வீடு வாங்குவோர் விசாரித்து அறிய வேண்டிய புதிய தகவல்கள்!
இதையடுத்து, எந்த பகுதியில் எத்தகைய திட்டத்தில் வீட்டை வாங்குவது என்பதில் சரியான முடிவு எடுக்க வேண்டும்.
இதில் உங்களுக்கு அனைத்து வகையிலும் பொருத்தமான குடியிருப்பு திட்டத்தைத் தேர்வு செய்வது சவாலான பணியாகும்.
எந்த பகுதி என்பது முடிவாகிவிட்டால் அதில் எந்த திட்டம் என்பதை தெரிவு செய்ய வேண்டும். இதில்
சம்பந்தப்பட்ட திட்டம் முறையாக அனுமதி பெறப்பட்டு, விதிகளை மீறாமல் கட்டுப்பட்டுள்ளதா என்று விசாரிக்க வேண்டும்.
அந்த சொத்தின் ஆவணங்களில் வில்லங்கம் எதுவும் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
வில்லங்கம் இருப்பது தெரிய வந்தால், கட்டுமான நிறுவனம் அதற்கு என்ன பதில் அளிக்கிறது என்பதையும் அறிய வேண்டும்.
அவர்கள் அளிக்கும் பதில் சட்ட ரீதியான கேள்விகளுக்கு தீர்வாக இருந்தால் தொடர்ந்து அடுத்த கட்டத்துக்கு செல்லலாம்.
கட்டுமானத் திட்டங்களைச் சார்ந்த பொதுவாக பல்வேறு விஷயங்களை விசாரிப்பது வழக்கம்.
இதில் கூடுதலாக புதிய சில கேள்விகளை கேட்க வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. நீங்கள்
வாங்க நினைக்கும் வீடு அமைந்துள்ள குடியிருப்பு திட்டத்துக்கான தரக் குறியீடு என்ன என்பதை விசாரித்து அறிய வேண்டும். இதன்பின்,
அத்திட்டம் அமைந்துள்ள பகுதி எந்த வகை நிலநடுக்க மண்டலத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை விசாரிக்க வேண்டும்.
கட்டுமானத் திட்ட அனுமதி வழங்கும் நிலையிலேயே இதை அரசுத் துறைகள் விசாரிப்பது நல்லது.
புதிதாக கட்டப்படும் குடியிருப்பு திட்டத்துக்கு அனுமதிக்கப்பட்ட மின்சார அளவு என்ன என்பதை கேட்க வேண்டும். அதிலும்,
ஒவ்வொரு தளத்துக்கும் அனுமதிக்கப்பட்ட மின்சார அளவு என்ன என்று அறிய வேண்டும்.
இந்த அனுமதிக்கப்பட்ட மின்சார அளவை பயன்படுத்தும் வகையிலான கட்டமைப்பு வசதிகள் உள்ளதா என்றும் சரி பார்ப்பது அவசியம். அந்த
குடியிருப்பில் பொது வசதிகள் என்னென்ன செய்யப்பட உள்ளன என்பதை பட்டியலாக பெற்று அதை கட்டுமான ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டும்.
கட்டுமானப் பணிகள் முடிந்த குடியிருப்பு திட்டம் எனில், அதில், பொது வசதிகள் என்னென்ன செய்யப்பட்டுள்ளன என்பதை அறிய வேண்டும். இந்த
வசதிகள் குழந்தைகள், பெரியவர்கள் பாதுகாப்பாக பயன்படுத்தும் வகையில் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.
நீங்கள் வீடு வாங்கும் குடியிருப்பில், கட்டுமான நிறுவனம் என்னென்ன இயந்திரங்களை நிறுவியுள்ளது என்பதை அறிய வேண்டும். குறிப்பாக,
லிப்ட், கண்காணிப்பு கேமிரா, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், தண்ணீர் ஏற்றும் மோட்டார்கள் போன்ற விஷயங்களையும் விசாரிப்பது நல்லது என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.
No comments:
Post a Comment