Monday, October 16, 2023

பழைய வீட்டை வாங்குவோர் பட்ஜெட்டில் சேர்க்க வேண்டிய செலவுகள்!

 பழைய வீட்டை வாங்குவோர் பட்ஜெட்டில் சேர்க்க வேண்டிய செலவுகள்!
விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நடுத்தர வருவாய் பிரிவு மக்கள் பழைய வீட்டை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.  இதற்காக நீங்கள் தேர்ந்தெடுக்கும் வீடு தொடர்பாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன.
              குறிப்பாக, வீட்டின் அமைவிடம், அதன் தற்போதைய நிலை உள்ளிட்ட விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.  இதில் ஆவணங்கள் ரீதியாக வில்லங்கம் எதுவும் உள்ளதா என்று பார்ப்பது அவசியம்.  அத்துடன் கட்டடத்தின் உறுதித்தன்மை எப்படி உள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும்.  குறிப்பாக, அந்த கட்டடம் தற்போது குடியிருக்க என்ற நிலையில் உள்ளதா என்பதை கவனிப்பது அவசியம்.
             இதில் பழைய வீட்டை வாங்கும்போது சில கூடுதல் செலவுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  உதாரணமாக, 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய வீட்டை வாங்கும் நபர், கட்டுமான பணி முடிந்த நிலையில் உடனடியாக குடியேற முடியும்.
             ஆனால், பழைய வீட்டை பொறுத்த வரை இது சாத்தியமில்லை.  பழைய வீட்டை வாங்குவோர், அதில் பராமரிப்பு செலவுக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை முன்கூட்டியே ஒதுக்க வேண்டும்.  இதில் பெரும்பாலான பழைய வீடுகள் பயன்பாட்டு நிலையில் இருக்கும்.
             எனினும், அந்த வீடுகளில் சுத்தப்படுத்த, புதிய வண்ணம் அடிக்க, உடைப்புகளை சரி செய்ய என சிறு சிறு வேலைகள் என்ற அடிப்படையில் பல்வேறு செலவுகள் வரும்.  பழைய வீட்டை வாங்கும்போது அதற்கான வீட்டுக்கடன் கணக்கீட்டில், பத்திரப்பதிவு செலவு சேர்க்கப்படுகிறது.
             
அது போன்ற பழைய வீட்டை நீங்கள் வாங்குவதாக இருந்தால், அதற்கான பட்ஜெட்டில் பராமரிப்பு செலவு என்ற வகையில், ஒரு லட்சம் ரூபாயை ஒதுக்குவது அவசியம்.  வீட்டை வாங்கியபின் பராமரிப்பு செலவுக்கு பணம் தேடுவது நடைமுறையில் சிக்கலை ஏற்படுத்தும்.
              எனவே, பழைய வீட்டை வாங்குவோர் பராமரிப்பு குறித்தும் ஆரம்பத்திலேயே மதிப்பீடு செய்ய வேண்டும் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.

No comments:

Post a Comment

Electric vehicle charging stations: An added benefit or a necessity?

  Electric vehicle charging stations: An added benefit or a necessity? With an increased demand for electric vehicles ( EV s ) , the demand ...