About VV PROPERTIES: Your Expert Real Estate Consultant Welcome to my blog! I'm DR. PRABHU VENKATARAMAN, a passionate real estate consultant with 14 years of experience in helping clients buy, sell, and invest in properties. My mission is to simplify the real estate process, providing you with the knowledge and confidence to make the best decisions for your unique needs.
Wednesday, November 8, 2023
அடுக்குமாடி குடியிருப்புகளில் பார்க்கிங் ஸ்லாட்டை வாடகைக்கு விடுவது சரியா?
Tips every luxury homebuyer should know
Whether it’s for increased comfort and convenience, added security, or the potential for a great investment, luxury property is a good investment. In addition, investing in a luxury property is also a great way to diversify your portfolio.
Monday, October 30, 2023
உயில் எழுதுவோருக்கு தயக்கம் ஏற்பட காரணங்கள் என்ன?
இதில் சொத்தை வாரிசுகளுக்கு வழங்க உயில் மட்டுமே வழியாக பார்க்கப்பட்டது. தற்போது, உரிமையாளர் செட்டில்மென்ட் பத்திரம் வாயிலாகவும் சொத்தை வாரிசுகளுக்கு வழங்கலாம் என்று பரவலாக பேசப்படுகிறது.
உரிமையாளர்கள் உயிருடன் இருக்கும் போதே அவரது சொத்துக்களை வாரிசுகளுக்கு வழங்க உயில் எழுதுவது சரியான நடைமுறை தான். ஆனால், சில இடங்களில் உயில் எழுதுவது தொடர்பாக மக்களிடம் குழப்பம் நிலவுகிறது.
குறிப்பாக, ஒருவர் உயில் எழுதிவிட்டால் அவர் இறந்து விடுவார் என்ற கருத்தை நம்புவோர், உயில் எழுதவே அச்சப்படுகின்றனர். இது கற்பனையில் உருவாகி பரவிவரும் கருத்து மட்டுமே.
உயில் எழுதிய அனைவரும் இறந்து இருந்தால், அது பெரிய பிரச்னையை ஏற்படுத்தி இருக்கும். ஆனால், விழிப்புணர்வு இல்லாததால், கிராமங்களில் இது தொடர்பான மனதளவில் ஏற்படும் பாதிப்பு பல்வேறு சொத்து பிரச்னைகளுக்கு காரணமாக அமைகிறது.
அதே நேரம், தன் பெயரில் உள்ள அனைத்து சொத்துக்களையும், வாரிசுகளுக்கு வழங்கிய பின் தனிமைபடுத்தப்பட்டு விடுவோமோ என்ற பயமும் உரிமையாளர்களை வாட்டி வதைக்கிறது. நம்மிடம் சொத்து இருக்கிறது என்பதற்காக வாரிசுகள் இறுதி வரை பார்த்துக் கொள்வார்கள்.
சொத்து இல்லாத நிலையில், எஞ்சிய வாழ்நாளை கடத்துவதில் பல்வேறு சிக்கல் ஏற்படும் என்பதும் உரிமையாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, உயில் எழுதும் போது, யார் அந்த உரிமையாளரை இறுதி வரை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு நிபந்தனை விதிக்கலாம்.
ஆனால், பெரும்பாலான குடும்பங்களில் உயில் எழுதப்படும் நிலையில், அது பிள்ளைகளுக்கு தெரியாமல் பார்த்துக்கொள்வதே உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு. இதையும் மீறி பிள்ளைகள் உண்மை நிலையை தெரிந்துக்கொண்டால் குடும்பத்தில் தேவையில்லாத சண்டைகள் ஏற்படலாம்.
இது போன்ற பிரச்னைகளை கவனத்தில் வைத்து உரிமையாளர்கள் உயில் எழுதுவதில் முறையாக நடந்துக்கொள்வது அவசியம் என்கின்றனர் சட்ட வல்லுனர்கள்.
Tuesday, October 24, 2023
அரசு ஜப்தி செய்த நிலத்தை வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
கடன் நிலுவைக்காக வங்கிகள் கையகப் படுத்திய சொத்துக்களை வாங்கி தனி நபர் பெயரில் இருப்பதாக காட்டி அதிக விலைக்கு விற்பதற்கே சில நபர்கள் வந்துவிட்டனர். இவர்களிடம் அதிக விலைக்கு வாங்குவதை விட நேரடியாக வங்கியிடமே வாங்கலாம் என்று மக்கள் தயாராகி உள்ளனர்.
இதில் சில சமயங்களில் உரிமையாளர் மீதான நிலுவை பிரச்னைக்காக அரசு நேரடியாக சொத்துக்களை ஜப்தி செய்யும். உரிமையாளர் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலவரி, சொத்து வரி போன்றவை அபரிமிதமான நிலைக்கு செல்லும்போது அரசு சம்பந்தப்பட்ட சொத்துக்களை ஜப்தி செய்யும்.
வருமான வரி பாக்கி பிரச்னை காரணமாகவும் வருவாய் துறை வாயிலாக தனியார் சொத்துக்கள் ஜப்தி செய்யப்படலாம். இவ்வாறு ஜப்தி செய்யப்பட்ட சொத்துக்களை ஏலத்தில் வாங்க சிலர் விரும்புகின்றனர். வங்கிகள் கையகப்படுத்தி ஏலம் விடுவதற்கும், வருவாய் துறை ஏலம் விடுவதற்கும் அடிப்படையில் பல வேறுபாடுகள் உள்ளன.
வருவாய் துறை ஏலத்தில் வரும் சொத்துக்கள் குறித்த கூடுதல் தகவல்களை, ஆவணங்களை சரி பார்ப்பதில் தனி நபராக வருவோருக்கு போதிய ஒத்துழைப்பு இருப்பதில்லை. பல இடங்களில் தனி நபர்கள் இத்தகைய ஏலத்தில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. அதிகாரிகள் தங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு அந்த சொத்து கிடைக்க மறைமுகமாக உதவுகின்றனர்.
மேலும், சொத்தில் வேறு வில்லங்கம் இருக்கிறதா என்பதை விசாரிப்பதிலும் நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகிறது. வருவாய் துறையே ஏலம் விடுகிறது என்றால், அதில் வில்லங்கம் இருக்காது என்று யாரும் நினைக்காதீர்கள்.
அந்த சொத்து தொடர்பாக ஏதாவது பழைய வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதா என்று பார்க்க வேண்டும். வழக்கு நிலுவையில் இருந்தால் அது குறித்து விசாரித்து தெளிவு பெறாமல் சொத்துக்களை ஏலம் எடுப்பதில் அவசரம் காட்டாதீர்கள் என்கின்றனர் ரியல் எஸ்டேட் முகவர்கள்.
Saturday, October 21, 2023
சார் பதிவாளர் அலுவலகத்தில் உயில் பத்திரத்தை பதிவது கட்டாயமா?
பொதுவாக, தந்தை சம்பாதித்த சொத்துக்கள் பிள்ளைகளுக்கு தான் என்பதில் யாருக்கும் ஐயமில்லை. ஆனால், அதில் யாருக்கு, எவ்வளவு என்பதை அவர்களே முடிவு செய்துக்கொள்ளலாம் என்று நினைப்பது தவறான சூழலை உருவாக்கி விடும்.
சொத்துக்களை வாங்கிச் சேர்ப்பது வரவேற்கத் தக்க விஷயம் என்றாலும், அவற்றை முறையாக ஆவணப்படுத்துவது அதை விட அவசியமானது. அப்போதுதான், அந்த சொத்துக்கள் சென்றடைய வேண்டியவரை சிக்கல் இல்லாமல் எளிதாக சென்றடையும்.
உங்கள் சொத்துக்களுக்கு உயில் எழுதும் முன், சில அடிப்படை விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக, உயில் எழுதுவதற்கு தகுதியான சொத்துக்களை முறையாக பட்டியலிட வேண்டும்.
முக்கியமாக, ஒரு சொத்தை வாங்கிய காலம் துவங்கி, பாகப் பிரிவினைக்கு உட்படுத்தும் காலம் வரை எத்தனை ஆண்டுகளாக கையிருப்பில் அந்தச் சொத்து இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். அந்தச் சொத்தின் மீது வில்லங்க விவகாரம் இல்லாததை உறுதி செய்ய வில்லங்கச் சான்றிதழைப் பெற வேண்டும்.
எந்த சொத்து எங்கு உள்ளது, சர்வே எண் உள்ளிட்ட விபரங்கள், அளவுகள், தற்போதைய நிலவரம், முகவரி ஆகிய விபரங்களை தொகுக்க வேண்டும். இத்துடன், அந்த சொத்து வாயிலாக வருவாய் கிடைத்து வருகிறது என்றால், அதையும் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
இதில், குடும்ப தலைவர்கள் நல்ல உடல் நலத்தில் இருக்கும் போதே, சொத்துக்களை உயில் வாயிலாக பகிர்ந்து கொடுப்பது பிற்காலத்தில் பிரச்னைகளை தவிர்க்க உதவும்.
உயில் ஆவணத்தை முறைப்படி எழுதி, வழக்கறிஞரிடம் கொடுத்து வைப்பது அல்லது வங்கி லாக்கரில் வைப்பது போன்ற நடைமுறைகளை பின்பற்றலாம்.
மேலும், உயில் பத்திரத்தை உடனடியாக சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமில்லை. பதிவு செய்து விட்டால், அதை மாற்றுவதற்கு பல்வேறு நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே, முறையாக எழுதி, பாதுகாப்பாக வைப்பதே நல்லது. குடும்ப தலைவர் இறந்த பின், உயில் கண்டுபிடிக்கப்படும் போது, அதை அமல்படுத்த பதிவு செய்யலாம். உயில் எழுதும் போது, தங்களது எஞ்சிய வாழ்நாளுக்கு உரிய வழியை உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.
சில குடும்ப தலைவர்கள் தங்கள் பெயரில் உள்ள சொத்துக்களை பிள்ளைகள் பெயருக்கு முழுமையாக கொடுத்து விடுவர். அவரது காலத்துக்கு பின், சொத்துக்களை பெறும் பிள்ளைகள், மனைவியை பார்த்துக் கொள்வர் என்று நினைக்கின்றனர்.
இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதையும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்கின்றனர் சட்ட வல்லுனர்கள்.
பழைய வீடு வாங்கும்போது கவனம்
பல சமயங்களில், தற்போது பத்திரத்தில் எப்படி உள்ளதோ அதை அப்படியே புதிய பத்திரத்தில் குறிப்பிட்டு விற்றுவிடுவர். இவ்வாறு சொத்தை வாங்கியபின் அதன் எல்லை தாவாக்கள் தெரியவரும். இதைதவிர்க்க, பழைய வீட்டை வாங்கும் நிலையில் கூடுதல் விஷயங்களை கவனிப்பது அவசியம். அதிலும் சில விற்பனையாளர்கள் சிறுபிள்ளைதனமாக செயல்படுவதும் உண்டு.
குறிப்பாக, விற்பனைக்கு வரும் சொத்தை நீங்கள் பார்க்க செல்லும் போது இருந்த நிலையில் அப்படியே உங்களுக்கு ஒப்படைக்க வேண்டும். அதில் பயன்பாட்டு பொருட்களை மட்டுமே பழைய உரிமையாளர் எடுத்து செல்லலாம்.
ஆனால், சில இடங்களில் விற்பனையாளர்கள், வரைபடத்துக்கு அப்பாற்பட்ட நிலையில் கூடுதலாக கட்டப்பட்ட அறைகளை பத்திரப் பதிவுக்கு முன் தன்னிச்சையாக இடித்து விடுவர். அலமாரி உள்ளிட்ட அமைப்புகளை பெயர்த்து எடுத்து செல்வர். இன்னும் சிலர், வீட்டிற்குள் விளக்குகளை அகற்றிவிடுகின்றனர். மேலும், கூடுதலாக அமைத்த சுவிட்ச் போர்டுகள், தண்ணீர் மோட்டார்களை அகற்றி விடுகின்றனர்.
இது போன்ற சிறுபிள்ளைத்தனமான செயல்களை அனுமதிக்காதீர். வீடு வாங்க முன்பணம் கொடுக்கும்போதே, இது தொடர்பான விஷயங்களை கண்டிப்புடன் தெரிவிப்பது நல்லது. அப்போது தான், வீட்டை வாங்கி நீங்கள் குடிபுகும் நிலை சிக்கல் இன்றி அமையும் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.
கட்டுமான பணிகள் தாமதமானால் இழப்பீடு கிடைப்பதை ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும்
இவ்வாறு கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டால் அதனால் பெருமளவில் பாதிக்கப்படுவது உரிமையாளர் தான். சேமிப்பு, வங்கிக்கடன் என திரட்டிய பணத்தை முதலீடு செய்த நிலையில், கட்டுமான பணிகள் பாதியில் முடங்கினால், உரிமையாளர் கடுமையான நெருக்கடிக்கு ஆளாவார்.
இந்த சூழலில் உரிமையாளர், கட்டுமான நிறுவனம் இடையே பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, இது போன்ற பிரச்னைகளை தவிர்க்க கட்டுமான ஒப்பந்தம் தயாரிக்கும் நிலையிலேயே விழிப்புடன் இருக்க வேண்டும்.
ஒப்பந்தத்தில் இடத்தின் அளவு, வீடு கட்டி முடிக்கப்படும் காலம், வீட்டுக்கான மதிப்பு, வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை, கழிவறை, குளியலறை எப்படி அமைக்கப்படும் உள்படப் பல்வேறு விஷயங்கள் ஒப்பந்தத்தில் இடம்பெறும்.
பொதுவாக கட்டுமான ஒப்பந்தம் போடும் நிலையில் தாமதம் ஏற்பட்டால் என்ன செய்வது என்பது குறித்து பலரும் கவலைப்படுவதில்லை. தாமதம் காரணமாக பணிகள் முடங்கும் போது தான் ஒப்பந்த நிலையில் தவறு செய்துவிட்டோமே என்று வருத்தப்படுகின்றனர்.
கட்டுமான ஒப்பந்தம் கையெழுத்திடும் முன், அதில் கட்டுமான பணிக்கான கால அட்டவணையை குறிப்பிட வேண்டும். பணிகள் தாமதமானால், இதற்கான நிவாரணம் என்ன என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
பொதுவாக, சதுர அடிக்கு ஐந்து அல்லது, 10 ரூபாய் என்ற அடிப்படையில் ஒவ்வொரு மாதத்துக்குமான இழப்பீடு கணக்கிடப்படும். இதில் ஒப்பந்தத்தில் சதுர அடிக்கு, 10 ரூபாய் என்று குறிப்பிடப்படும் நிலையில், கட்டுமான நிறுவனம், சதுர அடிக்கு, 5 ரூபாய் தான் இழப்பீடாக வழங்க முடியும் என்று கூறலாம்.
இது போன்ற நிகழ்வுகள் உரிமையாளரின் பொறுமையை சோதிப்பதாக அமைந்துவிடும். இத்தகைய நிகழ்வுகளில் உரிமையாளர்கள் பிரச்னைக்கு நிற்காமல் அது குறித்து ரியல் எஸ்டேட் ஆணையம், நீதிமன்றத்தை அணுகு வேண்டும்.
பல இடங்களில் கட்டுமான நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்தில் பணிகளை முடித்து கொடுக்கிறோம் என்று கூறி, சதுர அடிக்கு, 20 ரூபாய் தர எளிதில் ஒப்புக்கொள்கின்றனர். ஒப்பந்தம் கையெழுத்தாகி பணிகள் நடக்கும்போது அவர் வேறு நிலைப்பாட்டை எடுப்பார்.
பிரச்னை ஆனால், என்னால் இவ்வளவு தான் தர முடியும் என்று வம்புக்கு நிற்பார்கள். அப்போது வேறு வழியின்றி அவர்கள் கொடுக்கும் இழப்பீட்டை பெறும் நிலைக்கு உரிமையாளர் தள்ளப்படுகிறார் என்கின்றனர் இத்துறை வல்லுனர்கள்.
When buying a 3BHK luxury apartment in Chennai - By using this checklist
When buying a 3BHK luxury apartment in Chennai, you’ll want to ensure the property meets both your practical needs and long-term investmen...
-
#eyedonation #service #socialservice
-
Information of Land use both oral as well as in writing across the table. For copies of plans approved by CMDA both for plots as well as...