Tuesday, June 1, 2021

பொது சேவையைப் பாராட்டி திருக்குறள் பீடம் " மன்பதைச் செம்மல் "விருது 27-02-2010

புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே 
ஒப்புரவின் நல்ல பிற    ( குறள் 213 )                     என்ற குறளின் கருத்துப்படி  

பொது சேவையைப் பாராட்டி திருக்குறள் பீடம் வழங்கிய
" மன்பதைச் செம்மல் "விருது 

Sivathiru. Adigalar Avargal Thrikural Peedam

With My Social Work Guru - Social Activist Mrs.E.R.Amirtha Rajagopal


My Self 
மு.வரதராசனார் உரை:


பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.

பரிமேலழகர் உரை:

புத்தேள் உலகத்தும் ஈண்டும் – தேவர் உலகத்தும் இவ்வுலகத்தும், ஒப்புரவின் நல்ல பிற பெறல் அரிது – ஒப்புரவுபோல நல்லன பிற செயல்களைப் பெறுதல் அரிது. ( ஈவாரும் ஏற்பாரும் இன்றி எல்லோரும் ஒரு தன்மையராகலின் புத்தேள் உலகத்து அரிதாயிற்று, யாவர்க்கும் ஒப்பது இது போல் பிறிதொன்று இன்மையின், இவ்வுலகத்து அரிதாயிற்று. ‘பெறற்கரிது’ என்று பாடம் ஓதி, ‘பெறுதற்குக் காரணம் அரிது’ என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் ஒப்புரவினது சிறப்புக் கூறப்பட்டது ).

உரை:

பிறர்க்கு உதவிடும் பண்பாகிய ஒப்புரவு என்பதைவிடச் சிறந்த பண்பினை இன்றைய உலகிலும், இனிவரும் புதிய உலகிலும் காண்பது அரிது.




No comments:

Post a Comment

மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு

  மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு 'சென்னை பெருநகர் பகுதிக்கான மூன்றாவது முழுமை திட்டத்துக்காக, 28 தலைப்ப...