மைனர் பெயரில் கொடுக்கப்பட்ட சொத்துக்களை வாங்குவோர் கவனிக்க
சொத்து வாங்குவது என்று இறங்கி விட்டால் அதில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, விற்பவர் யார், அவருக்கு அந்த சொத்து எப்படி வந்தது என்பது தொடர்பான விஷயங்களை சட்ட ரீதியாக சரி பார்ப்பது அவசியம்.
இதில், பெரும்பாலும் விற்பவர் சுய சம்பாத்திய அடிப்படையில் வாங்கிய சொத்தாக இருக்கும். அதில் எந்த பிரச்னையும் இல்லை என்று நினைக்காதீர்கள்.
அதற்கான சரிபார்ப்பு ஆய்வுகள் தனியாக மேற்கொள்ளப்பட வேண்டும். இதில் விற்பவர், பரம்பரை வாயிலாக பெற்ற சொத்து எனில் அது குறித்த ஆய்வுகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
உதாரணமாக, கந்தசாமி என்பவர் என்பவர் உரிமையாளர் என்று குறிப்பிட்டு ஒரு சொத்து விற்பனைக்கு வருகிறது.அதை வாங்குவதற்கான நிலையில் நீங்கள் இருந்தால், முதலில் கந்தசாமிக்கு அந்த சொத்து எப்படி வந்தது என்று பார்க்க வேண்டும்.
குறிப்பாக கந்தசாமி சிறுவனாக இருக்கும் போது அவருக்கு அந்த சொத்து எழுதி கொடுக்கப்பட்டது என்றால், அது மைனர் சொத்து வரையறையில் வரும். அப்போது, அதன் காப்பாளர் யார், அவருக்கான பொறுப்புகள் என்ன என்பதை விசாரிக்க வேண்டும்.
தற்போது கந்தசாமி வளர்ந்து சுயமாக முடிவு எடுக்கும் நிலையில் இருக்கலாம். ஆனால், அவர் மைனராக இருக்கும் போது அந்த சொத்து தொடர்பாக காப்பாளர் ஏதாவது விற்பனை அல்லது பரிமாற்ற நடவடிக்கை எடுத்தாரா என்பதை விசாரிக்க வேண்டும்.
பல இடங்களில் மைனர் சொத்துக்களை பாதுகாக்க அமர்த்தப்படும் பாதுகாவலர்கள் நெருங்கிய சொந்தமாக இருப்பார்கள். இதனால், அவர்கள் அந்த சொத்தை பயன்படுத்தி கடன் வாங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் இறங்கி இருக்கலாம்.
இது போன்ற நடவடிக்கைகள் எதிர்காலத்தில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே, மைனர் சொத்துக்களை வாங்கும் போது, அதில் காப்பாளரின் செயல்பாடுகள் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும்.
சொத்து தொடர்பான நிலுவை தாவாக்கள் எதுவும் இருப்பின், அதை தீர்த்த பின், பத்திரம் பதிவது பாதுகாப்பானதாக இருக்கும் என்கின்றனர் சார்-பதிவாளர்கள்.

No comments:
Post a Comment