கட்டுமான ஒப்பந்தத்தில் இழப்பீடு விதியை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?
அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் வீடு விற்பனையின் போது, மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் இயற்றப்பட்டது. இதற்காக ஆணையம் அமைக்கப்பட்டு மக்கள் மனுக்கள் மீது உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.
இதன் காரணமாக, கட்டுமான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படும் விதிமுறைகளுக்கு சட்ட பாதுகாப்பு கிடைத்துள்ளது. இது வீடு வாங்கும் மக்களுக்கும், கட்டுமான நிறுவனங்களுக்கும் இடையே பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கட்டுமான ஒப்பந்தங்கள் பதிவு செய்யப் படாத நிலை இருந்தது. தற்போது, கட்டுமான ஒப்பந்தங்களையும் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனால், அதில் குறிப்பிடப்படும் ஷரத்துகளுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பை உறுதி செய்ய முடிகிறது. தற்போது ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை சட்டத்தில் விற்பனை பத்திரம், கட்டுமான ஒப்பந்த ஷரத்துகள் அடிப்படையிலேயே பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படுகிறது.
குறிப்பாக, கட்டுமான ஒப்பந்தங்களில் குறிப்பிட்டக் கால கெடுவுக்குள் வீட்டை கட்டி ஒப்படைப்போம் என கட்டுமான நிறுவனம் உறுதி அளிக்கும். இதன் மீது மக்களின் நம்பிக்கையை பெற, காலக்கெடு தாண்டினால் தாமத காலத்துக்கு இழப்பீடாக இன்ன தொகையை அளிப்பதாகவும் கட்டுமான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பிட்ட காலத்தில் வீடு ஒப்படைக்கபடாவிட்டால் தானே இழப்பீடு என்ற கோணத்தில் சில நிறுவனங்கள் அதிக படியான தொகையை குறிப்பிட்டு விடுகின்றன. எதிர்பாராத காரணத்தால் கட்டுமான பணிகள் தாமதமாகும் நிலையில் பணம் செலுத்தியவர் இழப்பீடு கேட்பார்.
அப்போது, கட்டுமான ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்டு விடுகின்றன. எதிர்பாராத காரணத்தால் கட்டுமான பணிகள் தாமதமாகும் நிலையில் பணம் செலுத்தியவர் இழப்பீடு கேட்பார்.
அப்போது, கட்டுமான ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட தொகையை கட்டுமான நிறுவனங்கள் தர மறுப்பது பரவலாக காணப்படுகிறது. இது போன்ற நிகழ்வுகளில் கூட பாதிக்கப்பட்டவர்கள் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தை அணுகலாம்.
கட்டுமான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட இழப்பீட்டை பெற்று தருவதற்கும் ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையம் உதவுகிறது. எனவே, பொது மக்கள் ரியல் எஸ்டேட் ஆணையத்தின் வழிமுறைகளை சரியாக பயன்படுத்தி பயன்பெறலாம் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.
No comments:
Post a Comment