Wednesday, May 10, 2023

வீடு வாங்குவோர் விசாரித்து அறிய வேண்டிய புதிய தகவல்கள்

 வீடு வாங்குவோர் விசாரித்து அறிய வேண்டிய புதிய தகவல்கள்!


      புதிதாக வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்த பின் அதற்கான நடவடிக்கைகளை துவங்குவோர், முதலில் நிதி ஆதாரம் என்ன இருக்கிறது என்பதில் கவனம் செலுத்துவோம்.

      இதையடுத்து, எந்த பகுதியில் எத்தகைய திட்டத்தில் வீட்டை வாங்குவது என்பதில் சரியான முடிவு எடுக்க வேண்டும்.

      இதில் உங்களுக்கு அனைத்து வகையிலும் பொருத்தமான குடியிருப்பு திட்டத்தைத் தேர்வு செய்வது சவாலான பணியாகும்.

       எந்த பகுதி என்பது முடிவாகிவிட்டால் அதில் எந்த திட்டம் என்பதை தெரிவு செய்ய வேண்டும்இதில் சம்பந்தப்பட்ட திட்டம் முறையாக அனுமதி பெறப்பட்டு, விதிகளை மீறாமல் கட்டுப்பட்டுள்ளதா என்று விசாரிக்க வேண்டும்.

        அந்த சொத்தின் ஆவணங்களில் வில்லங்கம் எதுவும் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

         வில்லங்கம் இருப்பது தெரிய வந்தால், கட்டுமான நிறுவனம் அதற்கு என்ன பதில் அளிக்கிறது என்பதையும் அறிய வேண்டும்.

         அவர்கள் அளிக்கும் பதில் சட்ட ரீதியான கேள்விகளுக்கு தீர்வாக இருந்தால் தொடர்ந்து அடுத்த கட்டத்துக்கு செல்லலாம்.

         கட்டுமானத் திட்டங்களைச் சார்ந்த பொதுவாக பல்வேறு விஷயங்களை விசாரிப்பது வழக்கம்.

          இதில் கூடுதலாக புதிய சில கேள்விகளை கேட்க வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளதுநீங்கள் வாங்க நினைக்கும் வீடு அமைந்துள்ள குடியிருப்பு திட்டத்துக்கான தரக் குறியீடு என்ன என்பதை விசாரித்து அறிய வேண்டும்இதன்பின், அத்திட்டம் அமைந்துள்ள பகுதி எந்த வகை நிலநடுக்க மண்டலத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை விசாரிக்க வேண்டும்.

           கட்டுமானத் திட்ட அனுமதி வழங்கும் நிலையிலேயே இதை அரசுத் துறைகள் விசாரிப்பது நல்லது.

           புதிதாக கட்டப்படும் குடியிருப்பு திட்டத்துக்கு அனுமதிக்கப்பட்ட மின்சார அளவு என்ன என்பதை கேட்க வேண்டும்அதிலும், ஒவ்வொரு தளத்துக்கும் அனுமதிக்கப்பட்ட மின்சார அளவு என்ன என்று அறிய வேண்டும்.

          

         இந்த அனுமதிக்கப்பட்ட மின்சார அளவை பயன்படுத்தும் வகையிலான கட்டமைப்பு வசதிகள் உள்ளதா என்றும் சரி பார்ப்பது அவசியம்அந்த குடியிருப்பில் பொது வசதிகள் என்னென்ன செய்யப்பட உள்ளன என்பதை பட்டியலாக பெற்று அதை கட்டுமான ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டும்.

           கட்டுமானப் பணிகள் முடிந்த குடியிருப்பு திட்டம் எனில், அதில், பொது வசதிகள் என்னென்ன செய்யப்பட்டுள்ளன என்பதை அறிய வேண்டும்இந்த வசதிகள் குழந்தைகள், பெரியவர்கள் பாதுகாப்பாக பயன்படுத்தும் வகையில் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.

            நீங்கள் வீடு வாங்கும் குடியிருப்பில், கட்டுமான நிறுவனம் என்னென்ன இயந்திரங்களை நிறுவியுள்ளது என்பதை அறிய வேண்டும்குறிப்பாக, லிப்ட், கண்காணிப்பு கேமிரா, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், தண்ணீர் ஏற்றும் மோட்டார்கள் போன்ற விஷயங்களையும் விசாரிப்பது நல்லது என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.

பத்திரங்களில் குறிப்பிடப்படும் நில வகைப்பாடுகள் குறித்து அறிந்தால் குழப்பங்களை தவிர்க்கலாம்!

 பத்திரங்களில் குறிப்பிடப்படும் நில வகைப்பாடுகள் குறித்து அறிந்தால் குழப்பங்களை தவிர்க்கலாம்!

     


    தமிழகத்தில் நிலங்கள் பல்வேறு தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளனகுறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பது பழங்காலத்து வகைப்பாடுகள்.

     இதில் காலத்துக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்கள் வந்தனகுறிப்பாக, நில நிர்வாகம் குறித்தச் சட்டங்கள் வந்த பின் நில வகைப்பாடுகளில் பல்வேறு முன்னேற்றங்கள் வந்துள்ளன.

      இருப்பினும், நில வகைப்பாடுகள் பத்திரங்களில் எப்படி குறிப்பிடப்படுகின்றன என்பதில் கவனமாக இருக்க வேண்டும்நடைமுறை ரீதியாக நிலம் தற்போது என்னவாக பயன்படுத்தப்படுகிறதோ அந்த வகைப்பாடு தான் பத்திரத்தில் இருக்க வேண்டும்.

       அதே சமயம், அந்த வகைப்பாடு அரசுத் துறைகளால் அங்கீகரிக்கப்பட்டு இருக்க வேண்டும்இதில் காலத்துக்கு ஏற்ப பயன்படுத்தப் படும் வார்த்தைகளும் மாறியுள்ளன.

        குறிப்பாக, நன்னிலம், நன்செய் என குறிப்பிடப்பட்டால், அது நெல் விளையும் நிலம் என்று புரிந்து கொள்ள வேண்டும்திருத்து, கருஞ்செய் என்ற வார்த்தைகளும் நன்செய் நிலத்தை குறிப்பிட பயன்படுத்தப்படுகின்றனமேலும், தாக்கு என்ற பெயரிலும் நெல்வயல் பகுதி குறிப்பிடப்படுகிறதுவற்புலம், தகர், தராய் என்ற வார்த்தைகள் மேட்டு நிலத்தை குறிக்க பயன்படுத்தப்படுகின்றன.

          உழவு செய்யப்பட்ட நிலம், சேற்றுப்புழி என்றும், விதைக்குரிய நிலம் விரைக்கால் என்றும் பத்திரங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கும்நீர் பாசனமில்லாத நிலம், காடாரம்பம் என்று குறிப்பிடப்படுகிறது.

          வீடுகளில், வயல்களில் சிறு தோட்டம் அமைப்பது போன்ற குறிப்பிட்ட தேவைகளுக்காக கொல்லை என்று ஒதுக்கப்படும் நிலங்கள், படப்பு, துடவை, விதைப்புனம், முதை, பின்னை போன்ற வார்த்தைகளால் குறிப்பிடப்படும்பத்திரங்களை படிக்கும்போது இது போன்ற வார்த்தைகள் வந்தால் புரியாமல், புரிந்தது போல் நடந்து கொள்ளாமல் விபரம் அறிவது அவசியம்.

           ஆவண எழுத்தர்கள், வருவாய் துறை அதிகாரிகளை அணுகினால் இது போன்ற விஷயங்களில் தெளிவு பெறலாம்சொத்துக்கள் அடுத்தடுத்த நிலைக்கு செல்லும் போது வகைப்பாடுகளும் மாறுகின்றன என்பதை மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள்.

குடியிருப்புகளுக்கான லிப்ட் களின் பராமரிப்பில் கூடுதல் கவனம் தேவை

 குடியிருப்புகளுக்கான லிப்ட் களின் பராமரிப்பில் கூடுதல் கவனம் தேவை !


     இன்றைய சூழலில் அடுக்கு மாடி குடியிருப்புகள் தவிர்க்க முடியாதவையாக உள்ளனஇதற்கு ஏற்ப வீடு வாங்குவோர் செயல்பட வேண்டியது அவசியமாகிறது.

     இதில் குறிப்பாக, மேல் தளங்களுக்கு செல்ல மாடிப்படிகளே பிரதான வழியாக இருந்தனஇந்த சூழல் தற்போது மாறிவிட்டதுபெரும்பாலான குடியிருப்புகளில் மேல் தளங்களுக்கு செல்ல 'லிப்ட்' கள் அமைக்கப்படுகின்றன.

      கட்டுமான நிறுவனங்களே லிப்ட் வைத்து வீடு கட்டுவதில் கவனம் செலுத்துகின்றனஆரம்பத்தில் கவனம் செலுத்த வேண்டிய பணிகளை கட்டுமான நிறுவனம் பொறுப்பேற்றுக்கொள்ளும்.

    அதன்பின் பயன்பாட்டு நிலையில், லிப்ட் பராமரிப்பு என்பது வீட்டு உரிமையாளர்களின் பொறுப்பாகும்.

     இதில் வீட்டு உரிமையாளர்கள் ஏற்படுத்தி உள்ள சங்கம் வாயிலாகவே பராமரிப்பு பணிகள் நடக்கும்.

      இயல்பு நிலையில், லிப்ட் பயன்பாட்டில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து யோசித்து அதற்கான தீர்வு காண வேண்டும்.

       பல இடங்களில் லிப்டில் அதன் மொத்த சுமை தாங்கும் திறன் எத்தனை கிலோ என்று குறிப்பிடப்பட்டு இருக்கும்.

        இதைவிட, எத்தனை நபர்கள் செல்லலாம் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும்இதில், பொருட்கள் எடுத்துச் செல்லப்படும் நிலையில், மற்றவர்கள் செல்லலாமா என்பது குறித்து தெளிவாக குறிப்பிட வேண்டும்.

        பெரிய கட்டடங்களில் அடித்தளத்தில் இருந்து லிப்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கும்இதில், அடித்தளங்கள் 1 .1 , 1 .2 என்று மட்டுமே குறிப்பிடப்படும்.

         இந்தத் தளங்கள் என்ன பயன்பாட்டுக்கானது என்பதையும் லிப்டில் குறிப்பிடுவது நல்லதுஉதாரணமாக, ஒரு கட்டடத்தில் முதலாவது அடித்தளம் கார்கள் நிறுத்தவும், இரண்டாவது அடித்தளம் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தவும் ஒதுக்கப்பட்டு இருக்கும்.

         இதை லிப்டிலேயே தெளிவாக குறிப்பிட்டால் அதை பயன்படுத்துவோர் சிரமம் இன்றி செல்லலாம்மேலும், அவசர நிலையில் லிப்ட்டினுள் சிக்குவோர் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான குறிப்புகள் அதற்குள் ஒட்டப்பட்டு இருக்க வேண்டும்.

          இதில், அவசர உதவிக்கான தொலைபேசி எண் குறிப்பிடுவது அவசியம்மேலும் புதிதாக வரும் லிப்ட்களில் உள்ளே இருப்பவர் ஒரு பட்டனை அழுத்தி அதன் பராமரிப்பு பொறுப்பாளருடன் தொடர்பு கொள்ளும் வகையில் வசதிகள் வந்துள்ளன.

            இது போன்ற வசதிகளை உரிய முறையில் செய்ய கட்டுமான நிறுவனங்களும், வீட்டு உரிமையாளர் சங்கங்களும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே வீடு வாங்குவோரின் எதிர்பார்ப்பு.

வசதியுரிமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு இல்லாததால் ஏற்படும் சிக்கல்கள்

 வசதியுரிமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு இல்லாததால் ஏற்படும் சிக்கல்கள்


நமது நாட்டில் பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தில் தான் நில நிர்வாகம் சார்ந்த பல்வேறு புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.  இவ்வகையில், வசதியுரிமைகள் சட்டம், 1882 ல் நிறைவேற்றப்பட்டது.

       நாடு சுதந்திரம் பெற்ற பின் இதில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டாலும், அடிப்படை சட்டம் இன்னும் பயன்பாட்டில் உள்ளதுஇந்த சட்டம் எப்படி, யாருக்கு பயன்படும் என்பது பொது மக்களுக்கு தெளிவாக தெரிவதில்லை.

       குறிப்பாக, பத்திரப்பதிவுச் சட்டம், நிலம் கையகப்படுத்துதல் சட்டம், வாரிசுச் சட்டம் அளவுக்கு இந்த சட்டம் மக்கள் பயன்பாட்டில் வருவதில்லைஉண்மையில் சொத்துக்கள் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கு இந்த சட்டம் வாயிலாக மட்டுமே தீர்வு கிடைக்கும்.

         முதலில் வசதியுரிமை என்றால் என்ன என்பதை மக்கள் எப்படி புரிந்து கொள்வதுஇயற்கை வாய்க்கால்கள், ஆறுகள், ஓடைகள், ஏரிகள், பொது செலவில் கட்டப்பட்டுள்ள சாலைகள், கட்டடங்கள், அமைப்புகளை பயன்படுத்த பொது அடிப்படையில் அனைவருக்கும் உரிமையை வரையறுப்பதே இச்சட்டத்தின் அடிப்படை.

          இவ்வாறு வரையறுக்கப்படும் பொது அமைப்புகள் பயன்பாட்டு உரிமையை யாராவது ஒருவர் தன்னுடையதாக சொந்தம் கொண்டாடுவது தடை செய்யப்படுகிறது.

          அப்படி யாராவது, பிறரின் உரிமையை பறிக்கும் வகையில் நடந்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைப்பதற்கான வழிமுறைகளை இச்சட்டம் தெளிவுபடுத்துகிறது.

           கிராமங்களில் வயல்களை வைத்துள்ளவர்கள் தான் பெரும்பாலும் இப்பிரச்னையை சந்திப்பார்கள்நீர் பாசன வாய்க்கால்களை சில நில உரிமையாளர்கள் தடுத்து பயன்படுத்தும் நிலையில் பின் பகுதியில் உள்ளவர்களின் வசதியுரிமைகள் பறிக்கப்படுகிறதுஇதே போன்று, பாதை வசதியும் முன் பகுதி நில உரிமையாளர்களால் கபளீகரம் செய்யப்படுவது உண்டு.

            இதனால், பல சமயங்களில் இரண்டு நபர்களுக்கு இடையிலான பிரச்னை, சாதி, சமுதாய, ஊர் அடிப்படையில் பெரிய கலவரங்களுக்கு கூட வழிவகுத்துவிடுகிறது.

             நிலங்கள் வீட்டுமனைகளாக பிரிக்கப்படும் நிலையிலும் ஒவ்வொரு மனைக்கும் முறையான பாதை வசதி இருக்க வேண்டும்அது மறுக்கப்படும் நிலையில் வசதியுரிமைச் சட்டம் செயல்பட வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

            இத்தகைய சூழலில் அரசு நிர்வாகம் தலையிட்டு அனைத்து நபர்களின் வசதியுரிமையை உறுதிபடுத்த வேண்டும்அரசு நிர்வாகம் இதை செய்ய தவறினால், பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் வாயிலாக தீர்வு பெறலாம் என்கின்றனர் சட்ட வல்லுனர்கள்.

When buying a 3BHK luxury apartment in Chennai - By using this checklist

  When buying a 3BHK luxury apartment in Chennai, you’ll want to ensure the property meets both your practical needs and long-term investmen...