Tuesday, November 14, 2023

வீட்டின் விலையில் வரிகளுக்காக சேர்க்கப்படும் தொகைகளை விசாரிப்பது அவசியம்!

 வீட்டின் விலையில் வரிகளுக்காக சேர்க்கப்படும் தொகைகளை விசாரிப்பது அவசியம்!

புதிதாக வீடு வாங்கும் போது அதற்கான விலை குறித்து பல்வேறு தகவல்களை விசாரிப்பது அவசியம்.  பொதுவாக, சதுர அடி அடிப்படையில் கட்டுமான நிறுவனம் கூறும் விலையின் அடிப்படையிலேயே விற்பனைக்கான பேச்சு நடத்தப்படும்.
       ஆனால், கட்டுமான நிறுவனம் தெரிவிக்கும் விலையின் உள்ளடக்க விபரத்தை வீடு வாங்குவோர் தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.  ஒரு சதுர அடி இவ்வளவு என்று கட்டுமான நிறுவனம் கூறும் நிலையில், அதை இருவேறு நிலைகளில் பிரித்துப்பார்க்க வேண்டும்.
        வீட்டின் விலை என்பதில், 1 சதுர அடிக்கான தொகையில் நிலத்தின் பங்கு, கட்டுமான செலவு ஆகியவை அடங்கி இருக்கும்.  இதற்கு அப்பால், சதுர அடிக்கான விலையில், வரிகள் வகையில் சில தொகைகள் சேர்க்கப்படும்.
        பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள் வீட்டின் மொத்த விலையில் கட்டுமான அனுமதி கட்டணம், கட்டுமான பொருட்கள் தொடர்பான வரித்தொகைகளை சேர்த்து விடுகின்றன.  குறிப்பாக, கட்டுமான பொருட்கள் செலவுத் தொகையில் அதற்கான வரியும் உள்ளடக்கியதாக இருக்கும்.
         ஆனால், வேண்டுமென்றே சில நிறுவனங்கள் வரி உள்ளடக்கிய கட்டுமான பொருட்கள் செலவு தொகையுடன் தனியாக வரி தொகையை சேர்த்து கூடுதல் தொகையை வசூலிக்கின்றன.
         ஜி.எஸ்.டி., வரி சீரமைப்புக்கு பின், கட்டுமான பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி., வரியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.  இதில் வீடு விற்பனைக்கான ஜி.எஸ்.டி., வரி தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  அதே நேரம் கட்டுமான பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி., வரி தனியாக உள்ளது.  இதில் கட்டுமான நிலையில் உள்ள வீட்டின் விற்பனைக்கு மட்டுமே ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படும்.  ஆனால், சில கட்டுமான நிறுவனங்கள் மக்களின் அறியாமையை பயன்படுத்தி, கட்டி முடிக்கப்பட்ட வீட்டிற்கும் ஜி.எஸ்.டி., வரி வசூலிக்கின்றன.  இதை வீடு வாங்குவோர் தெளிவாக விசாரிக்க வேண்டும்.
        வீடு வாங்கும் நிலையில் அதற்கான விலையில் உள்ளடக்கமாக உள்ள வரி தொகை எவ்வளவு, மொத்த விலையில் தனியாக வசூலிக்கப்படும் வரித் தொகை எவ்வளவு என்பதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
        இதில் போதுமான அளவுக்கு மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.   


No comments:

Post a Comment

புதிய வீட்டுக்கு அலங்கார மின் விளக்குகளை தேர்வு செய்வதில் கவனிக்க

  புதிய வீட்டுக்கு அலங்கார மின் விளக்குகளை தேர்வு செய்வதில் கவனிக்க புதிதாக வீடு கட்டும் போது அதன் ஒவ்வொரு பாகமும் எப்படி இருக்க வேண்டும் என...