பல சமயங்களில், தற்போது பத்திரத்தில் எப்படி உள்ளதோ அதை அப்படியே புதிய பத்திரத்தில் குறிப்பிட்டு விற்றுவிடுவர். இவ்வாறு சொத்தை வாங்கியபின் அதன் எல்லை தாவாக்கள் தெரியவரும். இதைதவிர்க்க, பழைய வீட்டை வாங்கும் நிலையில் கூடுதல் விஷயங்களை கவனிப்பது அவசியம். அதிலும் சில விற்பனையாளர்கள் சிறுபிள்ளைதனமாக செயல்படுவதும் உண்டு.
குறிப்பாக, விற்பனைக்கு வரும் சொத்தை நீங்கள் பார்க்க செல்லும் போது இருந்த நிலையில் அப்படியே உங்களுக்கு ஒப்படைக்க வேண்டும். அதில் பயன்பாட்டு பொருட்களை மட்டுமே பழைய உரிமையாளர் எடுத்து செல்லலாம்.
ஆனால், சில இடங்களில் விற்பனையாளர்கள், வரைபடத்துக்கு அப்பாற்பட்ட நிலையில் கூடுதலாக கட்டப்பட்ட அறைகளை பத்திரப் பதிவுக்கு முன் தன்னிச்சையாக இடித்து விடுவர். அலமாரி உள்ளிட்ட அமைப்புகளை பெயர்த்து எடுத்து செல்வர். இன்னும் சிலர், வீட்டிற்குள் விளக்குகளை அகற்றிவிடுகின்றனர். மேலும், கூடுதலாக அமைத்த சுவிட்ச் போர்டுகள், தண்ணீர் மோட்டார்களை அகற்றி விடுகின்றனர்.
இது போன்ற சிறுபிள்ளைத்தனமான செயல்களை அனுமதிக்காதீர். வீடு வாங்க முன்பணம் கொடுக்கும்போதே, இது தொடர்பான விஷயங்களை கண்டிப்புடன் தெரிவிப்பது நல்லது. அப்போது தான், வீட்டை வாங்கி நீங்கள் குடிபுகும் நிலை சிக்கல் இன்றி அமையும் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.
No comments:
Post a Comment