Wednesday, September 4, 2024

சொத்தின் தாய் பத்திரம் எது என்பதை அறியும் வழிமுறைகள் என்ன?

 
வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்கும் போது அது தொடர்பான என்னென்ன பத்திரங்களை சரி பார்க்க வேண்டும் என்பதில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.  குறிப்பாக, விற்பவருக்கு அந்த சொத்து எழுதி கொடுக்கப்பட்ட பத்திரம் சரியாக இருந்தால் மட்டும் போதும் என்று பலரும் நினைக்கின்றனர்.

 

இதற்கு அப்பால், அவருக்கு முன் அந்த சொத்து எப்படி கைமாறியது என்பதை அறிய சொத்துக்கான தாய் பத்திரத்தை கேட்டு வாங்கி ஆய்வு செய்ய வேண்டும்.  ஒவ்வொரு சொத்துக்கும் தாய் பத்திரம் எது என்பதை கேட்டு வாங்கி பார்க்காமல், பரிமாற்றம் தொடர்பான நடவடிக்கையில் இறங்க கூடாது.

சரி, விற்பனைக்கு வரும் சொத்தின் உண்மை தன்மை அறிய அதன் தாய் பத்திரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்பதை, அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர்.  ஆனால், ஒவ்வொரு சொத்துக்கும் எது தாய் பத்திரம் என்பதை தெளிவுபடுத்துவதற்கான வழிமுறைகள் தெரியாதது தான் இங்கு பிரச்னையாக உள்ளது.

இன்றைய சூழலில் ஒரு வீடு அல்லது மனை விற்பனைக்கு வருகிறது என்றால், அதை விற்பவர் பெயரில் ஒரு கிரைய பத்திரம் இருக்கும்.

அந்த பத்திரம் எதன் அடிப்படையில் எழுதப்பட்டது என்பதற்கான பூர்வாங்க ஆதாரமாக ஒரு பத்திரம் இருக்கும் அல்லவா அது தான் அடிப்படையில் தாய் பத்திரம் என்று கருதப்படும்.

அதாவது, தற்போது விற்கும் உரிமையாளர் பெயருக்கு நேரடியாக கிரையம் கொடுக்க எழுதப்பட்ட, இதற்கு முந்தைய முழுமையான ஆவணம் தான் தாய் பத்திரம் என்று குறிப்பிடப்படும்.

இதில் பல இடங்களில் தற்போது, விற்பவர் பொது அதிகார முகவராக இருக்கலாம், அவருக்கு முந்தைய நபர் முழுமையான உரிமையாளராக இருக்கலாம்.

இதில் இந்த உரிமையாளர் பெயருக்கு சொத்து கொடுக்கப்பட்ட பத்திரத்தை தாய் பத்திரம் என்று பலர் நம்பி ஏமாறுகின்றனர்.  இதே போன்று கடைசி கிரைய பத்திரம் வைத்துள்ள உரிமையாளருக்கு முன், பொது அதிகார பத்திரம், செட்டில்மென்ட், உயில் போன்ற பத்திரங்கள் இருந்தால் அவை தாய் பத்திரம் ஆகாது.

நீங்கள் வாங்க நினைக்கும் சொத்து தொடர்பான, முந்தைய முறையான கிரைய பத்திரம் எது என்பதை தேடி பார்த்து, அது தான் தாய் பத்திரம் என்று வரையறுக்கப்படும்.  சில சமயங்களில், பாகப்பிரிவினை, செட்டில்மென்ட், உயில், விடுதலை போன்ற ஆவணங்கள் வழியே சொத்து பெறப்பட்டு இருக்கும்.

இந்த ஆவணங்கள் தாய் பத்திரங்கள் ஆகாது என்பதால், இதற்கு முந்தைய நிலையில் கிரையம் நடந்த முறையான பத்திரம் எது என்பதை தேடி பார்த்து வாங்கி ஆய்வு செய்ய வேண்டும்.

இதில், முறையான தாய் பத்திரம் பார்க்காமல் சொத்து வாங்கினால் அது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்கின்றனர் பதிவுத்துறை அலுவலர்கள்.

சொத்துக்குள் நுழையும் வெளியாட்களை வகைப்படுத்தி அறிவது அவசியம்!

 சொத்துக்குள் நுழையும் வெளியாட்களை வகைப்படுத்தி அறிவது அவசியம்!
வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்கினால் மட்டும் போதாது, அதை முறையாக பாதுகாப்பதற்கான அடிப்படை வழிமுறைகள் தெரிந்து இருக்க வேண்டும்.  நீங்கள் வாங்கிய சொத்துக்குள் யார், எதற்காக வரலாம் என்பதை முடிவு செய்வது நீங்கள்தான். 


சொத்தின் முழுமையான உரிமையாளர் என்ற அடிப்படையில், அதற்குள் யார் எந்த நோக்கத்துக்காக வருவது என்பதை நீங்கள்தான் தெளிவாக முடிவு செய்ய வேண்டும்.  உங்களுக்கு சொந்தமான சொத்தை பத்திரப்பதிவு செய்து வாங்கினால் மட்டும் போதாது, அதன் முறையான கட்டுப்பாடு உங்கள் கையில் இருக்க வேண்டும்.


ஒரு நபர் வாங்கிய சொத்தில், அவரது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் போன்றோர் உரிமையுடன் உள்ளே வருவர் என்பதால், இதில் எவ்வித பிரச்னையும் இல்லை.  அதே நேரம் தவறான நோக்கத்தில் சிலர், சொத்துக்குள் அத்துமீறி நுழைந்து பிரச்னை செய்வதை தவிர்க்க வேண்டியதும் உங்கள் பொறுப்பு தான்.


இதில், ஒருவருக்கு சொந்தமான சொத்துக்குள் வரும் வெளியார் குறித்த வரையறை என்ன, வகைபாடு என்ன என்பதை அறிய வேண்டும்.  சொத்துக்குள் வருவோரை, விருந்தினர்கள், உரிமம் பெற்ற நபர்கள், அத்துமீறி நுழைபவர்கள் என்று மூன்று வகையாக பிரிக்கலாம்.


விருந்தினர்கள் என்றால், உரிமையாளரால் விரும்பி அழைக்கப்படும் நபர்கள் என்று பொருள்.  இதில் உரிமையாளரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பணி நிமித்தம் உரிமையாளரால் அழைக்கப்பட்ட தொழிலாளர்களும் இந்த வரையறைக்குள் அடங்குவர்.


நீங்கள் வாங்கிய சொத்துக்குள் அலுவலர் நிமித்தமாக குறிப்பிட்ட சில நபர்கள் நுழைய வேண்டிய தேவை இருக்கும் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.  மின்சார இணைப்பு, தொலைபேசி இணைப்பு, குடிநீர், வடிகால் இணைப்பு, தபால்காரர், உணவு டெலிவரி நபர்கள், சொத்து வரி மதிப்பீட்டாளர், கட்டட அனுமதி தொடர்பாக ஆய்வு செய்பவர்கள், காவல்துறையினர் போன்றோர் உரிமம் பெற்றவர்கள் என்ற அடிப்படையில் நுழைவர்.


இந்த இரண்டு வகைப்பாட்டிலும் அடங்காத சிலர், உங்கள் சொத்துக்குள் வேண்டுமென்றே நுழைவதற்கு வாய்ப்புகள் உள்ளன.  உங்களுக்கு தெரியாமல், உங்கள் வீட்டில் இருந்து ஏதாவது பொருட்களை களவாடும் நோக்கத்தில் சிலர் நுழையலாம்.  மேலும் இதில், வேறு சில குற்ற எண்ணத்துடன் சிலர் உங்களுக்கு தெரியாமல் சொத்துக்குள் நுழைய வாய்ப்பு உள்ளது.


குறிப்பாக, உங்களுக்கு வேண்டுமென்றே பாதகம் ஏற்படுத்தும் நோக்கம் எதுவும் இன்றி, குறிப்பாக அது உங்கள் சொத்து என்பதையும் அறியாமல் சிலர் சொத்தின் வழியே கடந்து செல்வர்.  இதுவும் ஒரு வகையில் அத்துமீறிய நுழைவு என்று தான் வகைப்படுத்தப்படும்.


இவ்வாறு வெளியாட்களை வகைப்படுத்தி, அதில் யாரை அனுமதிக்க கூடாது என்பதற்கான செயல்திட்டத்தை உருவாக்கி உரிமையாளர்கள் செயல்படுத்த வேண்டும்.  அப்போதுதான் சொத்து பாதுகாப்பாக இருக்கும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

Monday, September 2, 2024

Is your home located near a waterlogged area?

 Is your home located near a waterlogged area?
The initial joy of monsoon is often overshadowed by the dread of waterlogging.  This year was no different with various areas across the country experiencing severe waterlogging and flooding, thus shifting the focus once again to homebuyers’ due diligence before purchasing a property.  While the reasons for waterlogging are plenty, one of the easiest ways to avoid it is by paying extra attention during the homebuying process.

Thus, before buying a home, conducting a preliminary check is important.  For starters, speak to people residing in the locality and scout through newspapers to see if any water logging or flooding incidents were reported in the recent years.

Proper drainage systems:

Ensure the area has effective drainage systems to prevent waterlogging.  This includes well-constructed storm-water drains, regular cleaning and maintenance and features like slope gradients;

Waterproofing:

Confirm with the builder if high-quality waterproofing materials were used during construction, which are important to protect buildings from water ingress.  This includes waterproof membranes, sealants, and coatings applied to walls, roofs and foundations;

Elevated plinth levels:
Buildings with elevated plinth levels help minimise the risk of water entering the living spaces during flooding or heavy rains.  Verify if this feature is in place.

Landscaping and green infrastructure:


Look for green infrastructure such as rain gardens, permeable pavements, and retention ponds, which help absorb excess water and reduce surface runoff, thereby mitigating the risk of waterlogging.


Be ready for emergency:


Check if there are emergency response plans and necessary resources such as sandbags, pumps, and emergency evacuation routes, which can help residents mitigate the impact of waterlogging during extreme weather events.


Do not compromise:


Homebuyers come with varied budgets in mind.  At times, when a home fits their budget, they are compelled to buy a home in that area.  “Usually, the water-logging issues persist only for a few weeks or a month at the most; the rest of the year goes by without any problem like this.  I am not implying that it is a comfortable stay or that I am used to issues such as waterlogging.  On the contrary, it becomes difficult to drop my child off to school as there is a large waterlogged pool right in front of our main gate.  Even going to the office becomes quite difficult as I have to move my vehicle around to avoid it being damaged due to the water.  That being said, when I purchased the home, I was running short on budget and as my home is close to the railway station, this was a deal I did not want to let go of.  Additionally, I wasn’t informed about this aspect when I purchased the home back in 2012; this issue came up during the monsoons of the following year, in 2013.  Real estate agents must practice transparency when it comes to issues such as these.”  “Look for signs of poor drainage, such as standing water in the yard, water stains on the foundation, and the presence of sump pumps or French drains, which signal recurring water problems.”  The best that one can do is to visit the site during monsoons to identify cracks, seepages or other drainage-related issues within the flat.

Friday, August 30, 2024

நில அளவுகள் அறிவோம்

 


1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட்

♓1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்டர்

♓1 ஏக்கர் – 0.405 ஹெக்டேர்

♓1 ஏக்கர் – 4046.82 சதுர மீட்டர்

♓1 ஏக்கர் – 43,560 சதுர அடிகள்

♓1 ஏக்கர் – 100 சென்ட்

♓1 சென்ட் – 435.6 சதுர அடிகள்

♓1 சென்ட் – 40.5 சதுர மீட்டர்

♓1 கிரவுண்ட் – 222.96 சதுர மீட்டர்

♓1 கிரவுண்ட் – 2400 சதுர அடிகள்

♓1 மீட்டர் – 3.281 அடி

♓1 குழி – 44 சென்ட்

♓1 மா – 100 குழி

♓1 காணி – 132 சென்ட் (3 குழி)

♓1 காணி – 1.32 ஏக்கர்

♓1 காணி – 57,499 சதுர அடி

♓1 டிசிமல் – 1 1/2 சென்ட்

♓1 அடி – 12 இன்ச் (30.38 செ.மீ)

♓1 மைல் – 1.61 கிலோ மீட்டர் (1610 மீட்டர்)

♓1 மைல் – 5280 அடி (8 பர்லாங்கு)

♓1 கிலோ மீட்டர் – 1000 மீட்டர் (0.62 மைல்)

♓1 கிலோ மீட்டர் – 3280 அடி

♓1 கிலோ மீட்டர் – 5 பர்லாங்கு

♓1.61 கிலோ மீட்டர் – 1 மைல்

♓1 பர்லாங்கு – 660 அடி (220 கெஜம்)

♓1 செயின் – 66 அடி (100 லிங்க்)

♓1 லிங்க் – 0.66 அடி

♓1 கெஜம் – 3 அடி

♓8 பர்லாங்கு – 1 மைல் (201.16 மீட்டர்)

♓1 ஏர்ஸ் – 1076 சதுர அடி (2.47 சென்ட்)

♓22 கெஜம் – 1 செயின் (66 அடி)

♓10 செயின் – 1 பர்லாங்கு

♓1 இன்ச் – 2.54 செ.மீ

♓1 செ.மீ – 0.3937 செ.மீ

♓1 கெஜம் – 0.9144 மீட்டர்

♓1 மீட்டர் – 1.093613 கெஜம் (3.28 அடி)

♓1 சதுர மீட்டர் – 10.76391 சதுர அடிகள்

♓1 சதுர அடி – 0.0929 சதுர மீட்டர்

♓30 சதுர மைல் – 1 டவுன்சிப்

♓640 ஏக்கர் – 1 சதுர மைல்..

Let us know the land levels
Details of land levels:-

1 perch perch - 272.25 sqft
1 Rood -40 perch
1 Acre - 4 Rood
1 acre - 16 spread
1 spread - 10 perch
1 spread - 2730 sq ft.
1 hectare - 39.57 spread
1 hectare - 2 acres 47 cents
1 hectare - 10,000 square meters
1 acre - 0.405 hectares
1 acre - 4046.82 square meters
1 acre - 43,560 sq ft
1 acre - 100 cents
1 cent - 435.6 square feet
1 cent - 40.5 sq meter
1 ground - 222.96 sq meter
1 Ground - 2400 Sq. Feet
1 meter - 3.281 ft
1 pit - 44 cents
1 ma - 100 pit
1 pit - 132 cents (3 pits)
1 lane - 1.32 acres
1 Kani - 57,499 Sq.Ft
1 Decimal - 1 1/2 cents
1 ft - 12 inch (30.38 c. Me)
1 mile - 1.61 kilometers (1610 meters)
1 mile - 5280 ft (8 purlong)
1 kg - 1000 meters (0.62 miles)
1 kilometer - 3280 feet
1 kilometer - 5 purlang
1.61 kilometers - 1 mile
1 Burlang - 660 ft (220 yards)
1 chain - 66 ft (100 link)
1 Link - 0.66 ft
1 yard - 3 feet
8 Burlang - 1 mile (201.16 meters)
1 Ace - 1076 Sq.Ft (2.47 cents)
22 yards - 1 chain (66 ft)
10 chain - 1 Burlang
1 inch - 2.54 c. Me
1st c. Me - 0.3937 c. Me
1 yard - 0.9144 meters
1 meter - 1.093613 kg (3.28 ft)
1 sq meter - 10.76391 sq feet
1 sqft - 0.0929 sq meter
30 Sq Mile - 1 Township
640 acres - 1 square mile

Wednesday, August 28, 2024

Government Loans & Schemes Links

Entrepreneurship Development and Innovation Institute (EDII-TN), Government of Tamil Nadu 


Pradhan Mantri Formalisation of Micro Food Processing Enterprises Scheme

https://pmfme.mofpi.gov.in/pmfme/#/Home-Page

Tamil Nadu Adi Dravidar Housing and Development Corporation Limited (TAHDCO)

https://application.tahdco.com/

Startup india scheme 

https://www.startupindia.gov.in/content/sih/en/startup-scheme.html

Pradhan Mantri MUDRA Yojana (PMMY)

https://www.mudra.org.in/

Stand up india scheme 

https://www.standupmitra.in/Home/SUISchemes

SIDCO  - Any Goverment Space Require

https://tansidco.org/

TABCEDCO: BC/MBC 

https://tabcedco.tn.gov.in/WEB/EN/

OMcmanpower 

https://omcmanpower.tn.gov.in/ 

ATDC-Guindy 

https://atdcindia.co.in/

KVICONLINE 

https://www.kviconline.gov.in/

FOOD: NIFTEM, Thanjavur

https://niftem-t.ac.in/


ID Proof for Loan

1, Aadhar Card Copy

2, PAN

3, GST if company register

4, Rental Copy

5, Photo copy - profile

6, Quotation - Mechinary

7, Project Report - Working capital


Three copy require

1, Bank 

2, Distric EDII

3, EDII - Chennai


இனி பட்டா மாறுதலுக்கு இது கட்டாயம்.. பத்திரங்கள், நில ஆவணங்கள் பெற இந்த மெசேஜ் முக்கியம்: தமிழக அரசு

 

இனி பட்டா மாறுதலுக்கு இது கட்டாயம்.. பத்திரங்கள், நில ஆவணங்கள் பெற இந்த மெசேஜ் முக்கியம்: தமிழக அரசு

தமிழக பத்திரப்பதிவு துறையில் புதிய நடைமுறைகள் அவ்வப்போது அமல்படுத்தப்பட்டு வருகின்றன.. பொதுமக்களின் நன்மைகளை கருத்தில் கொண்டு, இப்போதும் தமிழக அரசு, அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.


பத்திரப்பதிவு துறை மொத்தமுமாக ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ள. பத்திரப் பதிவுத்துறையில் பதிவு செய்யப்படும் சொத்து விவரங்கள் அடிப்படையிலும், தானியங்கி முறையில் ஆன்லைன் பட்டா மாற்றம் செய்யப்படுகின்றன.. அந்தவகையில், 100 சதவீதம் தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.


பட்டாக்கள்: இந்த தானியங்கி பட்டா மாறுதல் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த, பதிவுத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் திட்டமிட்டிருக்கிறார்கள்.. இதற்காக சார் - பதிவாளர்கள், ஆவண எழுத்தர்களுக்கு கடந்த மாதமே சில அறிவுறுத்தல்களை தந்திருந்தார்கள்..


அதன்படி, கிரையம் மற்றும் உரிமை மாற்றம் செய்யும் நபர் பெயரில் பட்டா இருப்பதை தவறாமல் உறுதி செய்து கொள்ள வேண்டும். பத்திரப்பதிவின்போது, சரியான மொபைல் போன் எண்ணை அளிக்க வேண்டும் என்றெல்லாம் வருவாய் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தார்கள்.. காரணம், தானியங்கி முறை பட்டா மாறுதல் திட்டத்தில், பெரும்பாலான விண்ணப்பங்கள் பாதியில் முடங்குகி விடுகின்றனவாம். 


விண்ணப்பங்கள்: விண்ணப்பங்களில், சொத்து வாங்குவோர் தங்களது சரியான செல்போன் போன் எண்ணை கொடுக்காமல் இருப்பதே,

விண்ணப்பங்கள் முடங்கிப்போவதற்கு காரணம் என்று சொன்னார்கள்.


எனவேதான், ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவுக்கு விபரங்களை உள்ளீடு செய்யும்போது, சொத்து வாங்குவோரின் உண்மையான மொபைல் போன் எண்ணை பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும் என்றும், பத்திரப்பதிவு பணியின் போது, மொபைல் போன் எண் விபரத்தை சரியாக பதிவிடுவதை, சார் - பதிவாளர்கள், ஆவண எழுத்தர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் பொது மக்களும் இதில் பொறுப்புடன் நடந்தால்தான், பட்டா மாறுதல் தொடர்பாக, SMS தகவல்களை பெற முடியும் என்றும் அதிகாரிகள் கூறியிருந்தனர்.


சேவைகள்: இந்நிலையில், தமிழக அரசு ஆன்லைன் மூலம் பட்டா பெறுவதற்கு செல்போன் நம்பர் கட்டாயம் என்று அறிவித்திருக்கிறது.. தமிழகத்தில் பொதுமக்கள் நிலம் தொடர்பான சேவைகளை பெறுவதற்கு e services என்ற ஆன்லைன் தளம் செயல்பாட்டில் இருந்தாலும், இதன் மூலம் இலவசமாக ஆவணங்களை பெறும் சிலர், அதனை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. பட்டா சிட்டா: இதன் காரணமாகவே, ஆன்லைன் மூலம் பட்டா, சிட்டா மற்றும் பட்டா நகல் போன்றவைகளை பெறுவதற்கு செல்போன் நம்பர் அவசியம் என தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் இந்த புதிய அறிவிப்பு தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.


இதுகுறித்து வெளியாகியிருக்கும் அறிக்கையில், https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணையதளம் மூலம் பட்டா, சிட்டா, அ-பதிவேடு, அரசு புறம்போக்கு நிலம் விவரம், வரைபட விவரங்கள், பட்டா நகல், பட்டா விண்ணப்பம் நிலை, நகர நில அளவை, புலப்பட அறிக்கையை எளிதாக பெறலாம். ஆவணங்கள்: இந்த இணையதளத்தில் கிடைகக்கும் சேவைகளை சிலர் தவறாக பயன்படுத்துவாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. அதாவது இங்கிருந்து இலவசமாக பதிவிறக்கும் செய்யும் ஆவணங்களை சிலர் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். அதேபோல ஆவணங்களில் மோசடிகளும் நடக்கின்றன. 


எனவே, தமிழக அரசு இந்த இணையதளத்தை வணிக நோக்கத்திற்கும் மோசடிகளுக்கும் தவறாக பயன்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவருவதற்காக புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இன்று முதல் அமல்: அதன்படி, இந்த இணையதளத்திலிருந்து பட்டா, புலப்படங்கள் என அனைத்து சேவைகளையும் பெற செல்போன் எண் கட்டாயமாகும். செல்போன் எண்ணை பதிவு செய்தால், அந்த எண்ணுக்கு ஓடிபி மெசேஜ் வரும். அதனை பதிவு செய்தால்தான் ஆவணங்களை பதிவிறக்கம் செயய முடியும். ஒருவர் ஒரு செல்போன் எண் மூலம் அதிகமாக 8 ஆவணங்களை பதிவிறக்கம் செய்யலாம். இந்த நடைமுறையானது, இன்று வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பட்டாக்களில் முறைகேடு மட்டுமல்லாமல், அதிக நேரமும் தவிர்க்கப்பட்டுவிடும்.. புகார்களும் இனி எழ வாய்ப்பில்லை என்கிறார்கள்.


சென்னை வெளிவட்டச் சாலை பகுதிகளின் பொருளாதார செயல்பாடுகளை மேம்படுத்த திட்டம் தயாரிப்பு: சிஎம்டிஏ

 

சென்னை வெளிவட்டச் சாலை பகுதிகளின் பொருளாதார செயல்பாடுகளை மேம்படுத்த திட்டம் தயாரிப்பு: சிஎம்டிஏ
சென்னை: சென்னை வெளிவட்டச் சாலையில் மீஞ்சூர், செங்குன்றம், பூந்தமல்லி, வண்டலூர் பகுதிகளில் பொருளாதார செயல்பாடுகளை மேம்படுத்தும் விதமாக விரிவான வளர்ச்சித் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, இன்று அவர் தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்ட தகவல்: “சென்னை வெளிவட்டச் சாலை வழித்தடம் என்பது சென்னை பெருநகர பகுதியின் இடம் சார்ந்த திட்ட உத்தியில் முக்கியமான பாகமாகும். தற்போது நாங்கள் வெளிவட்டச் சாலையை முக்கியமான வளர்ச்சி வழித்தடமாக மாற்றும் வகையில், இருபுறமும் ஒரு கி.மீ அகலத்தில், 62 கி.மீ நீளத்துக்கு அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரித்துள்ளோம். வெளிவட்டச்சாலை வழித்தடத்தின் வளர்ச்சித் திறனை மேம்படுத்தும் வகையில், நாங்கள், மீஞ்சூர், செங்குன்றம், பூந்தமல்லி, வண்டலூர் ஆகிய 4 குறிப்பிட்ட பகுதிகளை அவற்றின் தனித்துவமான பொருளாதார சூழல்களை கருதி கண்டறிந்துள்ளோம்.  இந்த பகுதிகளுக்கு ஏற்றவாறு பொருளாதார நடவடிக்கைளை கலவையாக நாங்கள் வகுத்துள்ளோம். இப்பகுதிகளில் ஒருங்கிணைந்த அணுகுமுறையை உறுதிசெய்ய, தொழில்துறை, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், சிப்காட், டிட்கோ மற்றும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பு (கும்டா) ஆகியவற்றுடன் இணைந்து எதிர்பார்க்கப்படும் வளர்ச்சிக்கான குறுகிய கால மற்றும் இடைக்கால வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி வருகிறோம்.

இந்த வழித்தடத்துக்கான சரியான வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக 10 நிலம் சேகரிப்பு குழுமப் பகுதிகளை கண்டறிந்துள்ளோம். ஒருங்கிணைந்த செயல்பாட்டு மையங்கள், மலிவு விலை குடியிருப்பு, தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை ஊக்குவிக்க இந்த வழித்தடத்துக்கான சரியான வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக 10 நிலம் சேகரிப்பு குழுமப் பகுதிகளை கண்டறிந்துள்ளோம். ஒருங்கிணைந்த செயல்பாட்டு மையங்கள், மலிவு விலை குடியிருப்பு, தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை ஊக்குவிக்க போக்குவரத்து சார்ந்த வளர்ச்சியிலும் கவனம் செலுத்துகிறோம். மேலும், பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையம் போன்ற எதிர்கால திட்டங்கள் மற்றும் தற்போதுள்ள திட்டங்களை உள்ளடக்கி, வெளிவட்டச்சாலையுடன் கூடுதலாக, மல்டி மாடல் போக்குவரத்து திட்டங்களையும் இணைத்து செயல்படுத்தும் திட்டமும் உள்ளது. மேலும், இந்தத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான உத்திகள் மற்றும் நிதி வழிமுறைகளுக்காக வெளிவட்டச்சாலைக்கான பொருளாதார திட்டத்தை தயாரித்து வருகிறோம். வரும் அக்டோபர் மாத இறுதிக்குள், விரிவான வளர்ச்சித்திட்டத்தின் வரைவை இறுதி செய்யவேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளோம்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.   சார்ந்த வளர்ச்சியிலும் கவனம் செலுத்துகிறோம்.

மேலும், பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையம் போன்ற எதிர்கால திட்டங்கள் மற்றும் தற்போதுள்ள திட்டங்களை உள்ளடக்கி, வெளிவட்டச்சாலையுடன் கூடுதலாக, மல்டி மாடல் போக்குவரத்து திட்டங்களையும் இணைத்து செயல்படுத்தும் திட்டமும் உள்ளது. மேலும், இந்தத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான உத்திகள் மற்றும் நிதி வழிமுறைகளுக்காக வெளிவட்டச்சாலைக்கான பொருளாதார திட்டத்தை தயாரித்து வருகிறோம். வரும் அக்டோபர் மாத இறுதிக்குள், விரிவான வளர்ச்சித்திட்டத்தின் வரைவை இறுதி செய்யவேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளோம்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.


Bigger the house, bigger the responsibilities

  Here is a look at the aftermath of upgrading to a larger space Regardless of the size of the current home, many homeowners often nurture t...