Wednesday, May 10, 2023

குடியிருப்புகளுக்கான லிப்ட் களின் பராமரிப்பில் கூடுதல் கவனம் தேவை

 குடியிருப்புகளுக்கான லிப்ட் களின் பராமரிப்பில் கூடுதல் கவனம் தேவை !


     இன்றைய சூழலில் அடுக்கு மாடி குடியிருப்புகள் தவிர்க்க முடியாதவையாக உள்ளனஇதற்கு ஏற்ப வீடு வாங்குவோர் செயல்பட வேண்டியது அவசியமாகிறது.

     இதில் குறிப்பாக, மேல் தளங்களுக்கு செல்ல மாடிப்படிகளே பிரதான வழியாக இருந்தனஇந்த சூழல் தற்போது மாறிவிட்டதுபெரும்பாலான குடியிருப்புகளில் மேல் தளங்களுக்கு செல்ல 'லிப்ட்' கள் அமைக்கப்படுகின்றன.

      கட்டுமான நிறுவனங்களே லிப்ட் வைத்து வீடு கட்டுவதில் கவனம் செலுத்துகின்றனஆரம்பத்தில் கவனம் செலுத்த வேண்டிய பணிகளை கட்டுமான நிறுவனம் பொறுப்பேற்றுக்கொள்ளும்.

    அதன்பின் பயன்பாட்டு நிலையில், லிப்ட் பராமரிப்பு என்பது வீட்டு உரிமையாளர்களின் பொறுப்பாகும்.

     இதில் வீட்டு உரிமையாளர்கள் ஏற்படுத்தி உள்ள சங்கம் வாயிலாகவே பராமரிப்பு பணிகள் நடக்கும்.

      இயல்பு நிலையில், லிப்ட் பயன்பாட்டில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து யோசித்து அதற்கான தீர்வு காண வேண்டும்.

       பல இடங்களில் லிப்டில் அதன் மொத்த சுமை தாங்கும் திறன் எத்தனை கிலோ என்று குறிப்பிடப்பட்டு இருக்கும்.

        இதைவிட, எத்தனை நபர்கள் செல்லலாம் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும்இதில், பொருட்கள் எடுத்துச் செல்லப்படும் நிலையில், மற்றவர்கள் செல்லலாமா என்பது குறித்து தெளிவாக குறிப்பிட வேண்டும்.

        பெரிய கட்டடங்களில் அடித்தளத்தில் இருந்து லிப்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கும்இதில், அடித்தளங்கள் 1 .1 , 1 .2 என்று மட்டுமே குறிப்பிடப்படும்.

         இந்தத் தளங்கள் என்ன பயன்பாட்டுக்கானது என்பதையும் லிப்டில் குறிப்பிடுவது நல்லதுஉதாரணமாக, ஒரு கட்டடத்தில் முதலாவது அடித்தளம் கார்கள் நிறுத்தவும், இரண்டாவது அடித்தளம் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தவும் ஒதுக்கப்பட்டு இருக்கும்.

         இதை லிப்டிலேயே தெளிவாக குறிப்பிட்டால் அதை பயன்படுத்துவோர் சிரமம் இன்றி செல்லலாம்மேலும், அவசர நிலையில் லிப்ட்டினுள் சிக்குவோர் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான குறிப்புகள் அதற்குள் ஒட்டப்பட்டு இருக்க வேண்டும்.

          இதில், அவசர உதவிக்கான தொலைபேசி எண் குறிப்பிடுவது அவசியம்மேலும் புதிதாக வரும் லிப்ட்களில் உள்ளே இருப்பவர் ஒரு பட்டனை அழுத்தி அதன் பராமரிப்பு பொறுப்பாளருடன் தொடர்பு கொள்ளும் வகையில் வசதிகள் வந்துள்ளன.

            இது போன்ற வசதிகளை உரிய முறையில் செய்ய கட்டுமான நிறுவனங்களும், வீட்டு உரிமையாளர் சங்கங்களும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே வீடு வாங்குவோரின் எதிர்பார்ப்பு.

No comments:

Post a Comment

மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு

  மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு 'சென்னை பெருநகர் பகுதிக்கான மூன்றாவது முழுமை திட்டத்துக்காக, 28 தலைப்ப...