கட்டட அனுமதி தொடர்பாக நில உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு தேவை!!
கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி பெறுவது கஷ்டமாகிவிட்ட நிலையில் அது தொடர்பாக மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்று கூறப்படுகிறது. என் பெயரில் உள்ள பட்டா நிலத்தில் வீடு கட்ட நான் ஏன் அனுமதி வாங்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
மேலோட்டமாக பார்த்தால் இது சரியான கேள்வி போன்று தோன்றும். ஆனால், நகரமைப்பு தொடர்பான விழிப்புணர்வு இல்லாததே இக்கேள்வியின் அடிப்படையாக உள்ளது.
ஒரு ரியல் எஸ்டேட் திட்டத்தை உருவாக்க, ஒரு பில்டர் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளிடமிருந்தும் ஒப்புதல்கள் மற்றும் அனுமதிகளைப் பெற வேண்டும். இந்த அனுமதிகள் இல்லாமல் கட்டப்படும் எந்தவொரு கட்டடத்திற்கும் அபராதம் மற்றும் வழக்குத் தொடரும் வடிவத்தில் அபராதம் விதிக்கப்படும்.
நீங்கள் சொந்தமாக வீட்டைக் கட்டினாலும், அல்லது ஒன்றை வாங்கினாலும், அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளதா என்பதை நீங்கள் சரிபார்க்க வேண்டும், எனவே நீங்கள் எதிர்காலத்தில் எந்த சிக்கலையும் சந்திக்க மாட்டீர்கள்.
ஒரு நிலத்தை நீங்கள் விலைக்கு வாங்குகிறீர்கள் என்றால், அதற்கான பத்திரம் உங்கள் பெயருக்கு வர வேண்டும். அதன் பின் அந்த நிலத்துக்கான பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் உங்கள் பெயருக்கு மாற்றப்பட வேண்டும். இதற்கு அடுத்து அந்த நிலத்தில் மேம்பாட்டு பணிகள் குறித்து நீங்கள் திட்டமிட வேண்டும். இதில் பத்திரம் விற்பனையையும், பட்டா நில உரிமையையும் உறுதி செய்கிறது. நகரமைப்பு சட்ட விதிகள் அந்த நிலத்தில் எத்தகைய மேம்பாட்டு பணிகளை அனுமதிக்கலாம் என்பதை முடிவு செய்கிறது.
இதன்படி தான் வீடு கட்ட உரிய அரசு துறையிடம் அனுமதி பெற வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. நிலத்தின் அளவு, அது அமைந்துள்ள பகுதியின் தன்மை, சாலையின் அகலம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டடங்களின் அளவு வரையறுக்கப்படுகிறது. இந்த வரையறைகளின் அடிப்படையிலேயே புதிய கட்டடங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
உதாரணமாக, 2,400 சதுர அடி நிலத்தை நீங்கள் வைத்துள்ளீர்கள். உங்கள் நிலத்துக்கு இடது, வலது பக்கத்திலும் இதே அளவுக்கு மனையை வேறு சிலர் வைத்துள்ளனர்.இதில் இடப்புறம் இருப்பவர், ஆறு மாடி கட்டடத்தை கட்டுகிறார். இத போன்று வலப்புறம் இருப்பவரும் அனுமதி இன்றி, ஏழு மாடி கட்டடத்தை கட்டிவிடுகிறார்.
இதன் பின், நடுவில் இருக்கும் உங்கள் மனைக்கு நீங்கள் சென்று வருவது கூட சிக்கலாகி விடும். இது போன்ற சிக்கல்கள் எழாமல் இருக்கவே, கட்டட விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளின்படி, 2,400 சதுர அடி நிலத்தில் எவ்வளவு வீடு கட்ட வேண்டும், அதை எவ்வளவு பேர் பயன்படுத்தலாம் ஆகியவை வரையறுக்கப்படுகின்றன.
இதனாலேயே நகர்ப்புற வளர்ச்சியில் சமநிலை ஏற்படுத்தப்படுகிறது. நில உரிமையாளர்கள் இதை புரிந்து சரியான முடிவுகளை எடுக்க வேண்டும்
கட்டுமானம் முடிந்ததும், கட்டடம் கட்டுபவர் நிறைவு சான்றிதழைப் பெறுவது கட்டாயமாகும்.
ஆய்வு செயல்முறைக்குப் பிறகு இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஒரு பில்டர் அல்லது உரிமையாளர் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின்படி கட்டடத்தை கட்டியிருப்பதை இது உறுதி செய்யும். என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.