Wednesday, November 8, 2023

அடுக்குமாடி குடியிருப்புகளில் பார்க்கிங் ஸ்லாட்டை வாடகைக்கு விடுவது சரியா?

 அடுக்குமாடி குடியிருப்புகளில் பார்க்கிங் ஸ்லாட்டை வாடகைக்கு விடுவது சரியா?
நகர், ஊரமைப்பு துறை வகுத்துள்ள விதிகளின்படி, அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் போது, வீட்டின் அளவு அடிப்படையில் கார் நிறுத்துமிடங்கள் ஏற்படுத்த வேண்டும்.  இதில் பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள் முறையாக செயல்பட விரும்புகின்றன.
அதாவது விதிப்படி கார் நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தி தரப் படும் என்றாலும், அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை வீட்டின் விலையில் சேர்த்து வாங்கப்படுகிறது.  இதனால், அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்குவோர், கார் நிறுத்துமிடங்களையும் சேர்த்து வாங்குகின்றனர்.
        சட்டப்படி கார் நிறுத்துமிடத்துக்கு தனியாக கட்டணம் வசூலிக்க கூடாது 
என்று கூறப்பட்டாலும், கட்டுமான நிறுவனங்கள் இதை கண்டு கொள்வதில்லை.  இதில் சில இடங்களில் வீடுகளுக்கு கார் நிறுத்துமிடங்கள் முறையாக வழங்கப்பட்டு இருக்கும்.
        ஆனால், வீடு வாங்கிய நபர் கார் வைத்து இருக்க மாட்டார்.  அத்தகைய சூழலில், பணம் செலுத்தி வாங்கிய கார் நிறுத்துமிடங்களை என்ன செய்வது என்பதில் குழப்பம் ஏற்படுகிறது.
    அதே நேரம், சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை வைத்து இருக்கலாம், கார் நிறுத்துமிடம் இன்றி வீடு வாங்கி இருக்கலாம்.  இந்த இரண்டு நிலையில் உள்ளவர்களும் எதாவது ஒரு புள்ளியில் ஒன்று சேரும் சூழல் உருவாகிறது.
        இதில் சமீப காலமாக, பயன்பாடு இல்லாத கார் நிறுத்துமிடங்களை வாடகைக்கு விடும் வழக்கம் அதிகரித்துள்ளது.  இவ்வாறு கார் நிறுத்துமிடங்களை வாடகைக்கு விடுவது தொடர்பாக சட்ட வழிமுறைகள் எதுவும் இல்லை.
        வீட்டை வாடகைக்கு விடுவது போன்று கார் நிறுத்துமிடத்தை வாடகைக்கு விடுவதற்கான வழிமுறைகளை தெளிவுபடுத்த அரசின் தலையீடு அவசியம்.  ஒரு குடியிருப்பில் இருப்பவர், அதிலேயே வசிக்கும் இன்னோரு நபருக்கு கார் நிறுத்துமிடத்தை வாடகைக்கு விடும் வரை பிரச்னை இல்லை. 
       வெளியாருக்கு வாடகைக்கு விடும் நிலையில், பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும்.  அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் சங்கங்கள் இதில் எப்படி செயல்படுவது என்பதிலும் குழப்பம் ஏற்படுகிறது.
        எனவே, தமிழக அரசு கார் நிறுத்துமிடங்களை வாடகைக்கு விடுவது தொடர்பான நடைமுறைகளை வகுக்க முன்வர வேண்டும்.  அபார்ட்மென்ட் உரிமையாளர்கள் பாதுகாப்பு சட்டத்தில் இதற்கான வழிமுறைகளை தெளிவாக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமானத்துறை வல்லுனர்கள்.

No comments:

Post a Comment

புதிய வீட்டுக்கு அலங்கார மின் விளக்குகளை தேர்வு செய்வதில் கவனிக்க

  புதிய வீட்டுக்கு அலங்கார மின் விளக்குகளை தேர்வு செய்வதில் கவனிக்க புதிதாக வீடு கட்டும் போது அதன் ஒவ்வொரு பாகமும் எப்படி இருக்க வேண்டும் என...