சொத்து பாகப்பிரிவினையில் ஏற்படும் இயல்பான சட்ட சிக்கல்கள்!
பொதுவாக இந்து குடும்பங்களில் பரம்பரை சொத்துக்களை பாகப்பிரிவினை செய்வது வழக்கமான ஒன்றாக உள்ளது. மக்களின் அலட்சியம் காரணமாக இதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் ஏற்படுகின்றன.
பாகப்பிரிவினை செய்வது என்பதில் பாரம்பரியமாக பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இருப்பினும் சட்டத்தால் சில வழிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வழிமுறைகளை உணர்ந்து வாரிசுகள் தங்களுக்குள் பாகப்பிரிவினை செய்துக்கொள்ள வேண்டும். இதில் எத்தகைய சொத்துக்கள் பாகப்பிரிவினைக்கு உட்படும் என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
உயில் எழுதப்படாத அனைத்து சொத்துக்களையும் வாரிசுகள் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்ளலாம் என்ற பொதுவான எண்ணம் உள்ளது. தந்தை வழி சொத்துக்கள் மட்டுமே பாகப்பிரிவினைக்கு உட்படும்.
தாயின் பெயரில் வாங்கப்பட்ட சொத்துக்கள் அவரின் தனிப்பட்ட சொத்துக்களாகிவிடும். தந்தையின் சொத்துக்களுக்கு வாரிசாகும் அனைவரும், தாயின் சொத்துக்கும் வாரிசு என்று கருத முடியாது. இன்றைய சூழலில், தந்தை வழி சொத்திலும், அவர் சுயமாக சம்பாதித்ததா அல்லது பரம்பரை வழியாக அவர் பெயருக்கு வந்ததா என்பதை பார்க்க வேண்டும். தந்தையின் சுயசம்பாத்திய சொத்து எனில், அவரது மகன், மகள்கள் பாகப்பிரிவினை செய்து கொள்ளலாம்.
அதே சமயம் பரம்பரை வழியில் வந்த சொத்து எனில், வேறு சிலரும் அதில் உரிமை கோர வாய்ப்பு இருக்கும். இதில் சொத்துக்கள் வாரிசுகளுக்கு சமமாக பங்கிடப்பட வேண்டும்.
பங்கீடு செய்வதில் யாருக்காவது ஆட்சேபம் இருந்தால் அவர் நீதிமன்றத்தை அணுகலாம்.
இது போன்ற வழக்குகளில் பல சமயங்களில் பாகப்பிரிவினை செல்லாது என்று அறிவிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது. அதன் பின் அனைத்து வாரிசுகளும் ஒன்றாக பேசி பிரச்னையை தீர்க்க வேண்டும்.
தேவைப்பட்டால், இது போன்ற பிரச்னைகளில் சமரச பணிகளுக்கு உரிய நபர்களை நீதிமன்றம் நியமிக்கலாம் என்கின்றனர் சட்ட வல்லுனர்கள்.
No comments:
Post a Comment