Wednesday, May 10, 2023

வசதியுரிமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு இல்லாததால் ஏற்படும் சிக்கல்கள்

 வசதியுரிமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு இல்லாததால் ஏற்படும் சிக்கல்கள்


நமது நாட்டில் பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தில் தான் நில நிர்வாகம் சார்ந்த பல்வேறு புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.  இவ்வகையில், வசதியுரிமைகள் சட்டம், 1882 ல் நிறைவேற்றப்பட்டது.

       நாடு சுதந்திரம் பெற்ற பின் இதில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டாலும், அடிப்படை சட்டம் இன்னும் பயன்பாட்டில் உள்ளதுஇந்த சட்டம் எப்படி, யாருக்கு பயன்படும் என்பது பொது மக்களுக்கு தெளிவாக தெரிவதில்லை.

       குறிப்பாக, பத்திரப்பதிவுச் சட்டம், நிலம் கையகப்படுத்துதல் சட்டம், வாரிசுச் சட்டம் அளவுக்கு இந்த சட்டம் மக்கள் பயன்பாட்டில் வருவதில்லைஉண்மையில் சொத்துக்கள் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கு இந்த சட்டம் வாயிலாக மட்டுமே தீர்வு கிடைக்கும்.

         முதலில் வசதியுரிமை என்றால் என்ன என்பதை மக்கள் எப்படி புரிந்து கொள்வதுஇயற்கை வாய்க்கால்கள், ஆறுகள், ஓடைகள், ஏரிகள், பொது செலவில் கட்டப்பட்டுள்ள சாலைகள், கட்டடங்கள், அமைப்புகளை பயன்படுத்த பொது அடிப்படையில் அனைவருக்கும் உரிமையை வரையறுப்பதே இச்சட்டத்தின் அடிப்படை.

          இவ்வாறு வரையறுக்கப்படும் பொது அமைப்புகள் பயன்பாட்டு உரிமையை யாராவது ஒருவர் தன்னுடையதாக சொந்தம் கொண்டாடுவது தடை செய்யப்படுகிறது.

          அப்படி யாராவது, பிறரின் உரிமையை பறிக்கும் வகையில் நடந்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைப்பதற்கான வழிமுறைகளை இச்சட்டம் தெளிவுபடுத்துகிறது.

           கிராமங்களில் வயல்களை வைத்துள்ளவர்கள் தான் பெரும்பாலும் இப்பிரச்னையை சந்திப்பார்கள்நீர் பாசன வாய்க்கால்களை சில நில உரிமையாளர்கள் தடுத்து பயன்படுத்தும் நிலையில் பின் பகுதியில் உள்ளவர்களின் வசதியுரிமைகள் பறிக்கப்படுகிறதுஇதே போன்று, பாதை வசதியும் முன் பகுதி நில உரிமையாளர்களால் கபளீகரம் செய்யப்படுவது உண்டு.

            இதனால், பல சமயங்களில் இரண்டு நபர்களுக்கு இடையிலான பிரச்னை, சாதி, சமுதாய, ஊர் அடிப்படையில் பெரிய கலவரங்களுக்கு கூட வழிவகுத்துவிடுகிறது.

             நிலங்கள் வீட்டுமனைகளாக பிரிக்கப்படும் நிலையிலும் ஒவ்வொரு மனைக்கும் முறையான பாதை வசதி இருக்க வேண்டும்அது மறுக்கப்படும் நிலையில் வசதியுரிமைச் சட்டம் செயல்பட வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

            இத்தகைய சூழலில் அரசு நிர்வாகம் தலையிட்டு அனைத்து நபர்களின் வசதியுரிமையை உறுதிபடுத்த வேண்டும்அரசு நிர்வாகம் இதை செய்ய தவறினால், பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் வாயிலாக தீர்வு பெறலாம் என்கின்றனர் சட்ட வல்லுனர்கள்.

No comments:

Post a Comment

மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு

  மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு 'சென்னை பெருநகர் பகுதிக்கான மூன்றாவது முழுமை திட்டத்துக்காக, 28 தலைப்ப...