Tuesday, May 9, 2023

அடிப்படை வாஸ்து

 அடிப்படை வாஸ்து

      இந்த உலகம் பஞ்ச பூதங்களால் ஆனதுநம் உடலும் கூட பஞ்ச பூதங்களால் ஆனதுநம் உடலில் பஞ்ச பூதங்களின் சமநிலை தவறும் போது உடல் ஆரோக்கியம் கெடுகின்றதுபஞ்ச பூதங்கள் சம நிலைக்கு வரும் பொழுது உடல் ஆரோக்கியத்தை திரும்பப் பெறுகிறதுஇதே அடிப்படையில்தான் நாம் வசிக்கும் வீடுகளும் நாம் பணி செய்யும் அல்லது வியாபாரம் செய்யும் நிறுவனங்களும் பஞ்சபூத சமநிலையில் இருக்கும்போது மகிழ்ச்சியும் வளர்ச்சியும் ஒருங்கே இருக்கும்இந்த சமநிலை தவறும் போது அதை சரிசெய்து மகிழ்ச்சியையும் வளர்ச்சியையும் மீட்டெடுப்பது குறித்தே வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது.


             அடுக்குமாடி வீடுகள் கட்டுவதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டிய வாஸ்து நெறிமுறைகள்:-

             கட்டிடம் கட்டப் போகும் நிலம் சதுரமாகவோ செவ்வகமாகவோ இருப்பது நல்லது.

             கட்டிடம் கட்டப் போகும் நிலத்திற்கு தெற்கு அல்லது வடக்கு பகுதியிலோ குலம் குட்டை ஏறி போன்ற நீர் நிலைகள் இல்லாமல் இருப்பது நன்று.

             அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தெற்கு மேற்கு, தென்மேற்கு வாசற்படியை தவிர்க்கலாம்  சிலர் ஜாதகத்திற்கு இது சிறப்பாக இருக்கிறது என்றால் அவர்கள் வைத்துக் கொள்ளலாம்.

             அடுக்குமாடி கட்டிடம் மையப் பகுதியில் திறந்த வெளி இருப்பது சிறப்பு சூரிய ஒளி பாய்வதால் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

             அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடத்திற்கு சிகப்பு கருப்பு மற்றும் வெளிர் நீளம் வண்ணத்தில் பெயிண்ட் அடிப்பதை தவிர்க்கலாம்.

              கட்டிடத்தின் வாசற்படி மற்றும் ஜன்னல்களின் மொத்த எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருப்பது நல்லது.

              குடியிருப்பின் பால்கனி கிழக்கு மற்றும் வடக்கு திசையில் அமைந்திருப்பது நல்லது.

              வடகிழக்கு திசையில் மாடிப்படி அமைவதை தவிர்க்கலாம்.


 குபேர வாசல்


             பொதுவாகவே வடக்கு பார்த்த வீடு எல்லோரும் விரும்புகின்ற வீடு.  வடக்கு பார்த்த வாசலும் சிறப்புடையது.  வடக்கை பார்த்த வாசலில் வாசல் வடக்கு பக்கம் நடு பகுதியில் அமைந்து உள்ளதா என்பது மிக முக்கியம்.  இந்த வாசலைத்தான் குபேர வாசல் என்றும் அழைப்பர்.  வடக்கு பார்த்த வாசல் வடகிழக்கில் இருந்தால் அது ஈசானிய மூலை ஓரளவுக்கு பரவாயில்லை.  வடமேற்கு மூலையில் வடக்கு பார்த்த வாசப்படி அமைப்பதை தவிர்க்கலாம்.

             வடக்கு பகுதியில் அமைந்துள்ள வடக்கு வாசல் மிகச் சிறப்பான பலன்களை தரக்கூடியது.  அதில் குறிப்பாக குரு லக்னாதிபதி குரு நட்சத்திர அதிபதி உள்ளவர்கள் குரு திசை நடக்கும்போது சிறப்பான 

பலனை பெறுவார்கள்.  குரு உச்சத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கு  ஜாதகத்தில் மற்ற விதங்களில் குரு பலமாக இருந்து பலன் கொடுத்து வருபவர்களுக்கும் இந்த வடக்கு வாசல் நிஜமாகவே குபேரவாசல் தான்.         



No comments:

Post a Comment

Electric vehicle charging stations: An added benefit or a necessity?

  Electric vehicle charging stations: An added benefit or a necessity? With an increased demand for electric vehicles ( EV s ) , the demand ...