Wednesday, November 22, 2023

கட்டுமான செலவை குறைக்க பைபர் சிமென்ட் ஷீட்களை பயன்படுத்தலாம்!

 கட்டுமான செலவை குறைக்க பைபர் சிமென்ட் ஷீட்களை பயன்படுத்தலாம்!
  மனை வாங்கி, பதிவு செய்து முடிப்பதற்குள் பாதி ஆயுள் நமக்கு முடிந்திருக்கும்.  இதில், வீடாக, கடையாக, கட்டடமாக அந்த மனையை கட்டி முடிப்பதற்குள் மீதி ஆயுளும் குறைந்து விடும்.

                இதில் நாம் எங்கே வாழ்வது என அலுத்துக் கொள்ளாதீர்.  ஒவ்வொரு கட்டடத்தையும் கவனத்துடன் விழிப்புணர்வோடு கடந்து வந்தால் மிக எளிதாய் வீடு கட்ட முடியும்.


                மனை வாங்கிய பின், மிகப் பெரிய செலவே கட்டுமானப் பொருட்கள் வாங்குவது தான்.  அதிலும், கட்டடங்கள் கட்டுவதில் செலவை குறைப்பதற்கான வழிமுறைகளை தேடுவதில், மக்களுக்கு எப்போதும் ஒரு ஆர்வம் இருக்கும்.


                 எந்த பொருள் எங்கு தரமாக, விலை குறைவாகக் கிடைக்கும் என்பதில், துவங்கி, பொறியாளர், வேலையாட்கள் வரை குறைந்த செலவில் எங்கு கிடைப்பர் வரை தேடியபடியே இருப்போம்.


                இதில், தனி நபர்கள் நிலையில் மட்டுமல்லாது பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்களும் இதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன.


                 கட்டுமான துறையில், தற்போதைய நிலவரப்படி, சிமென்ட் பிரதான பொருளாக உள்ளது.  இதன் தயாரிப்பிலும், பயன்பாட்டிலும் பல்வேறு மாறுதல்கள் செய்து செலவை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  சிமென்ட் என்ற சொல் லத்தின் மொழியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.


                 ‘வேதியியல் ரீதியாக வினைபுரிவது’ என்பதே இச்சொல்லின் பொருளாக கூறப்படுகிறது.


                  இந்த அடிப்படை புள்ளியில் இருந்தே பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.  கம்பிகளை உள்ளீடாக வைத்து சிமென்ட் கலவையை பயன்படுத்தி தளம் அமைப்பதில் ஏற்படும் செலவை குறைப்பதே முதல் நோக்கமாக இருந்தது.  சாலிட் பிளாக் கல்லைப் பயன்படுத்தினால், விரைவில் வேலை முடியும்.  பணியாளர் எண்ணிக்கையும் குறைவாகவே தேவை.


                    கீழ்தளம் மட்டும் போதும் என்றால் கூரையிலும் செலவை குறைக்கலாம்.  ‘சன்சைட்’ அமைத்த பின் சிலாப் தொழில் நுட்பம் மூலம் கூரையை காஸ்டிங் செய்து கொள்ளலாம்.  மேலே இன்னொரு தளம் கட்ட போகிறோம் என்றால் அடித்தளத்துக்கு போட்ட அதே முறையில் மோல்டிங் டெக்னாலஜியில் பிளிந்த் பீம் போட்டு எழுப்பலாம்.  மேலே எழுப்பலாம்.  மேலே எழுப்பப்படும் எடைக்கு ஏற்ப கூரை தடிமன் இருக்க வேண்டும்.  இது போன்ற பல தொழில் நுட்பங்களை பயன்படுத்த முன் வரவேண்டும்.


                 இதன் பலனாக பைபர் கலந்த சிமென்ட் ஷீட்கள் தயாரிக்கப்படுகின்றன.  நமக்கு விருப்பப்பட்ட அளவுகள் தடிமன் அடிப்படையில் தேர்வு செய்து கொள்ளலாம்.


                சிமென்ட் அடிப்படையிலான கான்கிரீட்டை பயன்படுத்தி தளம் அமைப்பதற்கு ஆகும் செலவில், மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இதற்கு ஆகும்.  செலவு குறைவு என்பதுடன் பயன்படுத்த எளிது என்பதாலும் இது கட்டுமான துறையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


                கீற்று பயன்படுத்தி குடிசைகள் அமைத்தால் தீ விபத்துகளுக்கு ஆபத்து ஏற்படும்.  அதே இடத்தில் பைபர் சிமென்ட் ஷீட்களை பயன்படுத்தினால் இந்த அபாயம் இல்லை.


                 ஒரு இடத்தில் கூரை அமைக்க பயன்படுத்தப்பட்ட ஷீட்களை வேறு இடத்திலும் எடுத்து சென்று மறுமுறை பயன்படுத்த முடியும்.  மறு சுழற்சியிலும் இதை பயன்படுத்த இயலும் என்கின்றனர் கட்டுமானத் துறை வல்லுனர்கள்.   


No comments:

Post a Comment

மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு

  மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு 'சென்னை பெருநகர் பகுதிக்கான மூன்றாவது முழுமை திட்டத்துக்காக, 28 தலைப்ப...