாங்கி வழக்கறிஞர் உதவியுடன் சரி பார்க்கின்றனர்அதே சமயத்தில் கிரயப்பத்திரம் பதிவு செய்த பின், அமைதியாகிவிடுகின்றனர்.

           இவ்வாறு பத்திரப்பதிவு முடியும் நிலையில், தாய்ப்பத்திரத்தில் அசல் பிரதியை வாங்குவது அவசியம்இதை பலரும் கவனம் செலுத்தாமல் விட்டுவிடுகின்றனர்.




           அசல் கிரயப்பத்திரம் தான் நம் கையில் இருக்கிறதே என்று, தாய்ப்பத்திரத்தை அலட்சியப்படுத்தாதீர்பத்திரப்பதிவு முடிந்து அசல் கிரயப்பத்திரம் இருந்தாலும் அதை வைத்து, வங்கியில் கடன் பெறுவது, பட்டா மாறுதல் போன்ற பணிகளுக்கு சென்றால் சிக்கல் ஏற்படும்குறிப்பாக, கிரயப் பத்திரத்தில் உங்கள் பெயரில் இருக்கும் இந்த குறிப்பிட்ட சொத்து விற்றவர் பெயருக்கு எப்படி வந்தது என்பதற்கான ஆதாரம் தாய்ப்பத்திரமாகும்சொத்து உரிமையாளர் தவறான எண்ணம் உடையவராக இருந்தால், பத்திரப்பதிவுக்கு பின், தன்னிடம் உள்ள தாய்ப்பத்திரத்தை வைத்து வேறு நபருக்கும் விற்பனை செய்ய முடியும்.

            பத்திரப்பதிவு அலுவலகத்தில் வில்லங்க விவகாரத்தை அமைதியாக்கிவிட்டு இது போன்ற முறைகேடுகளில் சொத்து விற்றவர் ஈடுபடலாம்தாய்ப்பத்திரத்தின் அவசியத்தை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

             ஒரு சொத்தை அதன் உரிமையாளரிடம் இருந்து நேரடியாக வாங்கும்போது தாய்ப்பத்திரத்தை கேட்டு பெறலாம்ஆனால், ஒரே நிலத்தில் ஏராளமான வீடுகள், மனைகள் விற்கப்படும் போது, அசல் தாய்ப்பத்திரத்தை பெற முடிவதில்லை.

              இது போன்ற நிலையில், வீடு, மனை வாங்கியவர்களில் யாராவது ஒருவரிடம் அசல் தாய்ப்பத்திரம் கொடுக்கப்பட வேண்டும்இதில், விற்பனையாளர்கள் சில தந்திரங்களை கையாள்வது உண்டு.

           அனைத்து, வீடுகளும், மனைகளும் விற்று முடிக்கும் நிலையில் தான் அசல் தாய்பத்திரத்தை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

செங்கல் சுவரில் ஏற்படும் ஈரப்பதம் கட்டடத்தின் தூண்களை பாதிக்கும்!

 செங்கல் சுவரில் ஏற்படும் ஈரப்பதம் கட்டடத்தின் தூண்களை பாதிக்கும்!

          பொதுவாக கான்கிரீட் கட்டுமானங்களில் நீர்க்கசிவை தடுப்பதற்கான வழிமுறைகள் பின்பற்றப்படும்இதில், கட்டடத்தில் குளியல் அறை, சமையல் அறை போன்ற இடங்களில் தண்ணீர் பயன்பாடு அதிகமாக இருக்கும்.

             இதை கருத்தில் வைத்து இந்த பகுதிகளில் நீர்க்கசிவு தடுப்புக்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும்குறிப்பாக கட்டுமான நிலையில், எந்தெந்த அறைகளில் தண்ணீரை எப்படி பயன்படுத்த போகிறோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

              மேல் தள வீடுகளில் குளியல் அறை, சமையல் அறைகளில் தண்ணீர் பயன்பாடு காரணமாக சுவர்களில் ஈரம் ஏற்படும்ஈரப்பதம், உள்ளே இறங்க வாய்ப்புள்ளது.




                இது போன்ற ஈரப்பதம், அடுத்த சில மணி நேரங்களில் காய்ந்துவிடும் என்றுதான் பலரும் நினைக்கிறோம்இதில், சுவர்களின் மேற்பரப்பில் ஏற்படும் ஈரப்பதம் மெல்ல, பூச்சு கலவையை தாண்டி செங்கலில் இறங்க வாய்ப்புள்ளது.

            இப்படி, செங்கல் சுவரில் ஏற்படும் ஈரப்பதம் படிப்படியாக காய்ந்துவிடுவதற்கான வாய்ப்பு உள்ளதுநீங்கள் பயன்படுத்திய செங்கல், கலவை தரமானதாக இருந்தால் இதனால் பிரச்னை எதுவும் இல்லைஆனால், செங்கல் சுவரில் பரவும் ஈரப்பதம், தூண்கள், பீம்கள், தளம் ஆகிய பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கப்பட வேண்டும்சுவரில் ஏற்படும் ஈரப்பதத்தால் அங்கு ஏற்படும் பாதிப்பை சரி செய்யலாம்.

              அந்த ஈரப்பதம், ஆர்.சி.சி., கட்டுமானங்களுக்கு பரவினால், கட்டடத்தின் உறுதிக்கு பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ளதுபெரும்பாலும், சுவரில் மட்டும் தானே ஈரப்பதம் ஏற்பட்டுள்ளது; இது வேறு இடங்களுக்கு பரவாது என்று அலட்சியமாக இருந்துவிடாதீர்கள்.

               இந்த  ஈரப்பதம் சுவருடன் இருந்து விடுகிறதா அல்லது வேறு இடங்களுக்கு பரவுகிறதா என்று பார்க்க வேண்டும்தூண்கள், பீம்களுக்கு இந்த ஈரப்பதம் பரவாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

வில்லங்க சான்றிதழில் விடுபட்ட தகவல்களை பெறுவது எப்படி?

 வில்லங்க சான்றிதழில் விடுபட்ட தகவல்களை பெறுவது எப்படி?

         தமிழகத்தில், விற்பனைக்கு வரும் சொத்துக்களை, அதன் முந்தைய பரிவர்த்தனைகளை அறிய, வில்லங்க சான்று பெறுவது கட்டாயம்இதில், பொதுமக்கள் வசதிக்காக, பல்வேறு நடைமுறை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

           குறிப்பாக, வில்லங்க விபரங்களை இலவசமாக ஆன்லைன் முறையில் பார்த்துக்கொள்ள வகை செய்யப்பட்டதுபல்வேறு தடங்கல்களுக்கு நடுவில், இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

            இணையத்தின் மூலம், வில்லங்கச் சான்று பெற விரும்புபவர்கள், உரிய கட்டணத்தை இணையத்தில் செலுத்தி, தபால் மூலம் அல்லது சார்-பதிவாளர் அலுவலகத்திலிருந்து, இரண்டு நாட்களுக்குள் பெற்று கொள்ளலாம்.




             இதற்கு அடுத்தபடியாக, பொதுமக்கள் தங்கள் சொத்துக்கள், வாங்க இருக்கும் சொத்துக்கள் தொடர்பான வில்லங்க சான்று பெற சார்-பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டாம்வீட்டில் இருந்த படியே பதிவுத்துறை இணையதளத்தில், கட்டணம் செலுத்தி, விண்ணப்பித்தால் போதும்.

            வீட்டிலிருந்தவாறு இணையத்தின் வாயிலாக, வில்லங்க சான்றிதழை பெறும் வசதி இருக்கும் காரணத்தால், பொதுமக்கள் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

            இணையத்தின் வாயிலாக, வில்லங்கச் சான்றிதழை இலவசமாகப் பெறவேண்டுமானால் தமிழகப் பதிவுத்துறையின் https://tnreginet.gov.in/portal/ என்ற இணையதளத்திற்கு செல்லவேண்டும்அந்த இணையத்தில், வில்லங்க சான்றை பார்ப்பதற்கும், பதிவிறக்கம் செய்வதற்கும் தனி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

             உங்கள் '-மெயில்' முகவரிக்கே, சார்பதிவாளரின் டிஜிட்டல் கையெழுத்துடன், வில்லங்க சான்றிதழ் வந்துவிடும்.

             இதில், சில அடிப்படை விஷயங்களை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

               நீங்கள், எத்தனை ஆண்டிற்கான வில்லங்க சான்றிதழ் கேட்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

               ஒரு சொத்து குறித்த, 30 ஆண்டு கால பரிவர்த்தனை விபரங்கள் கிடைத்தால் போதும் என்று பலரும் கூறுகின்றனர்.

                இதில், ஏதாவது சில ஆண்டுகளில் பதிவு விபரம் இல்லை என்று பதில் வந்தால், விண்ணப்பதாரர் 'அலெர்ட்' ஆக வேண்டும்சிலர், இப்படி பதில் வந்தால் அதை அப்படியே நம்புவதும் உண்டு.

                அந்த ஆண்டில், அந்த சொத்தில், எந்த பரிவர்த்தனையும் இல்லை என்ற முடிவுக்கு வந்து விடுவர்.

                 இதில், விற்பனையாளரிடம் அந்த ஆண்டில், பரிவர்த்தனை நடந்ததற்கான ஆவணம் கையில் இருக்கும்.

                 இது போன்ற சூழலில், விற்பனையாளரிடம் இருக்கும் ஆவணங்கள் மீது, சந்தேகம் எழுவது இயற்கை.

                  ஆனால், உண்மை நிலையை விசாரித்தால், பதிவுத்துறை பணியாளர்கள், அந்த குறிப்பிட்ட விபரத்தை, வில்லங்க குறிப்பில் பதிவேற்றம் செய்யாமல் இருந்திருக்கலாம்.

                   எனவே, இத்தகைய குழப்பங்கள் ஏற்பட்டால், அவசரப்பட்டு, எந்த முடிவுக்கும் வந்துவிடாதீர்பத்திர சான்றுகள் அவற்றின் உண்மை தன்மை தொடர்பான விஷயங்களை சரிபார்த்து முடிவு எடுப்பது அவசியம்.

                    தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் சென்றும், இது தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்இதனால், தவறான சந்தேகம் அடிப்படையில் முடிவு எடுப்பதை தவிர்க்கலாம் என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

When buying a 3BHK luxury apartment in Chennai - By using this checklist

  When buying a 3BHK luxury apartment in Chennai, you’ll want to ensure the property meets both your practical needs and long-term investmen...