தனி நபர்களின் பெயரில் உள்ள சொத்துக்களை வாங்குவதில் பெரும்பாலும் உரிமை சார்ந்த சிக்கல்கள் இருப்பதில்லை. ஆனால்,கூட்டு உரிமையில் உள்ள சொத்துக்களை பகுதியாக வாங்குவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன.
நம்
நாட்டில் இந்து கூட்டு குடும்ப முறை தான் பரவலாக இருந்தது. பல்வேறு
தலைமுறைகளாக சொத்துக்கள் பராமரிக்கப்பட்டு வந்தன, தற்போது இத்தகைய சொத்துக்கள் உள்ளன. இவ்வாறு,
கூட்டு குடும்பத்தில் பரம்பரை சொத்துக்கள் பொதுவில் பராமரிக்கப்பட்டு, குடும்ப உறுப்பினர்களுக்கு பயன்கள் கிடைத்து வந்தன. ஆனால்,
சமீபகாலமாக இத்தகைய கூட்டு குடும்ப பராமரிப்பில் உள்ள சொத்துக்கள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ விற்பனைக்கு வருகின்றன.
இதில் கூட்டு குடும்ப உறுப்பினர் ஒருவர் தனக்கான பாகத்தை விற்பதற்கு உரிமை உள்ளவராகிறார். அவர்
தனது சட்ட பூர்வ உரிமை அடிப்படையில் சொத்தில் தனக்கான பாகத்தை விற்கலாம். ஆனால்,
விற்பவர் நிலையில் பிரச்னைகள் இல்லை என்றாலும், அச்சொத்தை வாங்குபவர், இதில் கூடுதல் விஷயங்களை கவனிக்க வேண்டும். குறிப்பாக,
கூட்டு பொறுப்பில் உள்ள சொத்தில், விற்பனைக்கு வரும் பாகத்தை தற்போதைய நிலை என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
அந்த சொத்தை வெளியார் வாங்கினால், அதை அவர் இயல்பு நிலையில், தன் விருப்பப்படி பயன்படுத்த முடியுமா என்பதை ஆராய வேண்டும். பொதுவாக,
கூட்டு பொறுப்பில் நிலத்தின் மைய பகுதி, இறுதி பகுதி போன்ற பாகங்களை அதற்கான பங்குரிமையாளர் விற்கின்றனர் என்றால், அதற்கு உரிய பாதை வசதி உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
மேலும், கூட்டு குடும்ப உறுப்பினர்கள் பெரும்பான்மையாக உள்ள இடத்தில் தனி நபராக சொத்து வாங்கும் வெளியார் சிக்கிக் கொள்ள கூடாது. இது
போன்ற விஷயத்தில் விற்பவரின் சட்டபூர்வ உரிமையை சரி பார்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
விற்பவர், அவருக்கு உரிய பங்கை தான் விற்கிறார் என்பதை முழுமையாக தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். இதில்,
தன்னுடைய பங்கு என்று அடுத்தவரின் பங்கை விற்பவர்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இது
போன்ற சொத்துக்களை வாங்குவதற்கு முன் சர்வே அதிகாரிகள் வாயிலாக ஆய்வு செய்வது கூடுதல் பாதுகாப்பை அளிக்கும் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள்.
No comments:
Post a Comment