Friday, March 22, 2024

அடுக்குமாடி குடியிருப்புகளில் தேவைப்படும் புதிய பொது வசதிகள் என்ன?

 அடுக்குமாடி குடியிருப்புகளில் தேவைப்படும் புதிய பொது வசதிகள் என்ன? 

இன்றைய சூழலில் அடுக்குமாடி குடியிருப்புகள் தவிர்க்க முடியாத அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளன. இத்திட்டங்களில் வீடு வாங்குவோர் பல்வேறு விஷயங்களில் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும்.கால மாற்றத்துக்கு ஏற்ப அடுக்குமாடி குடியிருப்புகளின் தேவைகள் மாறி வருகின்றன. வீடு வாங்குவோர், பத்திரம், வரைபடம் போன்ற விஷயங்களை மட்டும் பார்த்தால் போதாது.  வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும். இதில் குடிநீர், கழிவுநீர் வடிகால், மின்சாரம் போன்ற வசதிகளை கட்டுமான நிறுவனம் முறையாக செய்து தர வேண்டும். 

பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள் அடிப்படை வசதிகள் விஷயத்தில் உரிய முக்கியத்துவம் கொடுக்க துவங்கியுள்ளனர்.  இருப்பினும், சில கூடுதல் வசதிகள் அவசிய தேவையாக மாறி வருகின்றன.குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்புகளில், 50 வீடுகளுக்கு மேல் கட்டப்படும் நிலையில் தனியாக மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும். இதற்கு உரிய இடவசதியை கட்டுமான நிலையிலேயே ஏற்படுத்த வேண்டும்.இதில் தற்போது ஓரளவுக்கு விழிப்புணர்வு வந்துள்ளது. ஆனால், தற்போது, தொலைப்பேசி இணைப்புகள், இணையதள சேவைகளுக்கான வசதிகளையும் கட்டுமான நிலையிலேயே செய்ய வேண்டும்.

குறிப்பாக, இணைதள சேவை வழங்கும் நிறுவனங்கள் குடியிருப்பு வளாகங்களில், தனியாக சர்வர் அமைப்பது அவசியமாகிறது. ஒரு குடியிருப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் சேவை வழங்க வருகின்றன.இது போன்ற நிறுவனங்களின் கட்டமைப்புகள், குடியிருப்பு வாசிகளுக்கு தொல்லை தருவதாக இருக்கக் கூடாது.


மேலும், இணையதளம், கேபிள் டிவி போன்ற சேவைகளுக்கு தேவையான சர்வர் அமைப்பதற்கான இடம், மின்சார இணைப்பு வசதிகளை ஆரம்ப நிலையிலேயே ஏற்படுத்த வேண்டும். இத்துடன் சி.சி.டி.வி., கண்காணிப்புக்கான இடத்தையும் ஏற்படுத்த வேண்டும்.கட்டட வடிவமைப்பு நிலையிலே இது போன்ற வசதிகளுக்கான இடங்களை ஒதுக்க வேண்டும். அப்போது தான் பயன்பாட்டு நிலையில் பிரச்னைகளை தவிர்க்க முடியும் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.

No comments:

Post a Comment

Why Do Redevelopment Projects Get Stuck

  Why Do Redevelopment Projects Get Stuck ? Let’s understand the challenges that often impede the progress of redevelopment projects and unc...