தமிழ் நாட்டின் தலை நகராமான சென்னை இந்தியாவிலுள்ள நாலாவது பெரிய பெரு நகரமாகும். சென்னைப் பெருநகர்ப் பகுதி, சென்னை மாநராட்சி, 16 நகராட்சிகள், 20 பேரூராட்சிகள் மற்றும் 214 பகுதியின் பரப்பளவு 1189 சதுர கிலோ மீட்டராகும். சென்னையின் பூகோள அமைப்பு படத்தில் தரப்பட்டுள்ளது.
சென்னைப் பெருநகரப் பகுதி தமிழ்நாடு மாநிலத்தின் 3 மாவட்டங்களில் அமைந்துள்ளது. அதாவது சென்னை மாவட்டம், திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு பகுதி மற்றும் காஞ்சிபுர மாவட்டத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கியது.
சென்னை மாவட்டம் கோட்டை - தண்டையார்பேட்டை வட்டம், பெரம்பூர் - புரசவாக்கம் வட்டம், எழும்பூர் - நுங்கம்பாக்கம் வட்டம், மாம்பலம் - கிண்டி வட்டம் மற்றும் மைலாப்பூர் - திருவல்லிக்கேணி வட்டம், ஆகிய 5 வட்டங்களிலுள்ள 55 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய 176 கிலோ மீட்டர் பரப்பளவினை கொண்டது. திருவள்ளூர் மாவட்டத்தின் மொத்த பரப்பளவான 3427 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அம்பத்தூர், திருவள்ளூர், பொன்னேரி, மற்றும் பூந்தமல்லி ஆகிய வட்டங்களில் 637 சதுர கிலோ மிட்டர் சென்னைப் பெருநகரில் வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தின் மொத்த பரப்பளவான 4433 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய வட்டங்களில் 376 சதுர கிலோ மீட்டர் பரப்பு சென்னைப் பெருநகரில் வருகிறது.
No comments:
Post a Comment