வீடு வாங்குவோர் பரப்பளவு தொடர்பாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்....
ரியல் எஸ்டேட் சட்டத்தால், அதற்கான ஆணையத்தில் பதிவு செய்யும்போது மட்டும் கட்டுமான நிறுவனங்கள் 'கார்பெட் ஏரியா' வை சொல்கின்றன.
மற்றபடி, விற்பனை நிலையில் வாடிக்கையாளர்களிடம் இதை சொல்லாமல் விட்டுவிடுகின்றன.
சுவர்களுக்கு இடைப்பட்ட பகுதியை மட்டும்தான் வீட்டின் அளவாக கருதி விலை நிர்ணயிக்க வேண்டும் என்கின்றனர். நடைபாதை,
மாடிப்படி, வாகன நிறுத்துமிடம் போன்ற பொது இடங்களுக்கான கட்டுமான செலவு யார் பொறுப்பு என்ற கேள்வி எழுகிறது.
பொது பயன்பாட்டு இடங்களுக்கான கட்டுமான செலவு அத்திட்டத்தில் உள்ள அனைத்து வீடுகள் எண்ணிக்கை அடிப்படையில் பிரிக்கப்பட்டு விலையில் சேர்க்கப்படலாம். ஆனால்,
பல கட்டுமான நிறுவனங்கள் கார்பெட் ஏரியாவில் சதுர அடி, 4 , 000 ருபாய் என்ற அடிப்படையிலேயே விலை நிர்ணயிக்கின்றன. இதனால்,
வீடு வாங்குவோர் மிக துல்லியமான முறையில் ஏமாற்றப்படும் நிகழ்வுகள் நடக்கின்றன. இதில்,
மொத்த பரப்பளவு என்ற அடிப்படையில் பொது இடங்களையும் சேர்த்து சூப்பர் பில்டப் ஏரியா வுக்கே விலை பேசப்படுகிறது.
இது விஷயத்தில் வீடு வாங்குவோர் விழிப்புடன் இருந்து பொது பயன்பாட்டு இடங்களுக்கான விலை என்ற வகையில் எவ்வளவு தொகை வசூலிக்கப்படுகிறது என விசாரிக்க வேண்டும். கார்பெட்
ஏரியா வுக்கான விலையே பொது இடங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தால், அங்கு ஆட்சேபிக்கலாம்.
இதில் வீடு வாங்குவோருக்கு சட்ட பூர்வ உரிமைகள் உண்டு. அதை
மக்கள் பயன்படுத்துகின்றனரா என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி.
வீடு வாங்குவோர், நமக்கு கிடைக்கும் வீட்டின் பரப்பளவு என்ன, அதில் கார்பெட் ஏரியா எவ்வளவு என்பதை முதலில் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். பின்,
அதன் அதன் விலையில் என்ன நடந்து இருக்கிறது என்பதை ஆராய்ந்தால் பல்வேறு உண்மைகள் தெளிவாக தெரிந்து விடும் என்கின்றனர் கட்டுமானத்துறை வல்லுனர்கள்.
No comments:
Post a Comment