Wednesday, November 22, 2023

வீடுகளில் பிளம்பிங் அமைப்புகளுக்கான, சரியான திட்டமிடலுக்கு சில ஆலோசனைகள்!

 வீடுகளில் பிளம்பிங் அமைப்புகளுக்கான, சரியான திட்டமிடலுக்கு சில ஆலோசனைகள்!
  கட்டடம் கட்டுவது என்பது அஸ்திவாரம், தூண்கள், பீம்கள், தளம் அமைத்து, சுவர்கள் எழுப்புவது போன்ற பணிகளோடு கட்டுமானப் பணிகள் முடிந்து விடாது.  இதில், மனிதர்கள் வாழ தேவையான அடிப்படை வசதிகளை முறையாக செய்ய வேண்டும்.

               கதவு, ஜன்னல், கட்டில், பீரோ, அலங்காரச் சாமான்கள் இல்லாமல் கூட, ஒரு கட்டடத்தை வீடாக பாவித்துக் கொள்ளலாம்.


               ஆனால், குறிப்பாக, மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிவுநீர் வடிகால், மழைநீர் சேகரிப்பு போன்ற வசதிகளை சரியான முறையில் செய்ய வேண்டும்.  நீர் உள்ளே வருவதற்கும், பயன்படுத்திய கழிவுநீர் வெளியேறுவதற்கும் குழாய்கள் பதிக்க வேண்டும்.


              இதில், ஏதாவது சிறு குறைபாடு ஏற்பட்டாலும் அது ஒட்டுமொத்த நிம்மதியையும் குலைத்து விடும்.


              பொதுவாக, வீடு கட்டுவோர், குடிநீர் இணைப்பு, கழிவுநீர் வடிகால் விஷயங்களில் அலட்சியம் காட்டுவது வழக்கமாக உள்ளது.


               குடிநீர் குழாய்கள் பதிப்பது, பிளம்பிங் பணி, ப்ளம்பரின் வேலை இவையாவும் சரியான முறையில் இருத்தல் மிக அவசியம்.  குடிநீர் குழாய்கள் பதிப்பதில் வைக்கும் கவனத்தை கழிவுநீர் வெளியேறும் குழாய்களின் மீதும் வைக்க வேண்டும்.


              கழிவுநீர் எப்படி போனால் என்ன, வீட்டின் உள் பகுதியில் இருந்து வெளியேறினால் போதும் என்ற எண்ணம் பரவலாக நம் மக்களிடம் காணப்படுகிறது.


              இந்த அலட்சியம் காரணமாக, குழாய்களில் ஏற்படும் கசிவுகள், வீட்டில் வசிப்போரின் சுகாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிடும்.  எனவே, இது போன்ற சிக்கல்களை தவிர்க்க ஆரம்பத்திலேயே சரியான திட்டமிடலுடன் செயல்பட வேண்டும்.

              

         மேல்நிலை தொட்டியில் இருந்து வீட்டின் அறைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் குழாய் எவ்வித சிக்கலும் இல்லாமல், நிறைய வளைவுகள் இல்லாமல் அமைய வேண்டும்.  அதே போன்று சாலையில் இருந்து வீட்டுக்கு பெறப்படும் தண்ணீர் குழாயும் எவ்வித குறுக்கீடும் இன்றி வர வேண்டியது அவசியம்.


              சாலையில் இருந்து வீட்டுக்கு வரும் தண்ணீர் குழாய் வழியில், கழிவுநீர், மழைநீர் வடிகால் குழாய்கள் குறுக்கிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  சில இடங்களில், சாலையில் உள்ள பொதுக் கழிவுநீர் குழாயின் குறுக்கீடு கழிவுநீரின் கசிவாய் நம் வீட்டு குடிநீர் குழாயுடன் சேர்ந்து, மொத்தமாய் கெடுத்து விடும்.


              தப்பான பின், அதை சரி செய்வதை விட இந்த தவறுகள் நடக்கா வண்ணம் முதலிலேயே தெளிவாய் கவனம் எடுத்து செய்து விடுவது முக்கியம்.


               வீட்டில், கழிவுநீர் தனியாகவும், குளியல் அறை, சமையலறை நீர் தனியாகவும் வெளியேற்றப்பட வேண்டும்.


                இப்படி வெளியேறும் நீர், மண்ணில் உறிஞ்சும் படி வெளியேற்றுவது நல்லது.


                கழிவறையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் தனி குழாய்கள் வழியாக, அதற்கான தொட்டி அல்லது பாதாள சாக்கடை இணைப்புக்கு செல்ல வேண்டும்.  இதே போன்று மற்ற அறைகளில் இருந்து வரும் நீர் முறையாக தனி வழியில் வெளியேற்றப்பட வேண்டும்.


                இப்படி வெளியேறும் நீர், மண்ணில் உறிஞ்சும் படி வெளியேற்றுவது நல்லது.


                 கழிவறையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் தனி குழாய்கள் வழியாக, அதற்கான தொட்டி அல்லது பாதாள சாக்கடை இணைப்புகளுக்கு செல்ல வேண்டும்.


                    இதற்கான குழாய்கள் கட்டடத்தின் வெளிப்புற சுவரில் இருந்து, 4 அடி இடைவெளியில் இருக்க வேண்டும்.  கட்டடத்தின் மேற்பகுதியில் இருந்து மழை நீரை வெளியேற்றும் குழாய் கழிவுநீர் வழியில் குறுக்கிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


                   கட்டுமான பணிகளை துவங்கும் நிலையிலேயே இது போன்ற பணிகளுக்கான திட்டமிடல் துவங்க வேண்டும் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.  


No comments:

Post a Comment

When buying a 3BHK luxury apartment in Chennai - By using this checklist

  When buying a 3BHK luxury apartment in Chennai, you’ll want to ensure the property meets both your practical needs and long-term investmen...