குடும்ப சொத்துக்களை நிர்வகிக்க அறக்கட்டளை ஏற்படுத்துவதில் கவனிக்க வேண்டியவை!
தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு பெரிய கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளன. இவற்றின்
பின்னணியில் பல கோடி ரூபாய்
மதிப்பிலான அசையா சொத்துக்கள் உள்ளன.
இந்த சொத்துக்களை அந்த நிறுவனங்கள் அறக்கட்டளை வாயிலாக நிர்வகிக்கின்றன. பெரிய அளவிலான நிறுவனங்கள் நடத்துவோர் மட்டுமே அறக்கட்டளை வைத்து இருக்க முடியும் என்பதில்லை.
குறைந்த அளவில் சொத்துக்கள் இருந்தாலும் அதை அறக்கட்டளை ஏற்படுத்தி நிர்வகிக்கலாம். குறிப்பாக,
சொத்துக்களை நிர்வகிப்பதில்
அறக்கட்டளைகள் மிக முக்கிய வழிமுறையாக உள்ளது.
இதற்கான வழிமுறைகளை மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும். பொதுவாக,
குடும்பத்தில் சொத்துக்களை வாரிசுகள் தங்களுக்குள் பல்வேறு பாகங்களாக பிரித்துக் கொள்வதே வழக்கமாக உள்ளது.
இதில் சில
சொத்துக்களை பாகம் பிரிப்பதால் யாருக்கும் பலன் இல்லை என்ற நிலை ஏற்படும் போது, அதை நிர்வகிப்பதில் அறக்கட்டளை ஏற்படுத்துவது சிறந்த வழிமுறையாக இருக்கும்.
மேலும், அந்த சொத்தை சம்பாதித்தவர் நினைவாக சமூக பணி செய்யவும் அறக்கட்டளை சிறந்த வாய்ப்பாக அமையும்.
தந்தை சம்பாதித்த சொத்தை நிர்வகிக்க அறக்கட்டளை ஏற்படுத்துவதாக இருந்தால், அதை எப்போது செய்கிறீர்கள் என்பது முக்கியம். தந்தையின்
சொத்துக்கு வாரிசுகளான மகன்கள் மட்டும் ஒன்று சேர்ந்து அறக்கட்டளை ஏற்படுத்துவது சரியல்ல.
தந்தை உயிரோடு இருக்கும் நிலையில், அவரும் அதற்கு ஒரு உரிமைதாரராக இருப்பார். இத்தகைய
சூழலில் அவரை தவிர்த்து அறக்கட்டளை ஏற்படுத்துவது சட்ட ரீதியாக குழப்பங்களை ஏற்படுத்தும்.
சிலர் தங்கள் காலத்துக்குப் பின் இந்த சொத்துக்கள் இன்னப் பணிக்கான அறக்கட்டளையாக நிர்வகிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு இருப்பார்கள். இதன் அடிப்படையில், அவர் காலத்துக்குப் பின் வாரிசுகள் அறக்கட்டளைகளை ஏற்படுத்துவார்கள். இவ்வாறு துவங்கப்படும் அறக்கட்டளைகளை பெயருக்கு அந்த சொத்துக்களை பெயர் மாற்றம் செய்ய வேண்டும். அறக்கட்டளையை உருவாக்குபவர், நிர்வாகிகளாக யார் யார் இருக்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யலாம்.
சட்ட
விதிகளுக்கு உட்பட்டு அதை முறையாக பதிவு செய்ய வேண்டும். இதில்
பயனாளிகள் யார் என்பதையும் பதிவு நிலையிலேயே தெளிவுபடுத்த வேண்டும்.
மேலும், அறக்கட்டளை பெயருக்கு மாற்றப்பட வேண்டிய சொத்துக்கள், அதை நிதிவகிக்கும் அதிகாரம் தொடர்பான விஷயங்களையும் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள்.
No comments:
Post a Comment