Saturday, April 12, 2025

கான்கிரீட் கட்டுமானங்களுக்கு ரெடிமேட் கம்பிகளை வாங்குவதில் கவனிக்க

 கான்கிரீட் கட்டுமானங்களுக்கு ரெடிமேட் கம்பிகளை வாங்குவதில் கவனிக்க
இன்றைய சூழலில் பெரும்பாலான கட்டடங்கள் கான்கிரீட்டை அடிப்படையாக வைத்து தான் கட்டப்படுகின்றன.  தூண்கள், பீம்கள், மேல் தளம் போன்ற  இடங்களில் கான்கிரீட் கட்டுமானங்களுக்கு அடிப்படை ஆதாரமாக கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன.

நீங்கள் வாங்கும் கான்கிரீட் எவ்வளவு தரமானதாக இருந்தாலும், அதில் உள்ளீடாக உள்ள கம்பிகளில் தரம் குறைந்தால் ஒட்டுமொத்த அமைப்பும் சிதைந்துவிட வாய்ப்பு உள்ளது.  எனவே, கட்டுமான பணிக்கு கான்கிரீட் போன்று கம்பிகள் விஷயத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இதில் பொதுவாக கட்டுமான பணிகளை ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கும் மக்கள் கம்பி வாங்கும் பொறுப்பை ஏற்பதில்லை.  கட்டுமான பணியை ஏற்றுள்ள நிறுவனம் அல்லது ஒப்பந்ததாரர் தான் எந்த பணிக்கு எத்தகைய கம்பிகளை வாங்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்.


இந்த விஷயத்தில் முன்பு டி.எம்.டி., கம்பிகளை ராடுகளாக வாங்கி, அதை பல்வேறு பாகங்களாக வெட்டி, கான்கிரீட் கட்டுமானங்களுக்கு ஏற்ற வடிவத்தில் உள்ளீடாக வைப்பார்கள்.  இந்த முறையில் வாங்கப்படும் கம்பிகளில் பெருமளவு வீணாவதும் தெரியவருகிறது.


இந்த சூழலில், சில நிறுவனங்கள் உங்களுக்கு தேவையான அளவுகளில் கம்பி கூடுகளை தயாரித்து வழங்குகின்றன.  கட்டடத்தில் தூண்கள், பீம்கள், தளம் ஆகிய இடங்களில் எங்கு என்ன அளவில், என்ன வடிவத்தில் வேண்டுமோ அதற்கு ஏற்றபடி கம்பிகள் வெட்டப்பட்டு அனுப்பப்படும்.

வீடு கட்டுவதற்கு நீங்கள் வாங்கிய நிலம் நெருக்கடியான பகுதியில் அமைந்து இருந்தால், அங்கு பெரிய அளவில் கம்பிகளை வாங்கி சாலையில் போட்டு, தேவையான அளவுக்கு வெட்டி கூடுகளை உருவாக்க முடியாது.  இதனால் தனியார் நிறுவனங்களின் ரெடிமேட் கம்பி கூடுகளை வாங்கி பயன்படுத்துவது நல்லதாக படுகிறது.

இதில், உங்கள் வீட்டுக்கான கட்டுமான பணியில் எந்த இடத்தில், எத்தகைய கம்பிகளை பயன்படுத்த வேண்டும் என்று கட்டட அமைப்பியல் பொறியாளர் பரிந்துரைத்து இருப்பார்.  இதன் அடிப்படையில் ஒவ்வொரு நிலைக்கும் உரிய அளவுகளில், உரிய தரத்திலான கம்பிகளை வாங்கி பயன்படுத்த வேண்டும்.

உங்கள் வீட்டு கட்டுமான பணியில் ‘பார் பென்டிங் ஷெட்யூல்’ என்ற தலைப்பில் கட்டடமைப்பியல் பொறியாளர் அளிக்கும் அறிக்கையை கம்பி தயாரிப்பு நிறுவனத்துக்கு தெரிவிக்க வேண்டும்.  இதன் அடிப்படையில் அவர்கள் எப்போது கம்பி தேவை என்பதை புரிந்து செயல்படுவர்.


உங்களுக்கு என்ன மாதிரியான வகையில் கம்பி கூடுகள் தேவைப்படும் என்பதை பார்த்து அதற்கு ஏற்ற வகையில், தரமான கம்பிகளை வாங்க வேண்டும்.  ஒப்பந்ததாரர் பார்த்துக்கொள்வார் என்று இதற்கான பணிகளில் அலட்சியம் காட்ட கூடாது என்கின்றனர் கட்டட அமைப்பியல் பொறியாளர்கள். 


கான்கிரீட் கட்டுமானங்களுக்கு ரெடிமேட் கம்பிகளை வாங்குவதில் கவனிக்க

  கான்கிரீட் கட்டுமானங்களுக்கு ரெடிமேட் கம்பிகளை வாங்குவதில் கவனிக்க இன்றைய சூழலில் பெரும்பாலான கட்டடங்கள் கான்கிரீட்டை அடிப்படையாக வைத்து த...