Monday, September 26, 2022

துணை விதிகளை பார்க்காமல் அறக்கட்டளை சொத்துக்களை வாங்காதீர்!

 துணை விதிகளை பார்க்காமல் அறக்கட்டளை சொத்துக்களை வாங்காதீர்!

           புதிதாக சொத்து வாங்குவதில் சில அடிப்படை விஷயங்களை சட்ட ரீதியாக சரி பார்த்துக் கொள்ள வேண்டும்குறிப்பாக யாரிடம் இருந்து புதிய சொத்தை வாங்குகிறோம் என்பதில் மிக கவனமாக இருக்க வேண்டும்.

            தனி நபர்களிடம் இருந்து சொத்து வாங்குவதை காட்டிலும், அறக்கட்டளை, சங்கங்களிடம் சொத்துக்களை வாங்குவதில் சட்ட ரீதியாக பல்வேறு சிக்கல்கள் வருகின்றனஇத்தகைய சொத்துக்களை வாங்க வேண்டாம் என்று ஒதுங்க முடியாது.



            விற்பவர்கள், சட்ட வழி முறைகளை சரியாக கடைப்பிடித்துள்ளார்களா என்பதை பார்க்க வேண்டும்குறிப்பாக, அறக்கட்டளை சொத்துக்களை வாங்குவதில் மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

             தனிநபர் எனில் அவருக்கு அந்த சொத்து எப்படி கிடைத்தது என்பது உள்ளிட்ட விஷயங்கள் பார்க்கப்படுகிறதுஅது போன்று, சங்கம், அறக்கட்டளையின் சொத்துக்கள் விற்பனைக்கு வரும் போது கூடுதல் ஆய்வு அவசியம்.

            குறிப்பாக, அறக்கட்டளை சார்பில் விற்கப்படும் சொத்துக்களை வாங்குவோர், அந்த சொத்தின் முன் வரலாறு விபரங்களை அறிய வேண்டும்இதில், அறக்கட்டளையின் நிர்வாக அமைப்பு, அதில் யாருக்கு சொத்து விற்பனை அதிகாரம் உள்ளது என்பதை பார்க்க வேண்டும்.

          மேலும், அறக்கட்டளையின் துணை விதிகளின் பிரதியை வாங்கி பார்க்க வேண்டும்அதில் சொத்து விற்பனை தொடர்பாக யார் என்ன செய்ய வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டு இருக்கும்.

        அனைத்து அறக்கட்டளைகளுக்கும் ஒரே விதமான துணை விதிகள் தான் இருக்கும்ஆனால், சில அறக்கட்டளைகள், துணை விதிகளில் மாறுதல்கள் செய்து இருக்கும்.

         இது போன்ற விஷயங்களை வழக்கறிஞர் உதவியுடன் சரி பார்க்க வேண்டும்மேலும், சொத்து விற்பனை தொடர்பாக அறக்கட்டளையின் நிர்வாக குழுவில் ஏதாவது தடை விதிக்கப்பட்டுள்ளதா என்பதையும் கவனமாக ஆய்வு செய்ய வேண்டும் என்கின்றனர், சட்ட வல்லுனர்கள்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

No comments:

Post a Comment

புதிய வீட்டுக்கு அலங்கார மின் விளக்குகளை தேர்வு செய்வதில் கவனிக்க

  புதிய வீட்டுக்கு அலங்கார மின் விளக்குகளை தேர்வு செய்வதில் கவனிக்க புதிதாக வீடு கட்டும் போது அதன் ஒவ்வொரு பாகமும் எப்படி இருக்க வேண்டும் என...