Friday, December 23, 2022

வீட்டு மனைகளுக்கு கூட்டு பட்டா பெறுவதற்கான வழிமுறைகள் என்ன?

வீட்டு மனைகளுக்கு கூட்டு பட்டா பெறுவதற்கான வழிமுறைகள் என்ன?

சொத்து பரிமாற்றத்தில், பெரும்பாலும் கிராமங்களில், கூட்டு பட்டா என்ற வார்த்தை அதிகமாக பயன்படுத்தப்படும்நகரங்களில், ஒவ்வொருவரும், தனி வீடு என்று சொத்து வாங்குவதால், தனியாக பட்டா வாங்கிக் கொள்கின்றனர்.

          ஆனால், கிராமங்களில் இன்றும், ஒரே குடும்பத்தை சேர்ந்த நபர்கள், கூட்டமாக சொத்துக்களை வாங்குவது வழக்கமாக உள்ளதுஇதில், கூட்டு பட்டா என்பதை, எப்படி அணுக வேண்டும் என்பதில், பலருக்கும் சந்தேகம் உள்ளது.

         ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள், அடுத்தடுத்த சர்வே எண்களில் உள்ள சொத்தை வாங்கும்போது, அவர்கள் கூட்டு பட்டா கோரி விண்ணப்பிக்கலாம்ஆனால், அவர்கள் குடும்ப உறவினர்களாக இல்லாத நிலையில், கூட்டு பட்டா கிடைக்காது.

         அதே நேரத்தில், கூட்டு பட்டாவில் உள்ள சொத்துக்களில், ஒரு பகுதியை மட்டும் வாங்கும் வெளியார், பட்டா மாறுதலின் போது, தன் முடிவை எடுக்கலாம்அவர் கூட்டு பட்டாவில், இணையலாம் அல்லது தனி பட்டாவும் பெறலாம்.

           பெரும்பாலும், பரம்பரை சொத்துக்களை வாரிசுகள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதில் மட்டுமே கூட்டு பட்டா வாங்குவது வழக்கத்தில் உள்ளதுமற்றபடி, கூட்டாக சொத்து வாங்கும் உறவினர்கள் இதை ஏற்கின்றனர்.

            கூட்டு பட்டா சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட சரியான நடைமுறை என்றாலும், தனியாக சொத்து வாங்குவோருக்கு, இதில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்படுகின்றனகூட்டு பட்டாவில் உள்ள சொத்துக்களை வாங்கும் போது, அதில் உரிமையாளர் குறித்த உண்மை தன்மையை சரிபார்ப்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

           குறிப்பாக, கூட்டு பட்டாவில் உள்ள ஒரு சொத்தை வாங்கியவர், தன் பெயருக்கு பட்டா மாறுதல் செய்யாத நிலையில், அது அடுத்தடுத்து கைமாறுகிறதுஇவ்வாறு கைமாறும் சொத்தை வாங்குவோர், பட்டா யார் பெயரில் உள்ளது என்பதையும், தற்போது விற்பவருக்கு அது எப்படி வந்தது என்பதையும் தெளிவுபடுத்தி கொள்வதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

              புதிதாக சொத்து வாங்குவோர், அந்த சொத்தின் கூட்டு பட்டாவில் விற்பனையாளர் இருக்கிறாரா என்பதை பார்க்க வேண்டும்அப்படி இல்லாவிட்டால், பட்டா பிரிக்காமல் இருந்ததற்கு காரணம் என்ன என்பதையும் விசாரிக்க வேண்டும்கூட்டு பட்டாவில் இருக்கும் இதர ஆட்கள், எந்த ஆட்சேபனையும் இல்லையென்று கடிதம் எழுதி கொடுக்க வேண்டும்இதை முதலில், வி..., சரி பார்த்து, பின், தாசில்தார் சரி பார்த்த பின்தான் தனிப் பட்டாவாக மாற்றி கொடுக்கப்படும்.

               இதர ஆட்களும் இதே போல் செய்து, அவர்களும் தனி பட்டாவாக மாற்றி கொள்ள முடியும்.

               மேலும், கூட்டு பட்டாவில் இருக்கும் சொத்தை வாங்கும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

                தனி மனைகள், விற்பனை, அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் பரவலாக வந்த பின், கூட்டு பட்டா என்ற நடைமுறை மெல்ல மறைந்து வருவதாக கூறப்படுகிறது.

                 புதிதாக தனி வீடு, மனை வாங்குவோர், அந்த சொத்து, கூட்டு பட்டாவில் இருந்து பிரிந்திருந்தால், அது குறித்த முழுமையான விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர், வருவாய் துறை அதிகாரிகள்.

நன்றி : தினமலர் கனவு இல்லம் 


Tuesday, November 29, 2022

Are smart homes a good idea

 Are smart homes a good idea?

         On one hand, home automation is set to become easier and more affordable.  On the other, factors like energy-efficient designs and remote monitoring are influencing interior design yet raising concerns about security and privacy.  Here’s what you need to know

          Over the years, smart homes have become more common in construction and interior designing.  Almost everyone wants a space were internet-connected devices and appliances can be controlled via voice-enabled commands or at the press of a button on a mobile phone.  Technology advancements, especially in artificial intelligence (AI), the Internet of Things (IOT), have made it possible for machines to understand and anticipate human routines.

            “Earlier, having a smart home was an expensive proposition.  But now, it’s becoming affordable to install smart lights, smart TVs, and even smart air conditioners.  Almost every client asks for an interconnected ecosystem that can be monitored remotely via a smartphone,” shares Rujuta Shahani, an architect.  Most of the new real estate projects have internal wiring plans aligned with smart home requirements.  These take into account the distribution of electricity if high energy-consuming devices are connected at one time.

The preference for a smart home

Today, a majority of people prefer smart devices that are connected, fast, and energy efficient.  For instance, sensors in a smart fan can detect if there is anybody in the room and switch off automatically if no presence is detected.  Wi-Fi plays a critical role in connecting all devices together.

 “A family friend had installed smart appliances in his house and was constantly telling us about the benefits that it offers on three fronts-security, convenience and energy efficiency.  We are keen to install the same in our home, so we are in the process of assessing the best options available,” says Meera Gunderia, a marketing professional, who plans to install these wireless solutions over the next few months.  Demand for these automation solutions in India are largely from the residential sector.  Many homeowners prefer smart lights and bulbs which can be controlled using Bluetooth and Wi-Fi technology.

 

The future is the voice

Voice-assisted technology is becoming very popular, especially among the elderly and children.  Devices can be controlled via voice commands, and this makes it convenient for people who are not tech-savvy or have difficulty moving around too much.

“My three-year-old son is constantly directing our smart devices to turn on and off, or play his favorite music,” says Sneha Patel, a 38-year-old homemaker.  Voice assistants can also act as reminders for important tasks of the day and help organise your day better.

Security is priority

Motion sensors, cameras, and sirens are some security options that can be integrated into your smart home.  These devices use your Wi-Fi network and connect seamlessly to your smartphone.  “It’s important to ensure that your Wi-Fi network is secure to avoid any security breaches.  Any breach in the system will put the entire network and your personal privacy at risk.  My internet provider has been very particular about this and has ensured that I have set up strong passwords, multi-factor authentication, and lock-screen security,” says Yatin Chedda, who recently moved into a smart home in Sewri (Mumbai).  Changing passwords regularly, ensuring all screens are password-protected, and installing robust firewalls as part of the internet configuration can help fortify security levels.  “Companies keep launching software updates with improved features.  I have enabled the auto-update option on all my devices to ensure that I gain the maximum benefit from updates,” says Rushabh Mehta, who has around six smart devices installed in his home.

The way forward

As more companies enter the home automation space, the market is set to get crowded.  This means that smart home devices will become more affordable.  It is expected that there will be greater adoption of smart devices in the commercial segment too.

Thanks - TIMES PROPERTY

Monday, November 28, 2022

Significant returns and low risk is making commercial properties

Significant returns and low risk is making commercial properties a lucrative option for investors.  Take a glance at various options available to park your funds

    Commercial real estate is looking more viable than ever.  Between 2017 and 2021, foreign investments in Indian commercial real estate amounted to USD 10.3 billion.  Such properties offer great returns, but they come at a great cost, too.  Aniket Gupta, a real estate consultant, expounds, “Investing in commercial real estate can be very rewarding but it also demands significant capital upfront.  You need to be in a good financial position to even consider it.”He adds that this avenue is very different from residential real estate investments.  To succeed in commercial property investing, you must have considerable time and patience.

OFFICE SPACES

Now that offices are opening in full force, there is no better commercial property worth investing in, as per Akshay Mishra, a real estate liaison manager.  He notes, “In itself, commercial real estate is expected to grow by 13 percent

[VDI] by 2027.  So, to take optimum advantage of it, investors should look into investing in office spaces.”

        Typically, with these properties, tenants sign longer leases as they plan on establishing their base in a region or city, and they are very organised when it comes to settlements and contracts.  Besides quintessential office spaces, you can also look into office complexes, he advises.

RETAIL OUTLETS

Another reliable avenue, Mishra notes, is retail.  “You can choose to invest in independent retail chains or shops in bigger establishments, like malls.  You can also invest in malls directly.  There are various ways to go about it,” he explains.  Nowadays, within the retail space, there are many prospects, such as multispeciality stores, niche stores, and large or small chains.  Despite the various possibilities, one must thoroughly research the past performance of the retail outlets, their future projections, their location, and much more.

INDUSTRIAL PROPERTY

    “In industrial real estate, you can choose to invest in warehouses, manufacturing spaces or even research and development spaces.  Many cities also have industrial parks that welcome investors,” claims Arjun, a real estate consultant.  He adds that one of the perks includes longer lease agreements.

MULTIFAMILY

Given that the demand for residential properties will never go down, it can be a good idea to invest in multifamily properties.  Gupta shares, “These, essentially, are societies.  So, instead of just buying a flat and renting it out, you will be investing in society, housing multiple families, and earing returns for every buyer.”  This significantly increases your scope for financial growth, helping you reach your investment goals faster.

HOTELS AND TOURISM

Credit it to revenge traveling or the need to escape from everyday life-the hospitality industry is witnessing immense growth right now.  Mishra tells us, “It’s not a very popular area among investors, but it’s seeing some interest right now.  You  can choose to invest in hotel chains, resorts, or other tourism-related prospects.”  All things considered, various factors-from the location and background of a developer to the industry’s viability-will determine your decision.  Come what may, investors must ensure they are financially secure before taking on such an investment.

Thanks - TIMES PROPERTY

Friday, November 25, 2022

கடனுக்கு ஈடாக பத்திரங்களை ஒப்படைப்பதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

 கடனுக்கு ஈடாக பத்திரங்களை ஒப்படைப்பதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

                                                                   கவனத்திற்கு...

          சில இடங்களில், கடன் வாங்குபவர் பதிவு செய்யப்படாத கடன் பத்திரமும், அதனுடன் பதிவு செய்யப்பட்ட பொது அதிகார ஆவணமும் கடன் கொடுத்தவருக்கு எழுதி கொடுத்து விடுவர்கடன் திருப்பி செலுத்தப்பட்டதும், பவர் பத்திரம் ரத்து செய்து கொள்ளலாம் என்று உறுதி கொடுத்து இருப்பர்ஆனால், அப்படி நடக்காது.

         அசையா சொத்துக்களை, அடமானம் வைத்து, பணம் பெறுவது நீண்ட காலமாக புழக்கத்தில் உள்ளது.

         இவ்வாறு அடமானம் வைப்பதில், காலத்துக்கு ஏற்ப, பல்வேறு மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

        குறிப்பாக, அவசர நிதி தேவையின் போது, சொத்து பத்திரங்களை ஈடாக கொடுத்து, பணம் பெறுவது இன்று பல இடங்களில் நடை முறையில் உள்ளதுஇந்த பழக்கத்தால், பல சமயங்களில் ஏழை மக்கள், தங்கள் சொத்துக்களை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

          ஏழை மக்கள், நடுத்தர வருவாய் பிரிவு மக்களின் நிதி தேவையை பயன்படுத்தி கடன் கொடுப்பவர்கள், அந்த சொத்துக்களை அப்படியே கபளீகரம் செய்வது இன்றும் கிராமங்களில் தொடர்கிறது.

          பல்வேறு காலங்களில், இதற்கு எதிர்ப்பு எழுந்தாலும், எளியோரின் சொத்துக்களை பறிக்கும் பழக்கம் இன்றும் கிராமங்களில் தொடர்கிறது.

           எப்படியென்றால், வாங்கிய கடனுக்கு ஈடாக, அடமான கடன் பத்திரம் போடுவதற்கு பதிலாக, கிரயம் பத்திரம் எழுதி கொடுக்க, கடன் கொடுப்பவர் நிர்ப்பந்திக்க கடன் வாங்குபவரும் அவ்வாறே கடன் பத்திரத்திற்கு பதில், கிரய பத்திரம் எழுதி கொடுக்கிறார்.

            வட்டியும், அசலும் கட்டி விட்டால், மேற்படி சொத்தை மீண்டும் திரும்ப கிரய பத்திரம் எழுதி கொடுப்பதாக, கடன் கொடுப்பவர் உறுதி அளிக்கிறார்ஆனால், நிலைமை எதிர்மாறாக தான் நடக்கிறதுசொல்லுகின்ற வட்டியை கொடுக்க முடியாமல் சொத்து கை விட்டு போகவும் வாய்ப்புள்ளது.

              இப்படி, வலுவான நிலையில் உள்ளோர், எளியோரின் சொத்துக்களை பறிக்காமல் இருக்க, சட்ட ரீதியான கடன் வழிமுறைகள் வகுக்கப்பட்டனஇதன்படி, பத்திரங்களை ஈடாக கொடுத்து, கடன் பெறுவதில், பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

               இதில், பத்திரங்களை ஈடாக வைத்து, கடன் கொடுப்பதில், வங்கிகள் அதிக அளவில் ஈடுபடுகின்றன.

               இதனால், எளியோரின் சொத்துக்களை பறிக்கும் வலியோரின் அராஜகம், ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது.

               இருப்பினும், உங்கள் சொத்து பத்திரங்களை ஈடாக கொடுத்து கடன் பெற்றவர்கள், அதை திரும்ப செலுத்த தாமதம் ஆகும் நிலையில், பத்திரத்தை வேறு நபருக்கு கைமாற்றி விடுவது அதிகரித்துள்ளது.

                உதாரணமாக, ஒரு கிராமத்தில் கந்தன் என்பவர் முனியனுக்கு, 2 லட்சம் ருபாய் கடன் கொடுத்து, அதற்கு ஈடாக பத்திரத்தை பெறுகிறார்.

                ஆனால், கடன் கொடுத்த கந்தனுக்கு அவசர நிதி தேவை ஏற்படுகிறதுஅதே நேரத்தில், முனியனால், அந்த சமயத்தில் கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாத நிலை.

                 இந்த சூழலில், கந்தன் தன்னிடம் உள்ள முனியனின் பத்திரத்தை வேறு நபரிடம் கொடுத்து பணம் பெறுகிறார்.

                இவ்வாறு பத்திரத்தை பெறும் மூன்றாவது நபர், அந்த சொத்தை விற்று லாபம் பார்த்தால், அது முனியனுக்கு எதிரான செயலாகி விடும்.

                 கடன் உரிமையை கைமாற்றுவது சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டதில்லைஇவ்வாறு செய்வதற்கு, கடன் கொடுத்தவருக்கு உரிமை கொடுப்பதில், சில சிக்கல்கள் ஏற்படும்எனவே, பத்திரத்தை ஈடாக வைத்து கடன் பெறுவோர், அதற்கான ஒப்பந்தத்தை எழுதி, பதிவு செய்தால், இதை தடுக்கலாம்.

                  கடனுக்கு ஈடாக பத்திரங்களை ஒப்படைப்போர், அதற்கு சட்ட ரீதியான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்கின்றனர், பதிவுத் துறை அதிகாரிகள்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

கிரைய பத்திரத்தை ரத்து செய்ய உரிமையாளருக்கு அதிகாரம் உண்டு!

 கிரைய பத்திரத்தை ரத்து செய்ய உரிமையாளருக்கு அதிகாரம் உண்டு!

    வீடு, மனை போன்ற அசையா சொத்துக்களை வாங்குவோர், எந்த அளவுக்கு கவனமாக இருக்க வேண்டுமோ, அதே அளவுக்கு விற்பவர்களும் கவனமாக இருக்க வேண்டும்.

    சொந்தமாக வாங்கிய வீடு, மனையை அவசர பண தேவைக்காக விற்பதில், உரிமையாளர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

     உங்கள் சொத்தை விற்க வேண்டும் என்றால், அதற்கான வழிமுறைகளை முடிவு செய்ய வேண்டும்.




     தரகர்கள் வாயிலாக விற்பதா அல்லது நேரடியாக விளம்பரம் செய்து விற்பதா என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்எந்த முறையாயினும், இறுதி வரை கவனம் அவசியம்!

    பொதுவாக, ஆவணங்களை ரத்து செய்யக் கூடிய ஆவணம், ரத்து செய்ய முடியாத ஆவணம் என இரண்டாக பிரிக்கலாம்.

      ரத்து செய்ய முடியாத ஆவணங்களை, போலியாகவோ, மோசடியாகவோ, தவறான ஆவணங்களை வைத்து தாக்கல் செய்யப்பட்டு இருந்தால், உரிமை இல்லாதவர்கள் எழுதி கொடுத்து இருந்தால், அதை, நீதிமன்றம் மூலமாக அணுகி, ரத்து செய்யலாம்.

      ரத்து செய்ய கூடிய பத்திரங்கள், கிரைய ஒப்பந்த பத்திரம், பொது அதிகாரம் மற்றும் சிறப்பு அதிகார பத்திரம், உயில் பத்திரம்இதன்பின், உங்களை அணுகும் நபர் குறித்த உண்மை விபரங்களையும் தெரிந்துக் கொள்ள வேண்டும்அந்த சொத்தை வாங்குவதில், அவருக்கு எந்த நோக்கம் வேண்டுமானாலும் இருக்கலாம்.

      சொத்து வாங்குபவரின் நோக்கம் குறித்து, உரிமையாளர் கேள்வி எழுப்புவது சரியல்லஆனால், தன்னிடம் முறையான விலை கொடுத்து, பத்திரப்பதிவு வாயிலாக வாங்கப்படுகிறதா என்று பார்க்க வேண்டும்சில சமயங்களில், பெரிய நிறுவனம், பெரிய செல்வந்தர்கள் என்ற பெயரில் சொத்து வாங்க வருவோரிடம், கவனமாக இருக்க வேண்டும்குறிப்பிட்ட தொகையை முன்பணமாக கொடுத்து, பத்திரப்பதிவுக்கு ஏற்பாடு செய்வர்.

      பத்திரம் பதியும் போது, மீதி தொகையில், குறிப்பிட்ட பகுதியை நிலுவை வைப்பர்இவ்வாறு, நிலுவையில் வைக்கப்பட்ட தொகையை கொடுக்காமல், உரிமையாளர் ஏமாற்றப்படும் நிலை ஏற்படலாம்.

      இத்தகைய சூழலில், சம்பந்தப்பட்ட சார்-பதிவாளரை அணுகி, பதிவான பத்திரம் குறித்த முழு விபரங்களையும் தெரிவித்து, ரத்து ஆவணம் பதிய நடவடிக்கை எடுக்கலாம்கிரைய பத்திர பதிவில் சாட்சி கையெழுத்து போட்டவர்கள் இதிலும் கையெழுத்திட அழைத்து செல்வது நல்லது.

        சொத்து உரிமையாளரின் விபரம், வாங்கியவரின் விபரம், சொத்து குறித்த விபரம், பத்திரப்பதிவு குறித்த விபரங்களை, ரத்து ஆவணத்தில் குறிப்பிட வேண்டும்இத்துடன், அதில் எந்த ஷரத்து மீறப்பட்டுள்ளது என்பதை உரிமையாளர் தெரிவிக்க வேண்டும்.

         இவ்வாறு பெறப்படும் ரத்து ஆவணம் குறித்து சொத்து வாங்கியவருக்கு தெரிவிக்கப்படும்அவர் இதை ஏற்கிறாரா அல்லது ஆட்சேபிக்கிறாரா என்பதையும் கவனித்து, அடுத்த கட்ட நடவடிக்கையை சார்-பதிவாளர்கள் எடுப்பர்.

          இதில், சார்-பதிவாளர் முடிவை எதிர்த்து, மேல் முறையீட்டுக்கும் செல்லலாம் என்கின்றனர், பதிவுத்துறை அதிகாரிகள்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்

When buying a 3BHK luxury apartment in Chennai - By using this checklist

  When buying a 3BHK luxury apartment in Chennai, you’ll want to ensure the property meets both your practical needs and long-term investmen...