Thursday, September 22, 2022

யு.டி.எஸ்., சிக்கல்களை தீர்ப்பதற்கான வழிமுறைகள்!

    யு.டி.எஸ்., சிக்கல்களை தீர்ப்பதற்கான வழிமுறைகள்!

         அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் வீடு வாங்குவோர், அதற்கான நிலம் தொடர்பான பல்வேறு விஷயங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்இதில் நிலம் யாருடையது, அது கட்டுமான நிறுவனத்தால் எந்த அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது என்பதை வீடு வாங்குவோர் அறிய வேண்டியது அவசியம்.

          நீங்கள் வீடு வாங்க தீர்மானித்துள்ள அடுக்குமாடி திட்டம் அமைந்துள்ள நிலம் யாருடையதுஅதில், கட்டுமான நிறுவனத்தின் உரிமை என்ன என்பதை முன்பணம் கொடுக்கும் நிலையிலேயே விசாரிக்க வேண்டும்.


                            #uds #apartment #investment #propertysale #gatedcommunity

         இன்றைய சூழலில், பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள் நிலத்தை தங்கள் பெயருக்கு கிரையம் செய்து கொள்வதில்லைஉரிமையாளரிடம் பவர் வாங்கி அதன் அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்துகின்றன.

          இதில், பெரிய பரப்பளவு நிலங்களை வாங்கி அதிக எண்ணிக்கையில் வீடு கட்டுவது ஒரு வகைஇரண்டு வெவ்வேரு நபர்களின் பெயரில் உள்ள தலா அரை கிரவுண்ட் நிலத்துக்கு பவர் பெற்று, அதில் வீடு கட்டுவது ஒரு வகை.

          இவ்வாறு சிறிய அளவில் நிலத்தை மேம்படுத்தும்போது, அதில் குறிப்பிட்ட அளவு வீடுகள் உரிமையாளர்களுக்கே கொடுக்கப்படும்இவர்களுக்கு போக மீதியுள்ள வீடுகள் வெளியாருக்கு விற்கப்படும்.

         இப்படி வெளியாருக்கு விற்கப்படும் வீடுகளுக்கு யு.டி.எஸ்., பங்கிடுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றனகுறிப்பாக, இது போன்ற திட்டங்களில், 50 சதவீத யு.டி.எஸ்., பழைய உரிமையாளர்களுக்கு சென்றுவிடும்மீதியுள்ள, 50 சதவீத  யு.டி.எஸ்., வீடு வாங்குவோருக்கு வழங்கப்படும்இதில் எத்தனை வீடுகள் வருகிறதோ அவர்களுக்கு முறையாக வழங்க வேண்டும்.

          ஆனால், சில இடங்களில், மொத்தமாக, 50 சதவீத  யு.டி.எஸ்., பங்கை வைத்துள்ள பழைய நில உரிமையாளர்கள் புதிதாக வீடு வாங்குவோரை சிறுபான்மையாக கருதி பல்வேறு தொல்லைகள் கொடுப்பது தொடர்பான புகார்கள் எழுகின்றன.

           சில இடங்களில் வழக்கு வரை செல்லும் அளவுக்கு இப்பிரச்னை செல்கிறதுபழைய உரிமையாளர், புதிய உரிமையாளர் என்ற வேறுபாடுகள் இன்றி அனைவருக்கும் முறையான யு.டி.எஸ்., பங்கு அளிக்கப்பட வேண்டும் என்கின்றனர், நகரமைப்பு வல்லுனர்கள்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

No comments:

Post a Comment

Why Do Redevelopment Projects Get Stuck

  Why Do Redevelopment Projects Get Stuck ? Let’s understand the challenges that often impede the progress of redevelopment projects and unc...