கட்டுமான திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள் குறித்த சரியான புரிதல் இருந்தால் மட்டுமே வீடு வாங்குவதில் சிக்கல்களை தவிர்க்க முடியும். ஒவ்வொரு கட்டுமான நிறுவனமும் தங்கள் திட்டங்கள் சரியான முறையில் முடிக்கப்பட வேண்டும் என்றுதான் விரும்பும்.
ஆனால், வர்த்தக ரீதியாக ஏற்படும் சில பிரச்னைகளால் கட்டுமான திட்டங்கள் பாதியில் கைவிடப்படும் நிலை ஏற்படுகிறது. இதில், பெரும்பாலும், கட்டுமான திட்டம் சார்ந்த பிரச்னைகளையே மக்கள் கவனிக்கின்றனர். இதற்கு அப்பால், கட்டுமான நிறுவனம் நிர்வாக ரீதியாக சந்திக்கும் பிரச்னைகளும் கட்டுமான பணிகளை பாதிக்கும். உதாரணமாக, ஒரு கட்டுமான நிறுவனம் வெற்றிகரமாக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி இருக்கும்.
ஆனால், புதிதாக ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது, அதில் நிர்வாகத்துக்குள் ஏதாவது பிரச்னை ஏற்படலாம். ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இணைந்து நடத்தும் நிறுவனம் என்றால் அவை பங்குதாரர்களுக்குள் பிரச்னை வரலாம்.
குடும்ப நிறுவனம் என்றால் அவர்களுக்குள் பங்கு பிரிப்பதில் பிரச்னை ஏற்படலாம். இது போன்ற பிரச்னைகள் ஏற்படும் போது, அவர்களின் கட்டுமான திட்ட பணிகள் பாதியில் முடங்க வாய்ப்புள்ளது.
இதற்காக, வீடு வாங்குவோர், ஒவ்வொரு நிறுவனத்தின் உள்ளக விஷயங்களை வெளிப்படையாக விசாரிப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. அதே நேரத்தில் உள்ளக விஷயங்களால் பிரச்னைகள் ஏற்பட்டால் பாதிக்கப்படும் நபர்கள் தீர்வை தேடுவது அவசியம். சில சமயங்களில் கட்டுமான நிறுவனம் வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் திவால் ஆகி இருக்கலாம். இத்தகைய சூழலில் அவர்கள் சம்பந்தப்பட்ட கட்டுமான திட்டத்தை வேறு நிறுவனத்திடம் ஒப்படைப்பது நல்லது.
தங்களது பிரச்னையால் வீடு வாங்க முதலீடு செய்தவர்கள் பாதிக்கப்பட கூடாது என்று கட்டுமான நிறுவன நிர்வாகிகள் நினைக்க வேண்டும்.
அப்போது தான் இத்துறையில் முதலீடு செய்யும் மக்களுக்கு பாதுகாப்பு உணர்வு ஏற்படும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.
No comments:
Post a Comment