Tuesday, November 21, 2023

கிரைய பத்திரம் தயாரிப்பில் ஆவண எழுதர்களை தேர்வு செய்வது எப்படி?

 கிரைய பத்திரம் தயாரிப்பில் ஆவண எழுதர்களை தேர்வு செய்வது எப்படி?
 சொத்து பரிமாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கான பத்திரங்களை தயாரிப்பதில் ஆவண எழுத்தர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.  இவர்களை முறைப்படுத்த பதிவுத்துறை தேர்வுகள் நடத்தி, சரியான நபர்களுக்கு உரிமம் வழங்கியுள்ளது.
 
தமிழகத்தில், தற்போதைய நிலவரப்படி, பதிவுத்துறை உரிமம் பெற்ற, 3,000க்கு மேற்பட்ட ஆவண எழுத்தர்கள் உள்ளனர்.  இவர்கள் பதிவு சட்டம், முத்திரை சட்டம் திருமண பதிவு சட்டம் போன்றவற்றின் அடிப்படை கூறுகளை அறிந்தவர்களாக இருக்க வேண்டும்.
 
புதிதாக சொத்து வாங்கும் போது, சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தின் அருகில் கடை வைத்து செயல்படும் ஆவண எழுத்தர்களில் யாராவது ஒருவரை தேர்வு செய்கிறோம்.  இதில் பத்திரம் தயாரிப்பில் ஆவண எழுத்தர்களின் பங்களிப்பு அத்தியாவசியமானதாக உள்ளது.
சொத்து பரிமாற்றத்துக்கான ஒரு பத்திரம் எப்படி அமைய வேண்டும் என்பதற்கு அடிப்படை வரையறை உள்ளது. இதற்கான மாதிரிகளை பதிவுத்துறை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இதில், விற்பவர், வாங்குபவர் குறித்த குறிப்புகளுடன், அந்த சொத்து எங்குள்ளது, அது யாரிடம் இருந்து, தற்போதைய விற்பனையாளருக்கு எப்படி கிடைத்தது என்பதை குறிப்பிட வேண்டும்.
சொத்தின் மதிப்பை குறிப்பிடுதல், அளவுகளை குறிப்பிடுதல் ஆகியவற்றில் எதிர்காலத்தில் சிக்கல் வராமல் எழுத வேண்டும்.

சமீபகாலமாக வழக்கறிஞர்கள் ஆவண எழுத்தர்களாக செயல்படுகின்றனர். முறையான உரிமம் பெற்ற ஆவண எழுத்தர், கல்வி தகுதி ரீதியாக வழக்கறிஞராக இருப்பதில் பிரச்சனை இல்லை.ஆனால், வழக்கறிஞராக தொழில் தொடங்கிய நபர், ஆவண எழுத்தர்கள் செயல்படும் நிலையில் தான் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது.இவ்வாறு, அவசர கோலத்தில் ஆவணம் எழுத வந்தவர்கள், தயாரிக்கும் பத்திரங்கள் மிக சுருக்கமாக முடிக்கப்படுகிறது.
 
பத்திரத்தில் அதிக தகவல்களை சேர்த்தால், பதிவின் போது தேவையில்லாத கேள்விகள் எழும். அதனால், பத்திரப்பதிவு பணிகள் தாமதமாகவும் வாய்ப்புள்ளது.
 
விரைவாக வேலையை முடிக்க சிக்கல் இன்றி சுருக்கமாக பத்திரம் எழுதுவது சிறந்தது என்பது இவர்களின் கருத்தாக உள்ளது. பொது மக்களும் விரைந்து முடித்து கொடுக்கிறார் என்பதற்காக இவர்களை அணுகுகின்றனர்.
 
வழக்கறிஞர் பத்திரத்தை படித்து அதில் வில்லங்கம் இருக்கிறதா என்று சரி பார்த்து ஆலோசனை வழங்கலாம். அவரே ஆவண எழுத்தராகவும் செயல்படும் போது நடைமுறையில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.
  
எனவே, உங்கள் கிைரய பத்திரம் தயாரிக்க அனுபவம் வாய்ந்த, உரிமத்துடன் செயல்படும் ஆவண எழுத்தர்களை பயன்படுத்த வேண்டும் என்கின்றனர் சார்-பதிவாளர்கள். 

No comments:

Post a Comment

Why Do Redevelopment Projects Get Stuck

  Why Do Redevelopment Projects Get Stuck ? Let’s understand the challenges that often impede the progress of redevelopment projects and unc...