Thursday, September 22, 2022

உரிமையாளர் ஆட்சேபத்தால் பத்திரப்பதிவில் ஏற்படும் சிக்கல்கள்!

 உரிமையாளர் ஆட்சேபத்தால் பத்திரப்பதிவில் ஏற்படும் சிக்கல்கள்!

     சொத்து பரிவர்த்தனைக்கான பத்திரப்பதிவில் விற்பவர், வாங்குபவர் இருவரும் சார்-பதிவாளர் முன் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்ஆனால், சில தவிர்க்க முடியாத சூழலில், விற்பவர் அல்லது வாங்குபவர் யாராவது ஒருவர் நேரில் ஆஜராக முடியாத நிலை ஏற்படலாம்.

       இத்தகைய சூழலில், சம்மந்தப்பட்டவர் இருப்பிடத்துக்கே பதிவாளர் வந்து பத்திரப்பதிவை மேற்கொள்வார்இந்த சலுகையை அனைவரும் பயன்படுத்த முடியாது.


                                            #documentation #propertysale #sale 

        உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள், சிறையில் இருப்பவர்கள், நீதிமன்ற தடை காரணமாக பொது இடங்களுக்கு செல்ல முடியாதவர்கள் இந்த சலுகையை பயன்படுத்தலாம்இதில், வழக்கமான கட்டணத்துடன் கூடுதல் தொகை வசூலிக்கப்படும்.

           இந்த சலுகை நியாயமான காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறதா என்பதை சம்மந்தப்பட்ட சார் பதிவாளர் தான் முடிவு செய்ய வேண்டும்குறிப்பாக, ஆள்மாறாட்டம் செய்வோர், இதை பயன்படுத்திட வாய்ப்புகள் உள்ளதால் சார் பதிவாளர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

         இத்துடன், சில சமயங்களில் விற்பவர் பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுத்து இருப்பார்இதை சொத்து பெறுபவர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்து பதிய முனைவார்.

         இது போன்ற சமயங்களில் சார்-பதிவாளர் சம்பந்தப்பட்ட சொத்து உரிமையாளருக்கு கடிதம் அனுப்பி, அவர் தரப்பில் ஆட்சேபம் உள்ளதா என்பதை அறிய வேண்டும்இதில் பதில் வராத நிலையில், சார்-பதிவாளர் அந்த பத்திரத்தை தாக்கல் நிலையிலேயே நிராகரிப்பார்.

          இவ்வாறு நிராகரிக்கப்படும் நிலையில், பதிவுக்கு சென்றவர், மாவட்ட பதிவாளரிடம் மேல் முறையீடு செய்வார்இந்த மேல் முறையீட்டிலும் நிராகரிப்பு உறுதியானால், அவர் நீதிமன்றம் செல்லவும் வாய்ப்புள்ளது.

          உரிமையாளர் நேரில் வராமல் பத்திரங்களை பதிவு செய்வதை பெரும்பாலான சார் பதிவாளர்கள் தவிர்க்கின்றனர்ஆனால், சில இடங்களில் பிரச்னை குறித்து தெரிந்த நிலையிலும் சார்-பதிவாளர்கள் இதற்கு துணை போகின்றனர்.

           உரிமையாளர் இல்லாமல், அவர் சார்பில் பணியாளர்கள் இத்தகைய ஏற்பாடுகளை செய்து சொத்து பரிவர்த்தனை செய்தால் பணம் கொடுத்து வாங்குவோர் சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்எனவே, எந்த அடிப்படையிலும், உண்மையான உரிமையாளர் நேரில் வராமல் பதியப்படும் சொத்துக்களை வாங்காதீர் என்கின்றனர், பதிவுத்துறை அதிகாரிகள்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

No comments:

Post a Comment

Bigger the house, bigger the responsibilities

  Here is a look at the aftermath of upgrading to a larger space Regardless of the size of the current home, many homeowners often nurture t...