Tuesday, November 21, 2023

கட்டுமான நிறுவனங்களிடம் நியாயமாக நடந்துகொள்ள வேண்டியது அவசியம்!

 கட்டுமான நிறுவனங்களிடம் நியாயமாக நடந்துகொள்ள வேண்டியது அவசியம்!

வீடு கட்டுவது என்பது தனி ஒருவர் சார்ந்த விஷயம் அல்ல என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.  உங்களுக்கான வீடு கட்டுவதில் பல்வேறு நிலையில் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட வேண்டியது இருக்கிறது.
        இதில், பெரும்பாலும், நமக்கு கட்டுமான நிறுவனங்கள், பணியாளர்கள் மட்டுமே கண்ணில் தெரிகின்றனர்.  ஆனால், பிற நிலையில் பங்கேற்ற பலர் நம் கண்ணில் படுவதே இல்லை.
        புதிதாக சொந்த வீடு கட்டும் திட்டத்தை செயல் படுத்தும் போது முதலில், அதில் எந்த வகையிலும் நாம் நஷ்டப்பட கூடாது என்று நினைப்போம்.  அதே போன்று, நமக்காக வீடு கட்டும் பணியை ஏற்று செயல்படுத்தும் நிறுவனமும் நஷ்டப்பட கூடாது.
         உங்கள் வீடு கட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களும் நஷ்டப்பட கூடாது என்று நினைக்க வேண்டும்.  இதில் கட்டுமான நிறுவனங்கள், பணியாளர்களால் நாம் ஏமாற்றப்பட கூடாது என்று பலரும் நினைக்கின்றனர்.
       அதே நேரத்தில் நாம், நம் எதிர்பார்ப்புகள் வாயிலாக அவர்களை நஷ்டமடைய விட கூடாது என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.  உதாரணமாக, உங்கள் வீட்டை கட்டும் பணியை, சதுர அடிக்கு, 1,900 ரூபாய் விலையில் ஒருவர் ஏற்று இருப்பார்.
       அவரிடம், அதற்க்குள் அடங்கும் வகையில் கூடுதல் வசதிகளை எதிர்பார்ப்பதால் பிரச்னை இல்லை.  ஆனால், சதுர அடி, 3,000 ரூபாய்க்கு கட்டும் திட்டத்தில் செய்து கொடுக்கப்படும் வசதிகளையும் நமக்கான கட்டுமான நிறுவனத்திடம் எதிர்பார்ப்பது சிக்கலை ஏற்படுத்தும்.
      வீடு கட்டும் பணிகளை ஒவ்வொரு நிறுவனமும் தொழில் முறையில் தான் மேற்கொள்கிறது.  இதில் லாபம் பார்க்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.
       அதே நேரத்தில் கொள்ளை லாபம் பார்க்க நினைக்கும் சிலரும் இத்தொழிலில் இருக்கின்றனர்.  இதில், எது நியாயமான லாபம் பார்க்கும் நிறுவனம் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

       சில இடங்களில் நியாயமாக கட்டுமான பணிகளை முடித்து கொடுத்த கட்டுமான நிறுவனத்துக்கு கடைசி பங்கு தொகையை நிலுவை வைத்து அலைக்கழிப்பவர்கள் இருக்கின்றனர்.  இது போன்ற நபர்கள் போல, வேண்டுமென்றே கட்டுமான பணிகளை கிடப்பில் போடும் நிறுவனங்களும் இருக்கின்றன.

        வீடு கட்டுவதில் முதலில் நாம் நியாயமாக நடந்து கொள்ள முடிவு செய்ய வேண்டும்.  அதன் பின் கட்டுமான நிறுவனத்திடம் நியாயமான எதிர்பார்ப்புகளை முன்வைக்க வேண்டும்.

         இதில் பரஸ்பரம் புரிதலுடன் உரிமையாளர்களும், கட்டுனர்களும் செயல் பட்டால் சச்சரவுகள் தவிர்க்கப்படும் என்கின்றனர் இத்துறை வல்லுனர்கள்.

No comments:

Post a Comment

புதிய வீட்டுக்கு அலங்கார மின் விளக்குகளை தேர்வு செய்வதில் கவனிக்க

  புதிய வீட்டுக்கு அலங்கார மின் விளக்குகளை தேர்வு செய்வதில் கவனிக்க புதிதாக வீடு கட்டும் போது அதன் ஒவ்வொரு பாகமும் எப்படி இருக்க வேண்டும் என...