அதில் பணியின் ஒவ்வொரு நிலையிலும் என்னென்ன பொருட்கள் எவ்வளவு தேவைப்படும் என்பதை மதிப்பிட வேண்டும். இதில், ஒவ்வொரு வகை கட்டுமான பொருட்களுக்கான செலவு குறித்தும் மதிப்பிட வேண்டும்.
இந்த நிலையிலேயே எந்தெந்த வகை கட்டுமான பொருட்களை தேர்வு செய்வது என்பதிலும் குறிப்பு எடுத்துக்கொள்வது நல்லது. இதன்படி, வாங்கப்படும் கட்டுமான பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும். குறிப்பாக நீங்கள் வாங்கிய சிமென்ட் தரமாக இருப்பதில் துளியும் சமரசம் செய்துக்கொள்ளாதீர்.
கட்டுமான இடத்தில் வாங்கப்பட்டுள்ள சிமென்ட்டை சில எளிய வழிமுறைகளில் தர பரிசோதனை செய்யலாம். பிரிக்கப்பட்ட மூட்டையில் இருந்து ஒரு கைப்பிடி சிமென்ட் எடுத்து அதை வாளியில் உள்ள தண்ணீரில் போடுங்கள். நீங்கள் போட்ட சிமென்ட் மதிக்கிறதா அல்லது மூழ்குகிறதா என்று கவனியுங்கள். மிதந்தால் அது தரமான சிமென்ட் அல்ல என்ற முடிவுக்கு வரலாம்.
மிதிக்காமல் மூழ்கினால், அந்த சிமென்ட்டை தொடர்ந்து கட்டுமான பணிக்கு பயன்படுத்தலாம். அதே போன்று, ஒரு கைப்பிடி சிமென்ட்டை எடுத்து தண்ணீர் விட்டு குழைத்து பாருங்கள். அதை ஒரு கண்ணாடி தகட்டின் மேல் வையுங்கள். அதை, 24 மணி நேரம் கழித்து பார்க்கும் போது, சிமென்ட் கட்டி உடையாமல் இருந்தால் அது தரமான சிமென்ட். இது போன்ற வழிமுறைகளை பயன்படுத்தி சிமென்ட் தரத்தை நாமே நேரடியாக அறியலாம்.
இதில் தரமில்லை என்று தெரியவந்தவுடன், பிரிக்கப்பட்ட சிமென்ட் மூட்டைகளை பயன்படுத்துவதை நிறுத்துவது நல்லது என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.
No comments:
Post a Comment