கான்கிரீட் - அடிப்படையிலான கட்டடங்களில் நீர்க்கசிவு ஏற்படுவது சவாலாக உள்ளது. இதனால், கட்டடத்தின் உறுதி படிப்படியாக கெடும் நிலை ஏற்படுகிறது.
கட்டடங்களில் நீர்க்கசிவு ஏற்பட கூடாது என்பது தான் அனைவரின் விருப்பமாக உள்ளது. ஆனால்,
இதற்கான சரியான வழிமுறைகள் என்ன என்பதில் தான் மக்களிடம் குழப்பம் நிலவுகிறது.
குறிப்பாக, புதிய கட்டடங்கள் கட்டும்போது, அதில் நீர்க்கசிவு ஏற்படாமல் இருக்க உரிய வழிமுறைகளை கடைப் பிடிக்க வேண்டும். இதற்கு கட்டுமான பொறியாளரிடம் உரிய உத்தரவுகளை அளிக்க வேண்டும்.
மேலும், புதிதாக கட்டும் நிலையில் கவனமாக இருந்தாலும், பயன்பாட்டு நிலையில் ஏற்படும் குறைபாடுகள் நீர்க்கசிவுக்கு காரணமாக அமைந்துவிடுகின்றன. முந்தைய காலங்களில் ஒரு கட்டடம் கட்டி முடிந்து பல ஆண்டுகள் ஆன பின் தான் குறைபாடுகள் வரும். ஆனால், தற்போது, புதிய கட்டடம் கட்டப்பட்டதில் இருந்து சில ஆண்டுகளிலேயே அதில் நீர்க்கசிவு போன்ற குறைபாடுகள் தெரியவருகின்றன. குறிப்பாக, மேல் தளம், தண்ணீர் தொட்டி போன்ற இடங்களில் நீர்க்கசிவு ஏற்படுகிறது.
இது போன்ற குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் அது குறித்து வீட்டை கட்டிய பொறியாளரிடம்தான் தீர்வு தேடுவோம். ஆனால், பெரும்பாலான பொறியாளர்கள் கட்டுவதில் மட்டுமே வல்லுனர்களாக உள்ளனர்.
குறைகளை சரி செய்வதற்கு என்று சில நிறுவனங்கள் தற்போது வந்துள்ளன.இது போன்ற வல்லுனர்களை பயன்படுத்தி தான் நீர்க்கசிவுகளை தடுக்க முடியும். இதில் திரவ நிலை பொருட்களை பயன்படுத்தியும், தார் கலவை பயன்படுத்தியும் நீர்க்கசிவு குறைபாடுகள் சரி செய்யப்படுகின்றன.
குறிப்பாக, திரவ நிலை பொருட்களில் பாலியுரித்தேன் கலவை பயன்படுத்துவது வெகுவாக அதிகரித்துள்ளது. எலாஸ்டிக் போன்று விரிவடையும் தன்மை கொண்ட இப்பொருளை பயன்படுத்தினால் கட்டடங்களில் நீர்க்கசிவு பிரச்னை முழுமையாக தீர்க்கலாம்.

இதில், உங்கள் கட்டடத்துக்கு எத்தகைய வழிமுறை சரியாக இருக்கும் என்பதை வல்லுனர் வழிகாட்டுதல்களுடன் அறிந்து அதற்கு ஏற்ப செயல்படுவது நல்லது என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.
No comments:
Post a Comment