Saturday, July 24, 2021

அடுக்குமாடி திட்டத்தில் வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டியது

   நம்மில் பெரும்பாலானோர் அடுக்குமாடி திட்டத்தில் வீடு வாங்க ஆர்வம் காட்டுகிறோம் . நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அடுக்குமாடி வீடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது . இதில் நாம் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றோம். 

நாம் வீடு வாங்கும்போது சில அடிப்படை விஷயங்களை  பார்க்க வேண்டும். 


 கட்டுமான நிலையில் உள்ள வீட்டை வாங்குகிறோமா?

 கட்டி முடிக்கப்பட்ட வீட்டை வாங்குகிறோமா? 

மேலே உள்ளவற்றில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்.

கட்டுமான நிலையில் உள்ள வீட்டை வாங்கும்போது யூ.டி.எஸ்., எனப்படும் நிலத்தின் பிரிபடாத பாகம் உங்கள் பெயருக்கு பத்திரப்பதிவு செய்யவேண்டும், பிறகு கட்டுமான பணிக்கான ஒப்பந்தம் தனியாக போடவேண்டும்.

அடுக்குமாடிக் குடியிருப்பு அமைந்துள்ள மனையின் உரிமை அங்கு உள்ள விட்டு உரிமையாளர்கள்  அனைவருக்கும் உண்டு. அதை பிரித்து அளக்க கூடிய அளவு தான் UDS.

கட்டுநர் சொல்லும் அளவை நாமும் ஒரு முறை பரிசோதித்து பார்க்கவேண்டும்.  கவனக்குறைவாக இருக்க கூடாது.

திட்ட அனுமதி வரைபடம் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். 

அந்த குடியிருப்பு சம்பந்தப்பட்ட எல்லா ஆவணங்களின் அசல் பத்திரங்கள் 

விற்பவரிடம் இருக்கிறதா எனப் பார்க்கவேண்டும். சிலர் அந்த பத்திரத்தை 

வங்கியில் அடமானம் வைத்து கடன் வங்கியிருப்பர். அதை கண்ணால் பார்த்தபிறகு முடிவு எடுக்க வேண்டும்.

அனைத்து ஆவணங்களையும் ஒரு நகல் பிரதியை வாங்கி   வைத்து கொள்வது அவசியம். அப்போது தான் வீட்டில் குடியேறியபின் கட்டட வரைபடம் சம்பந்தப்பட்ட பிரச்னை எழுந்தால் சரி செய்ய முடியும்.

நன்றி : தினமலர் கனவு இல்லம்


No comments:

Post a Comment

Bigger the house, bigger the responsibilities

  Here is a look at the aftermath of upgrading to a larger space Regardless of the size of the current home, many homeowners often nurture t...