Saturday, November 18, 2023

புதிய வீடு வாங்குவோர் கட்டுமான நிறுவனங்களை தேர்ந்தெடுப்பது எப்படி?

 புதிய வீடு வாங்குவோர் கட்டுமான நிறுவனங்களை தேர்ந்தெடுப்பது எப்படி?
அடுக்குமாடி குடியிருப்பு அல்லது தனி வீடு எதுவானாலும் அதை யாரிடம் இருந்து வாங்குகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.  இதற்காக, சரியான நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது மிக முக்கியமான ஒன்று.  இன்றைய சூழலில், கட்டுமான நிறுவனங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன.  முதலில், குறைந்த எண்ணிக்கையில் அதாவது, ஐந்து முதல், 10 வீடுகள் வரை அடங்கிய சிறிய குடியிருப்புகளை கட்டுவோர் சிறிய நிறுவனங்களாக உள்ளனர்.
          இதற்கு அடுத்தபடியாக, 15 முதல், 20 வீடுகள் வரை அடங்கிய நடுத்தர குடியிருப்புகளை கட்டும் நிறுவனங்கள்.  அடுத்து, 50 மற்றும் அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் வீடுகள் அடங்கிய பெரிய திட்டங்களை செயல் படுத்தும் நிறுவனங்கள் என மூன்று வகைகள் உள்ளன.
           அதிக வீடுகள் உள்ள பெரிய திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்களில் குறைந்த விலை வீடுகள் கட்டுவோர், ஆடம்பர வீடுகள் கட்டுவோர் என இரு வகை உண்டு.  இது போன்ற வேறுபாடுகளை புரிந்து புதிய வீட்டை யாரிடம் இருந்து வாங்குவது என்பதை தீர்மானிக்க வேண்டும்.
           இதில், சிறிய திட்டங்களை மேற்கொள்ளும் நிறுவனங்களின் திட்டங்களில் உங்களுக்கு கேள்விகள் கேட்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.  கட்டடத்தில் எதாவது பழுது என்றால் அதை சரி செய்து தர வேண்டும் என்று நீங்கள் நேரடியா பில்டரை அணுகி கேட்க முடியும்.
           அதே நேரத்தில் பெரிய திட்டங்களை மேற்கொள்ளும் நிறுவனங்களிடம் நேரடி கேள்விகளுக்கான வாய்ப்புகள் மிக குறைவு.  கட்டுமான நிறுவன உரிமையாளருடன் நேரடி சந்திப்புக்கே வாய்ப்பு இருக்காது.  இத்தகைய நிறுவனங்கள் கார்ப்பரேட் நிலையில் செயல்படுவதால், கட்டுமான நிறுவனம் சார்பில் விற்பனை முகவர் தான் பல்வேறு விஷயங்கள் குறித்து முடிவு செய்வர்.  இதில் கட்டுமான திட்டத்தில் குறைபாடு இருப்பதாக நீங்கள் புகார் கூறினால் அதற்கு தீர்வு கிடைப்பதற்கு தாமதம் ஏற்படும்.
           ஆனால், சிறிய, நடுத்தர திட்டங்களுக்கான நிறுவனங்களை பொறுத்தவரை பிரச்னைகள் ஏற்பட்டாலும், அதில் தீர்வை நோக்கி செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.  சிறிய திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள் கட்டுமான பணியில் காட்டும் கவனத்தைவிட பெரிய திட்டங்களில் நிறுவனங்களின் நேரடி கண்காணிப்பு குறைவாகவே இருக்கும்.
           எனவே, புதிய வீட்டை எத்தகைய நிறுவனத்திடம் வாங்குவது என்பதில் இது போன்ற விஷயங்களையும் கவனிக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள். 

No comments:

Post a Comment

Electric vehicle charging stations: An added benefit or a necessity?

  Electric vehicle charging stations: An added benefit or a necessity? With an increased demand for electric vehicles ( EV s ) , the demand ...