அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவோர் பட்டா விஷயத்தில் கவனிக்க
வீடு, மனை வாங்குவோர் அதற்கான பத்திரப்பதிவு முடிந்தவுடன், பட்டா மாறுதலில் கவனம் செலுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி
வருகிறோம்.
இருப்பினும், மனை வாங்குவோர் மத்தியில் ஏற்பட்ட அளவுக்கு, அபார்ட்மெண்ட் திட்டங்களில், வீடு வாங்குவோரிடையே விழிப்புணர்வு ஏற்படவில்லை.
அடுக்குமாடி வீடுகளை வாங்குபவர்கள் பத்திரப்பதிவு முடிந்தவுடன், எல்லா வேலைகளும் முடிந்து விட்டதாக நிம்மதியாக இருந்து விடுகின்றனர். ஆனால், வேலை அத்துடன் முடிந்து விடாது. வீட்டுக்கு பட்டா வாங்க வேண்டுமல்லவா...
தனி வீட்டுக்குப் பட்டா வாங்கலாம்; ஆனால், அடுக்குமாடி குடியிருப்புக்கு எப்படி பட்டா வாங்குவது... உதாரணமாக
அடுக்குமாடி குடியிருப்பில், ஆறு வீடுகள் இருந்தால், இந்த ஆறு பேரும் தங்களுக்கென தனியாக உட்பிரிவு பட்டா வாங்க வேண்டும்.
மனை விற்பனையில் பத்திரப்பதிவின் போது பட்டா பெயர் மாறுதலுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கான
ஒப்புகை சீட்டு வழங்கப்படுகிறது.
இதை பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட தாலுக்கா அலுவலகத்தை அணுகி பட்டா பெயர் மாறுதல் பெறலாம்.
இதில், தற்போது வரை, நிலத்துக்கு பட்டா மாறுதலுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால்,
அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு விற்பனையை பதிவு செய்வோருக்கும், இந்த வசதி இருக்க வேண்டும். உண்மையில்,
அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்குவோர், இத்தகைய ஒப்புகை சீட்டு பெற்றாலும், அவர்கள் பட்டா மாறுதல் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை.
இன்னும் பல இடங்களில் அடுக்குமாடி
குடியிருப்புகளுக்கு பட்டா வாங்க வேண்டியதில்லை என்ற எண்ணத்திலேயே மக்கள் இருக்கின்றனர். தனி
வீடு என்றால், பட்டா வாங்க வேண்டும்; அடுக்குமாடி குடியிருப்புகளில் பட்டா தேவையில்லை என்று பலரும் நினைக்கின்றனர்.
இதிலும், அதிக எண்ணிக்கையில் வீடுகள் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் பட்டா வழங்குவதில், அதிகாரிகள் நிலையிலேயே பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. சாதாரணமாக,
10 வீடுகள் வரை உள்ள குடியிருப்புகளுக்கு, யு.டி.எஸ்.,
பங்கீடு அடிப்படையில் பட்டா வழங்குவதில் சிக்கல் இல்லை.
ஆனால், 50 வீடுகளும், அதற்கு அதிகமான வீடுகள் உள்ள குடியிருப்புகள், நான்கு அல்லது ஐந்து சர்வே எண்களில் உள்ள நிலங்களின் தொகுப்பாக உள்ளது. இந்த
தொகுப்பு நிலங்களுக்கு, யு.டி.எஸ்.,
அடிப்படையில் பட்டா வழங்குவதற்கான நடைமுறைகளை வருவாய்துறை தெளிவுபடுத்த வேண்டும்.
தமிழகத்தில், பல இடங்களில் இப்படி
தொகுப்பு நிலங்களை பயன்படுத்தியே குடியிருப்புகள் கட்டப்படுகின்றன.
இதன் தாக்கத்தை புரிந்து, வருவாய் துறை அதிகாரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் பட்டா வழங்குவதில், குழப்பங்களை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை,
பத்திரப்பதிவு செய்து, பட்டா கேட்டு விண்ணப்பம் அளிக்கலாம். இந்த
உட்பிரிவு பட்டா என்பது, அடுக்குமாடி வீடுகளுக்கு மட்டுமல்ல; மலைகளுக்கும், மற்ற பயன்பாட்டு நிலங்களுக்கும் பொருந்தக் கூடியது என்கின்றனர்,ரியல் எஸ்டேட் துறை வல்லுனர்கள்.
நன்றி : தினமலர் கனவு இல்லம்