Saturday, August 24, 2024

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சொத்துக்களை விற்பதில் கவனிக்க வேண்டியவை!

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சொத்துக்களை விற்பதில் கவனிக்க வேண்டியவை!

புதிதாக, வீடு, மனை வாங்குவது போன்று இருக்கும் சொத்துக்களை விற்பதிலும், மக்கள் கவனமாக இருக்க வேண்டும்வாங்கும்போது மட்டும் நாம் ஏமாறுவதில்லைநம் சொத்தை பிறருக்கு விற்கும் போதும் நாம் ஏமாற வாய்ப்பு இருக்கிறதுஆனால், நம்மிடம் உள்ள சொத்து நல்ல விலைக்கு விற்கப்பட வேண்டும் என்பது தான், அனைவரின் அடிப்படை நோக்கமாக இருக்கும்.
     அப்படி ஒரு நிலையில் நாம் இருக்கும் போது, விற்கும் சொத்தை வாங்கும் நிலையில் உள்ளவர்களின் முழு வரலாற்றையும் நாம் தெரிந்துக் கொள்வது மிக அவசியம்.
      தவறான, சட்டத்துக்கு மாறான வழியில் யாரும் செல்ல கூடாதுகுறிப்பாக, அதிக விலை கிடைக்கிறதே என்பதற்காக, தவறான நபர்களுக்கு சொத்தை விற்க கூடாதுநம்மில் சிலர் சந்தை மதிப்பை விட, கூடுதல் விலை கிடைக்கிறது என்பதற்காக, சொத்தை விற்க முனைவர்.
      அதில், எந்த வில்லங்கம் வந்தாலும், விற்றவரின் மீதும் புகார் வரவே செய்யும்உங்கள் சொத்தை யார் வாங்க வருகின்றனர் என்பதில், கவனமாக இருக்க வேண்டும்தெரிந்தவர், உள்ளூர்க்காரர் என்றால், அதில் பெரிய பிரச்னை இருக்காதுஅவரின் முழு வரலாறும் நமக்கோ, நம் உறவினர்களுக்கோ தெரிந்திருக்கும்ஆனால், முன்பின் அறிமுகம் இல்லாத நபர்கள் எனில், அவர்கள் யார் என்பது தொடர்பான விபரங்களை விசாரிப்பது நல்லது.
      குறிப்பாக, அரசு வழங்கிய அடையாள ஆவணங்கள் ஏதாவது உள்ளதா என்பதை கேட்டு வாங்கி பார்த்துக் கொள்வது நல்லது.
      சொத்தை வாங்க வருவோரிடம், எடுத்த எடுப்பிலேயே அடையாள ஆவணம் கேட்பது நடைமுறையில் சில சங்கடங்களை ஏற்படுத்தும்பேச்சு வாக்கில் அவர் தொடர்பான விஷயங்களை விசாரித்து விட்டு, விற்பனை ஒப்பந்தம் எழுதும் நிலையில், அடையாள ஆவணங்களை கேட்கலாம்.
       இதில், வெளிநாடுவாழ் இந்தியர்கள் எனில் கூடுதல் விசாரணை தேவைஅரசு இது தொடர்பாக பிறப்பித்துள்ள உத்தரவுகள் குறித்து சொத்து விற்பவர் அறிந்து இருக்க வேண்டியது அவசியம்வெளிநாடுவாழ் இந்தியர்கள் இங்கு சொத்துக்களை வாங்கவும், விற்கவும் முடியும்இவ்வாறு, இந்தியாவில் சொத்து வாங்க அவர்களுக்கு சில நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது.    
         சொத்துக்களை வாங்க விரும்புவோர், இந்திய குடியுரிமையை இழக்காமல் இருக்க வேண்டும்சொத்து வாங்க முதலீடு செய்யும் பணத்துக்கான கணக்கை அவர் அளிக்க வேண்டும்வெளிநாடுகளில் முறையாக வேலை அல்லது தொழில் செய்து சம்பாதித்த பணத்தில் இந்தியாவில், வீடு, மனை வாங்குவது பிரச்னை இல்லைஆனால், சட்ட விரோத பண பரிமாற்றம் வாயிலாக சொத்து வாங்குவோர் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகின்றனர்எனவே, அசையா சொத்துக்களை வசதி படைத்த வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு விற்பவர்கள் இது போன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள்.

வீட்டுவசதி கண்காட்சிகளுக்கு செல்வோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

வீட்டுவசதி கண்காட்சிகளுக்கு செல்வோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

இன்றைய சூழலில் ஆன்லைன் முறையில் பல்வேறு வசதிகள் கிடைத்தாலும் நேரில் சென்று விசாரித்து வாங்குவதில் மக்களுக்கு தனியான விருப்பம் தொடர்கிறது. இந்த வகையில் கொரோனா மற்றும் ஊரடங்கு காலத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தங்கள் திட்டங்கள் குறித்த விபரங்களை பொதுமக்கள் ஆன்லைன் முறையில் அறிய ஏற்பாடு செய்தன. 


அப்போது பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாது என்பதால், வீட்டில் இருந்தபடியே இந்த விபரங்களை பெறுவதற்கு இது உதவியாக இருந்தது. ஆனால், தற்போது அனைவரும் இயல்பு நிலைக்கு வந்த சூழலில், நேரில் சென்று விசாரிப்பதில்மக்கள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.


குறிப்பாக, வீடு, மனை வாங்குவது தொடர்பான விஷயங்களில் சம்பந்தப்பட்ட திட்டப்பகுதிகளுக்கு நேரில் சென்று விசாரிப்பது அவசியமாகிறது. இதற்கு பல்வேறு நிறுவனங்கள் மக்களை நேரில் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்வதும் சமீப காலமாக அதிகரித்துள்ளது.


இந்நிலையில், சென்னை உள்ளிட்ட நகரங்களில், பல்வேறு கட்டுமான நிறுவனங்கள் தங்கள் திட்டங்களின் விபரங்களை ஒரே இடத்தில் காட்சிப்படுத்தும் வகையில் கண்காட்சிகளை நடத்துகின்றன. ஒரே இடத்தில் அனைத்து நிறுவனங்களின் திட்டங்களையும் அறிய பொதுமக்களுக்கு இது பேருதவியாக உள்ளது.


இதில் மக்களின் வசதிக்காக கட்டுமான நிறுவனங்கள் கூடுதலாக சில சிறப்பு வசதிகளையும் ஏற்படுத்துகின்றன. தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளுடன் பேசி, வீட்டுவசதி கண்காட்சி நடக்கும் இடங்களில் வீட்டுக்கடன் வழங்குவதற்கான அரங்குகளும் அமைக்கப்படுகின்றன. இதுபோன்ற கண்காட்சிகள் தற்போது பரவலாக அதிகரித்துள்ள நிலையில், இதை பயன்படுத்துவதில் பொதுமக்கள் சில விஷயங்களில் தெளிவாக இருக்க வேண்டும்.


வீடு அல்லது மனை வாங்குவதா என்பதை முதலில் தெளிவுபடுத்திக்கொண்டு அதன் அடிப்படையில் உங்கள் தேடல் இருக்க வேண்டும். சூழல் அடிப்படையில் இறுதிக் கட்டத்தில் முடிவுகளில் மாற்றம் வருவது என்பது இயற்கை தான் என்றாலும், மக்கள், தேடல் நிலையில் தெளிவாக இருக்க வேண்டும்.


வீடு வாங்குவது என்று முடிவு செய்துவிட்டால், உங்கள் பட்ஜெட் என்ன, எந்த பகுதி என்பதை முடிவு செய்து அதற்கு ஏற்ற திட்டங்களின் விபரங்களை சேகரிக்க வேண்டும். வீட்டுவசதி கண்காட்சிக்கு செல்லும்முன் இதுபோன்ற அடிப்படை விஷயங்கள் குறித்த விபரங்களை குறிப்பாக எழுதி வைத்துக்கொள்வதும் நல்லது. குறிப்பாக, இக்கண்காட்சிக்கு செல்லும்முன் உங்கள் ஆதார் எண், பான் எண் உள்ளிட்ட விபரங்களை உடன் வைத்து இருப்பது நல்லது.


இங்கு வீட்டுக்கடன் வழங்கும் மையங்களில் சில அடிப்படை தகவல்களை அளித்தால் போதும், உங்களுக்கு எவ்வளவு தொகை வீட்டுக்கடனாக கிடைக்கும் என்பது முடிவு செய்யப்படும். திட்டங்கள், நிறுவனங்கள் குறித்த விபரங்களை சேகரிப்பதுடன், அங்குள்ள பிரதிநிதி களுடன் பேசி கூடுதல் விபரங்களை பெறலாம் என்கின்றனர் கட்டுமானத் துறை வல்லுனர்கள். 

சொத்தின் நகல் பத்திரம் பெறுவதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

 சொத்தின் நகல் பத்திரம் பெறுவதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

ஒரு சொத்தை விலைக்கு வாங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவோர், அது தொடர்பான அனைத்து பத்திரங்களையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.  இதில், உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள அனைத்து பத்திரங்களின் பிரதிகளையும் முறையாக கொடுப்பர் என்று எதிர்பார்க்க முடியாது.


சில சமயங்களில் சொத்தை விற்கும் உரிமையாளர்கள் தங்கள் பெயருக்கு வந்த கிரைய பத்திரத்தின் அசல் பிரதி மட்டும் வைத்து இருப்பர்.  அதற்கு முந்தைய பத்திரத்தின் நகல் மட்டும் இருக்கும், அசல் பத்திரம் இல்லை என்பதற்கு பல்வேறு காரணங்களை சொல்வர். 


இது போன்ற சூழலில், முந்தைய பத்திரங்களின் அசலில் என்ன விபரங்கள் உள்ளன, விற்பனையாளர் காட்டும் நகல் பத்திரங்கள் உண்மை தானா என்று பார்க்க வேண்டும்.  இதற்கு, அந்த குறிப்பிட்ட பத்திரத்தின் எண், பதிவு செய்த ஆண்டு, சார்-பதிவாளர் அலுவலகம் ஆகிய விபரங்கள் இருந்தால் போதும்.


இந்த அடிப்படை விபரங்களை அளித்து உரிய முறையில் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட பத்திரங்களின் பிரதிகள் உங்களுக்கு கிடைத்துவிடும்.


தற்போது, சொத்தின் நகல் பத்திரங்கள் பெற வேண்டுமானால், சார்-பதிவாளர் அலுவலகம் கூட செல்ல வேண்டியதில்லை.


நீங்கள் வீட்டில் இருந்தபடியே இணையதளம் வாயிலாக நகல் பத்திரங்கள் கோரி விண்ணப்பிக்கலாம்.  இதிலும், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, 1975 முதல் தற்போது வரை பதிவான பத்திரங்களின் பிரதியை மட்டுமே பெற முடியும் என்ற நிலை இருந்தது.  இது தற்போது, 1865 முதல் பதிவான பத்திரங்களின் நகல் கிடைக்கும் அளவுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


ஆன்லைன் முறையில் பத்திர நகல் கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், ஆவண எழுத்தர்கள் வாயிலாக அல்லது நீங்களே உங்கள் பெயரில் விண்ணப்பிக்கலாம்.


இதற்கான பணியில் இறங்கும் முன் ஆதார் எண், இ-மெயில் முகவரி,மொபைல் போன் எண் ஆகிய விபரங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.


ஒரு சொத்து பத்திரத்தின் நகல் வேண்டும் என்று தேவை எழுந்தால், பதிவுத்துறையில் முறையாக விண்ணப்பித்தால் ஓரிரு நாட்களில் அது உங்களுக்கு இ-மெயில் வாயிலாக அனுப்பப்படும்.  இதை வைத்து அந்த சொத்தை வாங்குவது தொடர்பான விஷயங்களில் அடுத்தடுத்த முடிவுகளை எடுக்கலாம்.


குறிப்பாக, ஒரு சொத்தின் நகல் பத்திரம் பெறும் நிலையில் அதை முறையாக பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கிறதா என்று பாருங்கள்.


வில்லங்கம் மட்டும் பார்க்க வேண்டும் என்றால், பதிவு குறித்த அடிப்படை தகவல்கள் போதும் என்ற நிலையில் பத்திர நகல் தேவைப்படாது.


நீங்கள் வாங்கிய சொத்தின் முந்தைய அசல் பத்திரங்கள் வேண்டுமென்றே மறைக்கப்படுகிறது என்று தோன்றும் நிலையில், நீங்கள் நகல் பிரதியை வாங்கி பார்ப்பது நல்லது என்கின்றனர் ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்கள். 

When buying a 3BHK luxury apartment in Chennai - By using this checklist

  When buying a 3BHK luxury apartment in Chennai, you’ll want to ensure the property meets both your practical needs and long-term investmen...