Sunday, May 14, 2023

உரிமையாளர், பவர் முகவர் இடையே பிரச்னை உள்ள சொத்துக்களை வாங்கலாமா?

 உரிமையாளர், பவர் முகவர் இடையே பிரச்னை உள்ள சொத்துக்களை வாங்கலாமா?

வீடு, மனை உள்ளிட்ட அசையா சொத்துக்களை வாங்கும் போது அதில் வில்லங்கம் எதுவும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  இதில் முந்தய பத்திரப்பதிவு தொடர்பான வில்லங்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தப்படுகிறது.

      ஆனால், சொத்து விற்பனையில் 'பவர் பத்திரம்' எனப்படும் பொது அதிகார ஆவண ரீதியாக உள்ள வில்லங்கங்கள் மீது மக்கள் கவனம் செலுத்துவதில்லை.  ஒரு உரிமையாளர் தன் பெயரில் உள்ள சொத்தை விற்க, இன்னொருவரை முகவராக நியமிக்க பவர் பத்திரம் உதவுகிறது.

        முறையாக பதிவு செய்யப்படாத பவர் பத்திரம் செல்வது.  அதுவும், பவர் பத்திரத்தில் விற்பனைக்கான அதிகாரம் முகவருக்கு கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.

        விற்பனை அதிகாரம் இன்றி குறிப்பிட்ட சில பணிகளுக்காக 'பவர்' வழங்கப்படுவது உண்டு.  இவ்வாறு, வேறு நோக்கத்தில் அளிக்கப்பட்ட பொது அதிகாரத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் விற்பனை செல்லாது.  பவர் பாத்திரங்களை பொறுத்தவரை, உரிமையாளர், முகவர் இடையே நல்ல உறவு இருக்க வேண்டும்.  இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவரையொருவர் சந்திக்க முடியாத நிலை இருந்தால் அத்தகைய சொத்துக்களை வாங்குபவர் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

       இவர்களுக்குள் பிரச்னை உள்ள நிலையில் முகவரை நம்பி ஒருவர் சொத்து வாங்க வந்தால், அதற்கு எதிரான வேலையில் உரிமையாளர் இறங்கலாம்.  இதனால், அந்த விற்பனையை பதிவு செய்ய முடியாத நிலை கூட ஏற்படலாம்.

        எனவே, உரிமையாளர், முகவர் இடையே சூழல் எப்படி உள்ளது என்று பார்த்து அதற்கு ஏற்ற வகையில் செயல்பட வேண்டும்.  சில சமயங்களில் உரிமையாளர், பொது அதிகாரத்தை ரத்து செய்ய நினைக்கலாம்.  இதற்கு முகவர் எதிர்ப்பு தெரிவிக்கலாம்.  இத்தகைய சூழலில் சொத்து வாங்குவோர் புதிய சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும்.  பவர் முகவர் விற்பனையை அனுமதிக்க கூடுதல் தொகை கேட்டு தகராறு செய்யலாம்.

             இது போன்ற பிரச்னைகளால் ஏற்படும் கூடுதல் செலவை, விலையில் சேர்க்க ஒப்புக் கொள்ளாதீர்.  உரிமையாளர் ஆட்சேபத்தை சரி செய்ய வேண்டிய பொறுப்பு முகவருடையது.

              அதே போன்று முகவரால் எழும் ஆட்சேபத்தை சரி செய்ய வேண்டிய பொறுப்பு உரிமையாளருடையது.  சொத்து வாங்குவோர் இதை புரிந்து செயல்பட வேண்டும் என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள்.


No comments:

Post a Comment

மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு

  மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு 'சென்னை பெருநகர் பகுதிக்கான மூன்றாவது முழுமை திட்டத்துக்காக, 28 தலைப்ப...