Monday, October 28, 2024

Good news for Indians: You may get to travel to Russia visa-free by 2025

 2025ல் விசா தேவையில்லை; இந்தியர்களுக்கு ரஷ்யா புது ஆபர்

ரஷ்ய அரசின் முடிவு காரணமாக 2025ம் ஆண்டில் இந்தியர்கள் விசா இல்லாமலேயே அந்த நாட்டுக்கு பயணிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கல்வி, தொழில், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் ரஷ்யா செல்கின்றனர். 

தங்கள் நாட்டுக்கு அதிக எண்ணிக்கையிலான இந்தியர்களுக்கு சுற்றுலா வருவதை ஊக்குவிக்கும் வகையில், அந்நாட்டு அரசு புதிய முடிவை எடுத்துள்ளது.


 அதாவது, விசா இல்லாமலேயே இந்தியர்கள் ரஷ்யாவுக்கு செல்ல முடியும். அடுத்த ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து மாஸ்கோ நகர சுற்றுலா நிர்வாக குழு தலைவர் எவ்ஜெனி கோஸ்லோவ் கூறியதாவது:

 இந்தியர்களுக்கு விசா இல்லாமல் ரஷ்யா வருவதற்கு அனுமதிக்கும் ஒப்பந்தம் தயாராகி வருகிறது. விரைவில் அது அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். 

இரு நாடுகளுக்கு இடையே நிலவும் நீண்ட கால நல்லுறவு காரணமாக, இந்தியாவை மிக முக்கிய சுற்றுலா சந்தையாக ரஷ்யா கருதுகிறது.
விசா இல்லாமல் ரஷ்யா வர அனுமதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தால் இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். 

Indians can now travel to Russia without a Visa by 2025. India and Russia have planned to ease travel norms by spring of 2025

No comments:

Post a Comment

முறையான மதிப்பீடு இன்றி பழைய வீட்டை வாங்கலாமா?

  சென்னை போன்ற நகரங்களில் புதிதாக குடியேறுவோர் முதல் முதலாக சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர்.  ஆனால், இங...